எதிர்கால விண்வெளி பயணத்திற்கான புதுப்பிக்கத்தக்க கட்டிடப் பொருளாக மரத்தின் நம்பகத்தன்மையை சோதிப்பதற்காக, உலகின் முதல் மரத்தால் செய்யப்பட்ட செயற்கைக் கோள் நவம்பர் 5 அன்று விண்ணில் ஏவப்பட்டது.
லிக்னோசாட் என பெயரிடப்பட்ட சிறிய ஜப்பானிய விண்கலம், கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் ஹோம்பில்டர் சுமிடோமோ ஃபாரெஸ்ட்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கேப்சூல் மூலம் நவம்பர் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பபட்டது.
ஒரு மாதத்திற்குப் பிறகு, அது பூமிக்கு மேலே உள்ள சுற்றுப்பாதையில் விடப்படும், அங்கு அது ஆறு மாதங்கள் சுற்றுப்பாதையில் இருந்து தன்மையை சோதிக்கும்.
லிக்னோசாட் (LignoSat) என்றால் என்ன?
லிக்னோசாட் ஒவ்வொரு பக்கத்திலும் வெறும் 4 அங்குலங்கள் (10 சென்டிமீட்டர்) அளவையும், 900 கிராம் எடையும் கொண்டது.
மரத்திற்கான லத்தீன் வார்த்தையின் பெயரால் இந்த செயற்கைக்கோள் பெயரிடப்பட்டது, ஒரு வகை மாக்னோலியா மரத்திலிருந்து கட்டப்பட்ட பேனல்கள், பாரம்பரிய ஜப்பானிய கைவினை நுட்பத்தை பயன்படுத்தி ஸ்குரூ அல்லது பசை இல்லாமல் ஒன்றாகப் செய்யப்படுவதாகும்.
சூரிய ஒளி மற்றும் இருளில் விண்கலன் பயணித்தாலும், ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் வெப்பநிலை -100 முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் விண்வெளியின் தீவிர சூழலில் மரத்தின் நீடித்த தன்மையை செயற்கைக்கோள் சோதிக்கும்.
மர செயற்கைக்கோள்- முதல் சோதனை
கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி ஆய்வில் பயன்படுத்தப்படும் சில உலோகங்களுக்கு பதிலாக எதிர்காலத்தில் மரம் பயன்படுத்தக்கூடும் என்று கூறினர்.
மரத்தின் பயன்பாடு முற்றிலும் புதியது அல்ல. கியோட்டோ பல்கலைக்கழக வன அறிவியல் பேராசிரியர் கோஜி முராடா ராய்ட்டர்ஸிடம் கூறினார், “1900 களின் முற்பகுதியில் விமானங்கள் மரத்தால் செய்யப்பட்டன. ஒரு மர செயற்கைக்கோளும் சாத்தியமானதாக இருக்க வேண்டும் என்றார்.
"மரம் பூமியை விட விண்வெளியில் நீடித்து இருக்க கூடிய தன்மை கொண்டது, ஏனென்றால் அங்கு மரம் அழுகி போவதற்கு, எரிவதற்கு நீர் அல்லது ஆக்ஸிஜன் இல்லை, ," என்று முராட்டா மேலும் கூறினார்.
நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு
முதன்மையாக அலுமினியத்தால் செய்யப்பட்ட வழக்கமான செயற்கைக்கோள்கள், தங்கள் வாழ்நாளின் முடிவில் பூமியின் வளிமண்டலத்தில் எரிந்து அலுமினிய ஆக்சைடுகளை உருவாக்குகின்றன. இந்த வாயுக்கள் கிரகத்தின் பாதுகாப்பு ஓசோன் படலத்தை சேதப்படுத்தும்.
தற்போது 6,500 செயலில் உள்ள செயற்கைக்கோள்களைக் கொண்ட ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் நெட்வொர்க் போன்ற செயற்கை மெகா-விண்மீன்கள் உட்பட, வளர்ந்து வரும் சுற்றுப்பாதை மக்கள்தொகை பற்றிய கவலைகளை இதனுடன் சேர்க்கவும்.
இங்குதான் லிக்னோசாட் ஒரு நன்மையைக் கொண்டிருக்கிறது. அலுமினியத்திற்கு மாக்னோலியாவை மாற்றுவதன் மூலம், செயற்கைக்கோள் பூமியில் மீண்டும் விழும்போது வளிமண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் மாசுபாடுகள் ஏற்படாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“