Dr Pradip Awate
கொரோனா தொற்று இரண்டாம் அலை தற்போது உருவாகியுள்ளதா?
Coronavirus lockdown : எங்களின் நீண்ட நாள் அவதானிப்பில் இருந்து, இது நிச்சயமாக இரண்டாம் அலை போன்று தான் தோன்றுகிறது. அது தவறான விளக்கம் அல்ல. புதிய நோய்தொற்றின் அளவு மற்றும் வேகம் உண்மையில் முதல் அலையுடன் ஒப்பிடத்தக்கது. முந்தைய கொரோனா அலையின் போது இருந்த உச்சத்தைப் போன்று தற்போதும் நோய் தொற்று ஏற்படுமா? உதாரணமாக மகாராஷ்ட்ராவில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரே நாளில் 25 ஆயிரம் நபர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதே சூழலை தற்போது ஒப்பீட்டு பார்த்தால் நாள் ஒன்றுக்கு தற்போது 16 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. தற்போதைய நிலையை கவனித்தால் 20 ஆயிரம் பேருக்கு ஒரு நாள் தொற்று என்ற உச்ச நிலையை அது அடையும். நோய் தொற்றினை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், அடுத்த சில நாட்களிலேயே இது உச்சம் அடையும்.
முந்தைய அலையில் இருந்து இது எப்படி வேறுபட்டுள்ளது?
தற்போது நோய் தொற்றினை உருவாக்கும் கொரோனா வைரஸ் முந்தைய வைரஸைக் காட்டிலும் கடுமையற்றதாக இருக்கும். நோய் தொற்று அதிகரித்து வருகின்ற போதிலும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. கடைசி ஒரு மாதத்தில் மகாராஷ்ட்ராவில் இறப்பு விகிதம் வெறும் 1%க்கும் குறைவாகவே உள்ளது. இது நம்பிக்கை தரும் அறிகுறியாகவே உள்ளது. நோய்தொற்று அதிகரித்துவந்தாலும் கூட இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது. தற்போது நாங்கள் வாரத்திற்கு ஒரு முறை இறப்பு விகிதத்தை கண்காணித்து வருகின்றோம். மகாராஷ்ட்ராவின் மூன்று முதல் நான்கு மாவட்டங்களை தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.
மகாராஷ்ட்ராவின் கொரோனா கட்டுப்பாட்டு யுக்தியில் இருக்கும் தவறு என்ன?
அதில் தவறு ஒன்றும் இல்லை. பல்வேறு காரணிகள் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று விகிதமும் மாறுபடுகிறது. புவியியல், சுற்றுச்சூழல், சர்வதேச இணைப்பு ஆகியவையும் சில காரணங்களாகும். ஒரு நாடு ஏன் இந்த முறையை தேர்வு செய்தது என்று கணிப்பது சாத்தியம் இல்லாதது. ஆனால் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் நிறைய உள்ளன. ஆனால் அவை அனைத்தும் எளிதில் தீர்மானிக்கப்படக் கூடியவை அல்ல.

ஊரடங்கு நோய் தொற்றினை குறைக்க உதவுமா?
இந்த சமயத்தில் கொரோனா வைரஸ் பரவலை குறைக்க ஊரடங்கு உத்தரவு சரியான யுக்தியாக இருக்கும் என்று நான் பார்க்கவில்லை. ஊரடங்கு அனைத்தையும் இடைநிறுத்தும் ஒன்றாகும். நெருக்கடியை சமாளிக்க, நம்மை தயார்படுத்திக் கொள்ள, நோய் தொற்றின் ஆரம்ப காலத்தில் இது தேவையான ஒன்றாக இருந்தது. நம்முடைய சுகாதார உள்கட்டமைப்பு, மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரித்தல், ஆய்வகங்களை இணைக்கும் அமைப்பு, ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றை அதிகரிக்க நமக்கு தேவையான நேரத்தை வழங்கியது. தற்போது அனைத்தும் நம்மிடம் இருக்கிறது. ஊரடங்கு கொரோனா பரவலை குறைக்க நமக்கு உதவும் மிக சிறிய காரணியே ஆகும். ஊரடங்கால் ஏற்படும் சமூக பொருளாதார பக்கவிளைவுகள் நிறைய உள்ளன. அது கொரோனா வைரஸைக் காட்டிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்த நேரத்தில் மிகவும் பயனுள்ள உத்தி என்றால் அது வலுப்படுத்தப்பட்ட கண்காணிப்பு தான். தொடர்புகளை தடம் அறிதல், கொரோனா அறிகுறிகளை கண்காணித்தல், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் அனைத்து வழிமுறைகளையும் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்தல் போன்றவை இதில் அடங்கும்.
தடுப்பூசியின் பங்கு குறித்து உங்களின் கருத்து என்ன?
தடுப்பூசி இங்கே நிச்சயமாக மிக முக்கியமான பங்களிப்பை கொண்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட செரோசர்வே முடிவுகள், பல இடங்களில் 20 முதல் 25% மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று கூறினார்கள். எனவே பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் தான் நோய் எதிர்ப்பு திறனை அடைந்திருப்பார்கள். தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியின் விகிதத்தை விரைவில் அதிகரிக்கும். இதன் மூலமாக ”Herd Immunity” தன்னுடைய பங்கினை செயல்படுத்த துவங்கும்.
ஆனால் ஏன் தடுப்பூசி குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே செலுத்தப்படுகிறது? அனைவருக்கும் எப்போது தடுப்பூசி கிடைக்கும்?
தடுப்பூசிகளின் சோதனைகள் ஊக்கமளிக்கும் முடிவுகளை நமக்கு வழங்கினாலும் நான் இதில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏன் என்றால் நம்மிடம் குறிப்பிட்ட காலத்திற்கான தரவுகள் மட்டுமே உள்ளது. இந்த தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களிடம் ஏற்படும் தாக்கத்தை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மிகவும் வலுவான கண்காணிப்பு முறையான ஏ.இ.எஃப்.ஐ. கண்காணிப்பு அல்லது adverse event following immunization இதில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு பாதகமாக காரணங்களும் கவனமாக ஆராயப்பட்டு விசாரிக்கப்படுகிறது. இது ஃபார்ம்கோ விஜிலன்ஸ் என்று வழங்கப்படும். ஒரு புதிய மருந்து அல்லது தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் போதெல்லாம் இது நிலையான நடைமுறை பின்பற்றப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பான தரவுகள் நமக்கு அதிகம் தேவைப்படுவதும் ஒரு காரணமாகும். தடுப்பூசில் செலுத்துதல் தொடர்பாக தொடர்ந்து நமக்கு அதிக அளவு தரவுகள் கிடைக்கின்ற பட்சத்தில் நமக்கு தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து தெளிவான முடிவுகள் கிட்டும். இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். ஆனால் ஆரம்பத்தில் ஒவ்வொரு கட்டமாக தான் செலுத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை பெற்றவர்கள் இன்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமா?
எந்த தடுப்பூசியும் 100% செயல்திறன் கொண்டது கிடையாது. அதே போன்று தான் கொரோனா தடுப்பூசியும். தனிநபர் மட்டத்தில் தடுப்பூசி பெற்ற பிறகும் தொற்றுநோய்க்கான ஆபத்து உள்ளது. இருப்பினும் இதன் நிகழ்த்தகவு மிகவும் குறைவானது. ஆனால் இதில் மற்றொரு நிச்சயமற்ற தன்மையும் உள்ளது. தடுப்பூசிகளின் மூலம் பெறப்படும் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு தூரம் இருக்கும் என்பது நமக்கு தெரியாது. இந்த கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை. எனவே தடுப்பூசியை பெற்ற பிறகும் பொதுமக்கள் கோவிட் தடுப்பிற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மிகவும் வலுவாக வற்புறுத்தியுள்ளோம்.
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு மக்கள் முகக்கவசங்களுடன் இருக்க வேண்டும்?
இந்த நேரத்தில் இது தொடர்பாக கூறுவது கடினமானது. பல்வேறு நிலையற்ற தன்மைகள் நிலவி வருகிறது. மாறுபட்ட கொரோனா வைரஸ், தடுப்பூசிகள் செயல்திறன், தடுப்பூசிகள் மூலம் பெறப்பட்ட எதிர்ப்பு சக்தியின் அளவு ஆகியவை தான் நாம் எவ்வளவு நாட்களுக்கு தடுப்பூசி பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும்.
Dr Awate interacted with The Indian Express team at an Idea Exchange programme in Pune