எலான் மஸ்க்கின் ட்வீட்டிற்குப் பிறகு, காம்காஸ்டின் என்.பி.சி யுனிவர்சலின் சிறந்த விளம்பர விற்பனை நிர்வாகியான லிண்டா யாக்கரினோவின் பெயர் சுற்றுகளில் வரத் தொடங்கியுள்ளது. தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளமான ட்விட்டருக்கு அடுத்த சில வாரங்களில் புதிய தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ) வருவார் என்று ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
“எக்ஸ்/சி.இ.ஓ ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் தனது பணியைத் தொடங்குவார்” என்று எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை (மே 12) பதிவிட்ட புதிய ட்வீட்டில் கூறினார். ஆனால், அவர் மற்ற விவரங்களை அளிக்கவில்லை. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள 'எக்ஸ்' மஸ்க் என்பது சூப்பர் ஆப்-ஐக் குறிக்கிறது - அதாவது ஷாப்பிங், வங்கி, ரைட்-ஹெய்லிங் போன்ற பல்வேறு சேவைகளைக் கொண்ட ஒற்றை பயன்பாடு - அவர் அடிக்கடி பேசியது.
காம்காஸ்டின் என்.பி.சி யுனிவெர்சலின் சிறந்த விளம்பர விற்பனை நிர்வாகியான லிண்டா யாக்கரினோவின் பெயர், இந்த ட்வீட்டிற்குப் பிறகு, பரபரப்பாக பேசப்பட்டது. இது தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் சமீபத்திய அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லிண்டா யாக்கரினோ யார்?
யாக்கரினோ என்.பி.சி. யுனிவெர்சலின் (NBCUniversal) தலைவராக உள்ளார். இது அமெரிக்க வெகுஜன ஊடகம் மற்றும் ஒளிபரப்பு நிறுவனமாகும், அதன் சொத்துக்களில் ட்ரீம் வொர்க்ஸ் அனிமேஷன் நிறுவனம், செய்தி சேனல் எம்.எஸ்.என்.பி.சி (MSNBC) பொழுதுபோக்கு சேனல் E மற்றும் பிற சொத்துக்கள் உள்ளன. அவர் 2011 முதல் இந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்.
அவரது லிங்டுஇன் (LinkedIn) பக்கம் கூறுகிறது, “எந்த ஒரு நிகழ்ச்சியின் பின்னாலும், எந்த திரையிலும், ஒரு முழு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வேலை செய்கிறது. அதை வடிவமைப்பதில் லிண்டா யாக்கரினோவை விட வேறு யாரும் பெரிய கை இல்லை. ஒவ்வொரு நாளும், யாக்கரினோ $70 பில்லியன் அமெரிக்க டாலர் பிரீமியம் வீடியோ சூழ்நிலை அமைப்பையே மாற்றுகிறது. இது அவரது உத்தி மற்றும் செயல்பாட்டு பாத்திரங்கள் மற்றும் நிறுவனத்தின் நெட்வொர்க்குகள், டிஜிட்டல் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்கள், விநியோகம் மற்றும் வர்த்தக கூட்டாண்மை மற்றும் கிளையன்ட் உறவுகளின் போர்ட்ஃபோலியோவை வழிநடத்துதல் மற்றும் பணமாக்குவதற்கான அவரது வேலை விவரங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
“2011-ல் என்.பி.சி. யுனிவெர்சலின் இணைந்ததில் இருந்து, அவரது குழு $100 பில்லியன் டாலருக்கும் அதிகமான விளம்பர விற்பனையை ஈட்டியது. உலக அளவில் அந்நிறுவனத்தின் வரம்பை விரிவுபடுத்தியது. புதுமையான வணிக கூட்டாண்மைகளை உருவாக்கியது. நிறுவனத்தின் விளம்பர ஆதரவு ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கியது. தரவு மற்றும் தொழில்நுட்ப திறன்களில் பெரிய அளவில் முதலீடுகளை செய்துள்ளது” என்று மேலும் குறிப்பிட்டுள்ளது.
யக்கரினோ, உலகப் பொருளாதார மன்றத்தின் பணியின் எதிர்காலம் குறித்த பணிக் குழுவின் தலைவர் மற்றும் டபிள்யு.இ.எஃப் (WEF) ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரத் தொழில்துறை ஆளுநர்கள் வழிகாட்டுதல் குழுவில் அமர்ந்துள்ளார். அவரது மற்ற பாத்திரங்களில், “200 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களை சென்றடைந்த போப் பிரான்சிஸ் இடம்பெறும் தடுப்பூசி பிரச்சாரத்தை உருவாக்க வணிக சமூகம், வெள்ளை மாளிகை மற்றும் அரசாங்க நிறுவனங்களின் ஆதரவை அவர் திரட்டினார்” என்று அவருடைய சுயவிவரம் கூறுகிறது.
என்.பி.சி. யுனிவெர்சலில் சேருவதற்கு முன்பு, அவர் டர்னரில் (முன்னர் டர்னர் பிராட்காஸ்டிங் சிஸ்டம், நிறுவனம்) சந்தைப்படுத்தல் மற்றும் கையகப்படுத்துதல்களின் நிர்வாக துணைத் தலைவர்/சி.ஓ.ஓ விளம்பர விற்பனையாக இருந்தார். அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
கடந்த மாதம், அவர் ஒரு விளம்பர மாநாட்டில் எலான் மஸ்க்கை நேர்காணல் செய்தார். எலான் மஸ்க்கை கரவொலியுடன் வரவேற்க பார்வையாளர்களை ஊக்குவித்தார். அவரது பணி நெறிமுறைகளைப் பாராட்டினார். “இந்த அறையில் உள்ள உங்களில் பலருக்கு என்னைத் தெரியும், மேலும், எனது பணி நெறிமுறையில் நான் பெருமைப்படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறினார். மேலும், அவர், “நண்பா, நான் எனது பொருத்தமான நபரை சந்தித்தேன்.” என்று கூறினார்.
மற்ற சில போட்டியாளர்கள் யார்?
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, வியாழக்கிழமை ட்விட்டர் ஊழியர்களுக்கு இடையேயான உரையாடல்களில் முன்னாள் யாஹூ தலைமை நிர்வாக அதிகாரி மரிசா மேயர் பரிந்துரைக்கப்பட்டதாக ஒரு ஊழியர் தெரிவித்தார். கடந்த ஆண்டு தான் பதவி விலகுவதாக அறிவித்த யூடியூப் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி மற்றும் எலான் மஸ்க்கின் பிரைன்-சிப் ஸ்டார்ட்அப் நியூராலிங்கின் உயர் அதிகாரி ஷிவோன் ஜிலிஸ் ஆகியோரும் இந்த பதவிக்கு விவாதிக்கப்பட்ட பெயர்களில் அடங்குவர்.
CI ரூஸ்வெல்ட்டின் மூத்த நிர்வாக மேலாளர் ஜேசன் பெனோவிட்ஸின் கருத்துப்படி, எலான் மஸ்கின் பிற நிறுவனங்களில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் க்வின் ஷாட்வெல் மற்றும் டெஸ்லா இன்க் சேர் ராபின் டென்ஹோல்ம் போன்ற உயர்மட்ட பெண் நிர்வாகிகள் யாரேனும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஏன் மாற்றப்படுகிறார்?
டெஸ்லா பங்குகள் வியாழக்கிழமை 2.1% உயர்வுடன் முடிந்தது. இந்த மாற்றத்தின் மீது பங்குதாரர்களிடையே ஒரு வகையான நிவாரணத்தை பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு எலான் மஸ்க் $44 பில்லியனை இந்த தளத்தை வாங்கியதில் இருந்து, செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கான மக்களை பணிநீக்கம் செய்வது போன்ற முக்கிய மாற்றங்களை சி.இ.ஓ-வாக அவர் மேற்பார்வையிட்டார்.
டிசம்பரில், அவர் நடத்திய ட்விட்டர் வாக்கெடுப்பில், 57.5% பயனர்கள் அவர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதற்கு வாக்களித்தனர். இது அவர் யோசனைகளை விவாதித்த வேகத்தால் தூண்டப்பட்டிருக்கலாம் - சில சமயங்களில் ட்விட்டரில் கூட - வாக்கெடுப்புகள் போன்ற அம்சங்களின் அடிப்படையில் அவற்றை செயல்படுத்தியது. இதில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தடை செய்யப்பட்ட கணக்கை மீண்டும் கொண்டு வருவதும் அடங்கும். “இந்த வேலையை ஏற்கும் அளவுக்கு முட்டாள்தனமாக யாரையாவது கண்டால் நான் விரைவில் சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்வேன்!” பெரும்பாலான பங்கேற்பாளர்கள் அவர் ராஜினாமா செய்ய விரும்புவதாக கருத்துக் கணிப்புக்குப் பிறகு எலான் மஸ்க் கூறியிருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.