நிதிசார் மற்றும் மூலதன சந்தைகளில் மேலும் அதிகமாக நுழையவும், உண்மையான மதிப்பை பெறவும், சந்தை சார் ஒழுங்கை நிலைநாட்டவும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல் ஐ சி) உள்ள தனது பங்கில் ஒரு பகுதியை துவக்கநிலை பொது விற்பனை மூலம் விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. நாட்டின் பழமையான மற்றும் மிகப்பெரிய ஒரு காப்பீட்டுக் குழுமமான எல்.ஐ.சியின் துவக்கநிலை பொது விற்பனை (ஐபிஓ) இந்தியாவின் மூலதன சந்தைகளில் மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துவக்கநிலை பொது விற்பனைக்கு வழிவகுக்கும் ஆயத்த செயல்முறைகளில் அரசுக்கு உதவுவதற்கான ஆலோசனை நிறுவனங்கள், முதலீட்டு ஆலோசகர்கள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பங்கு பரிமாற்றத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர்களிடம் இருந்து ஏலங்களை நிதி அமைச்சகம் கடந்த வாரம் அழைத்தது.
காப்பீட்டு சந்தையில் எல்.ஐ.சியின் நிலை என்ன?
எல் ஐ சி நிறுவனத்தில் உள்ள தனது பங்கில் 5-10 சதவீதத்தை ஐபிஓ மூலம் விற்க அரசாங்கம் முடிவு செய்தாலும்,1956 இல் அமைக்கப்பட்ட எல்.ஐ.சியின் பங்கு விற்பனை மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2018-19 ஆம் ஆண்டில் எல்.ஐ.சி நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள், எப்போதும் இல்லாத அளவுக்கு 31.11 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டன. முந்தைய ஆண்டைவிட 9.4 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. 2018-19 ஆம் ஆண்டில் பங்கு முதலீட்டின் மூலம் ரூ .23,621 கோடி லாபத்தை எல்.ஐ.சி உணர்ந்தது. இது முந்தைய ஆண்டை விட 7.89 சதவீதம் (ரூ .25,646 கோடி)குறைவானதாகும்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
எல்.ஐ.சி நிறுவனத்தின் 2018-19 வருடாந்திர அறிக்கையின்படி, முதல் ஆண்டு பிரீமியத்தில் 66.24% சந்தைப் பங்களிப்பையும் கொண்டுள்ளது, புதிய பாலிசி எண்ணிகையில் 74.71% பங்களிப்பையும் கொண்டிருப்பதாக தெரிவித்தது.
ஒட்டுமொத்த பொதுத்துறை பங்குகள் விற்பனை கொள்கையில் எல்.ஐ.சி எவ்வாறு பொருந்துகிறது?
2020-21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்," தனியார் மூலதனத்தை வெளிக்கொண்டு வருவதற்காக ஐடிபிஐ வங்கியில் உள்ள இந்திய அரசின் மீதமுள்ள பங்குகளை பங்குச் சந்தை மூலம் தனியார், சில்லறை மற்றும் நிறுவன ரீதியான முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்படும்" என்று தெரிவித்தார். ஐடிபிஐ மற்றும் எல்.ஐ.சி போன்ற பொதுத்துறைகளில் அரசின் பங்குகளை விற்பதன் மூலம் 90,000 கோடி திரட்ட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மற்ற பங்கு விற்பனை நடவட்டிகையின் மூலம் ரூ .1.2 லட்சம் கோடியும் திரட்ட அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி பெரும்பான்மை பங்குதாரராக உள்ளது. பொது காப்பீட்டுக் கழகம் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் பங்குகளை ஐபிஓக்கள் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் பட்டியலிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
துவக்கநிலை பொது விற்பனை (ஐபிஓ)மூலம் என்ன நன்மைகளை எதிர்பார்க்கலாம்?
எல்.ஐ.சி நிறுவனத்தில் துவக்கநிலை பொது விற்பனை நிச்சயமாக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும். ஏனெனில் நிதி எண்கள் மற்றும் சந்தை தொடர்பான பிற முன்னேற்றங்களை சரியான நேரத்தில் பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும். எல்.ஐ.சி நிறுவனம் எழுத்துறுதி வழங்கல் மற்றும் முதலீடுகளில் லாபத்தையும் ஈட்டுவதால் முதலீட்டாளர்கள் பயனடையலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil