பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி அரசுக்கு வரி செலுத்தும் அனைவரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு இணைக்க தவறினால் ஏப்ரல் 1 முதல் பான் கார்டு செயலற்றதாகி விடும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) நிறுவனமும் கடந்த புதன்கிழமை தனது முதலீட்டாளர்களை இந்த மாத இறுதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இதை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
- பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதன் காரணம் என்ன?
ஒரு நபருக்கு பல்வேறு பான் எண்கள் ஒதுக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒரே பான் எண்கள் ஒதுக்கப்பட்ட நிகழ்வுகள் எனப் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து
பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித்துறை அறிவித்தது.
இந்த குளறுபடிகளை போக்கும் பொருட்டு பான்- ஆதார் இணைக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2. யாரெல்லாம் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும்?
மத்திய நேரடி வரிகள் வாரியம் மார்ச் 2022-ல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, ஜூலை 1, 2017 அன்று முதல் பான் கார்டு பெற்ற அனைவரும் ஆதார்- பான் எண் இணைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது,
மார்ச் 31, 2023-க்கும் இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பான்- ஆதார் யார் இணைக்க தேவையில்லை?
80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் இணைக்க தேவையில்லை
வருமான வரிச் சட்டத்திற்கு உட்படாதவர்கள்
இந்தியக் குடிமகனாக இல்லாதவர்கள்
4. பான்- ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?
பான்- ஆதார் இணைக்கவில்லை என்றால் ஏப்ரல் 1 முதல் பான் கார்டு செயலற்றதாகி விடும். மேலும் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாது.
- வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முகுடியாது.
- நிலுவையில் உள்ள வருமான வரிக் கணக்கும் திரும்ப பெற முடியாது.
- நிலுவையில் உள்ள பணம் திரும்ப பெற முடியாது.
- Defective returns செயல்பாடுகள் தொடர முடியாது.
- பான் எண் செயலிழந்து விட்டால் அதிக விகிதத்தில் வரி செலுத்தப் பட வேண்டும்.
இந்த விளைவுகளைத் தவிர, வங்கிகள் போன்ற பிற நிதி பரிவர்த்தனைகளைச் செய்வதில் சிரமங்களை மேற்கொள்ளலாம். ஏனெனில் இந்த பரிவர்த்தனைகளுக்கு பான் ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது.
5. செபி ஏன் கட்டாயமாக்கியுள்ளது?
securities market-இல் (பத்திர சந்தை) அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் முக்கிய அடையாள அட்டை ஆகும். KYC தேவைகளின் ஒரு பகுதியாக இருப்பதால் KYC-ஐ உறுதி செய்ய அனைத்து முதலீட்டாளர்களையும் ஆதார்- பான் எண் இணைக்க அறிவுறுத்தியுள்ளது.
6. ஆதாருடன் பான் எண்ணை எப்படி இணைப்பது?
வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.incometax.gov.in என்ற பக்கத்திற்கு செல்லவும். அங்கு 'Link Aadhaar' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து இணைக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/