Advertisment

விடுதலை ஆவாரா பேரறிவாளன்? இதுவரை இவ்வழக்கில் நடந்தது என்ன?

கருணை மனுவை தீர்ப்பதற்கு ஆளுநருக்கோ அல்லது ஜனாதிபதியோ கால அவகாசம் விதிக்கப்படவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Perarivalan, AG Perarivalan, Today news, Tamil News, Tamil Nadu news, Banwarilal Purohit,

Arun Janardhanan

Advertisment

Long wait and many twists in the story of Perarivalan :  தமிழக ஆளுநர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி பேரறிவாளன் விடுதலை குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தது மத்திய அரசு. பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் மத்தியில் இருந்து கடந்த சில நாட்களாக கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய கோரிய மனுவானது 16 மாதங்களாக ராஜ்பவனில் எந்தவித முன்னேற்றமும் இன்றி இருப்பது குறித்து பேரறிவாளன் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

29 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ராஜீவ் காந்தி கொலையில் சி.பி.ஐ. முன்னேற தவறியதற்கு கண்டனங்களை பதிவு செய்தது உச்ச நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 25ம் தேதி பேரறிவாளன் ஆளுநருக்கு விடுதலை வேண்டி கடிதம் ஒன்றை எழுதினார். ஜனவரி மாதம் 21ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு மல்டி-டிஸ்பிலினரி மானிட்டரிங்க் ஏஜென்சி அமைப்பு இதுவரையும் எதையும் செய்யவில்லை. அவர்கள் எதையும் செய்ய விரும்பவும் இல்லை என்று கண்டனங்களை பதிவு செய்தனர்.

சி.பி.ஐ தலைமையில் எம்.டி.எம்.ஏ எனப்படும் multi-disciplinary monitoring agency அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனையை எம்.டி.எம்.ஏ தங்களின் விசாராணை அறிக்கையை தாக்கல் செய்யும் வரை தள்ளி வைக்க வேண்டும் என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்த வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியான நளினியின் வழக்கிற்கு நேற்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

பேரறிவாளன் மீதான வழக்கு

பேரறிவாளன் என்று அழைக்கப்படும் அறிவினை 1991ம் ஆண்டு கைது செய்யும் போது அவருக்கு வயது 19. ராஜீவ் காந்தி கொலைக்கான திட்டமிடலில் மிக முக்கிய பங்காற்றியவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த சிவராசன். அவருக்கு 2 பேட்டரி செல்களை வாங்கித் தந்தவர் தான் பேரறிவாளன். அவருடைய கைதுக்குப் பிறகு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக தூக்கு தண்டனை கைதியாகவே இருந்தார். பிப்ரவரி மாதம் 18ம் தேதி, 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு பேரறிவாளன் மற்றும் இதர இரண்டு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்தது.

பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க பலம் வாய்ந்த கருத்தாக அமைந்தது முன்னாள் சி.பி.ஐ எஸ்.பி. தியாகராஜனின் வாக்குமூலம். நவம்பர் மாதம் 2013ம் தேதி அன்று அவர் கூறிய போது, கஸ்டடியில் இருந்த பேரறிவாளன் விசாரணையின் போது கூறிய கருத்துகளை நான் தான், குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் அமையுமாறு மாற்றி எழுதினேன் என்று கூறினார். இந்த மாற்றப்பட்ட கருத்து தான் பேரறிவாளனுக்கு அதிகப்படியான தண்டனையை பெற்றுத் தந்தது.

தியாகராஜனின் ஒப்புதல்

1991ம் ஆண்டு இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை செய்து அறிக்கைகலை பதிவு செய்தார் தியாகராஜன். பேரறிவாளன் தான் பேட்டரி வாங்கியதை ஒப்புக் கொண்டாலும், இந்த பேட்டரி கொலைக்காக தான் பயன்படுத்தப்பட உள்ளது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால் பதிவு செய்யப்பட்ட அறிக்கையிலோ நான் 2 9-வோல்ட் பேட்டரிகளை வாங்கிக் கொண்டு வந்தேன். அதனை சிவராசனிடம் தந்தேன். அவர் அதனை பயன்படுத்தி வெடிகுண்டினை வெடிக்க செய்தார் என்று கூறப்பட்டுள்ளது.

பேரறிவாளனின் கருத்தினை பதிவு செய்யாமல் இரண்டாவது பாதியில் என்னுடைய கருத்தினை நான் சேர்த்தேன். அதற்காக தற்போது வருந்துகிறேன் என்று தியாகராஜன் கூறியுள்ளார். மேலும் இது தான் ராஜீவ் காந்தியின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் அறிக்கையில் இணைத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தியாகராஜன் தாக்கல் செய்த அறிக்கையில் “என்ன அசம்பாவிதம் நடக்க இருக்கிறது என்பது பேரறிவாளனுக்கு தெரியாது. மேலும் எதற்காக பேட்டரி வாங்கப்பட்டது என்றும் அவருக்கு தெரியாது” என்பதை தெளிவுப்படுத்தினார். 1999ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய 19 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தடா விதிகளும் இடை நீக்கம் செய்யப்பட்டது.

சட்டப் போராட்டம்

பேரறிவாளனால் கூறப்படாத இந்த வாக்கு மூலம் தான் அவரை இது நாள் வரையில் சிறைவாசம் காக்க வைத்தது. சி.பி.ஐ இந்த வழக்கினை முறையாக விசாரணை செய்வதில் தோல்வியை தழுவியது. பேரறிவாளனின் வழக்கறிஞர்களோ, பேட்டரி வாங்கப்பட்ட ஒரே ஒரு காரணத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் வெடிகுண்டு குறித்தோ, வெடிகுண்டுகளை உருவாக்கியவர் குறித்தோ, அது எங்கே பரிசோதனை செய்யப்பட்டது, யார் அதற்கு ஆ.டி.எக்ஸ் வாங்கிக் கொடுத்தது என்பது தொடர்பாக எந்த விதமான தகவல்களும் இடம் பெறவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக கோரப்பட்ட கடிதம் இன்னும் ராஜ் பவனில் உள்ளது.  இந்திய அரசியல் சட்டம் 161 ஆளுநருக்கு மன்னிப்பு தர, வழக்கில் இருந்து விடுதலை செய்ய, குற்றத்தை குறைக்க, இடைநிறுத்த அல்ல மாற்ற முழுமையான உரிமைகளை வழங்குகிறது.

இதற்கு முன்பு டிசம்பர் மாதம் 30ம் தேதி, 2015ம் ஆண்டு அன்றைய ஆளுநர் ரோசைய்யா முன்பு பேரறிவாளன் கருணை மனு ஒன்றை அனுப்பினார். 2018ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 6ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா மற்றும் கே.எம். ஜோசப் வழங்கிய தீர்ப்பிலும் ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த ஏழு குற்றவாளிகளுக்கும் தண்டனையை ரத்து செய்யுமாறு ஆளுநருக்கு (புரோஹித்) பரிந்துரைக்க மாநில அமைச்சரவை செப்டம்பர் 9, 2018 அன்று முடிவு செய்தது. அரசாங்கத்தின் முடிவை எதிர்க்கட்சி திமுக மற்றும் அதிமுகவின் டிடிவி தினகரன் பிரிவு இருவரும் வரவேற்றன.

ஆனாலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07/02/2020) அன்று மத்திய அரசு அளித்த அறிக்கையில், "ஆளுநர் ஒரு அரசியலமைப்புச் செயற்பாட்டாளர், அரசியலமைப்பால் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் மனுவைத் தீர்மானிப்பதற்கான உரிமை அவருக்கு உள்ளது" என்று கோடிட்டுக் காட்டியுள்ளது. குற்றவாளிகளை விடுவிப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவை உள்துறை அமைச்சகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது என்றும், கருணை மனு ஆளுநர் முன் நிலுவையில் உள்ளது என்றும் அது கூறியுள்ளது. கருணை மனுவை தீர்ப்பதற்கு ஆளுநருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ கால அவகாசம் விதிக்கப்படவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Perarivalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment