AMITABH SINHA
ஆசிரியர் ரெசிடென்ட் எடிட்டர் ,புனே.இவர், புது தில்லியின் ஐ.ஐ.எம்.சி-யில் பத்திரிகை துறையில் பி.ஜி டிப்ளோமாவும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.
Inter-state Water Disputes Amendment Bill 2019: கடந்த புதன்கிழமை(ஜூலை ,31) அன்று லோக் சபாவில் நிரந்தர நதிநீர் நடுவர் மன்றம் அமைப்பதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா 1956-ல் வந்த, மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறுகள்(Inter state Water Disputes ) சட்டத்தில் திருத்தங்களாய் அமையும். இந்த நதி நீர் தகராறுகள் சட்டத்தின் படி மாநிலங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்ப்பாயம் அமைத்து தீர்வு காணப்படும்.இந்த சட்டத்தின் கீழ் ஐந்து தீர்பாயங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. இப்போது லோக்சபாவில் நிரைவேற்றப்பட்ட சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்த ஐந்து தீர்ப்பாயங்களும் செயலிழக்கப் பட்டு ஒரு நிரந்தர நடுவர் மன்றத்துக்குள் கொண்டுவரப்படும்.
ஏன் இந்த மாற்றம்:
இனிமேலாவது ,குறிப்பிட்ட நதிநீர் பிரச்சினைகளை திறன்பட மற்றும் வேகமாய்த் தீர்க்கவே இந்த மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது. உதாரணமாக, 1956-வது சட்டத்தின் வாயிலாக இது வரையில் 9 தீர்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்பதும் இரு/பல மாநிலங்கள் கேட்டுங்கொண்டதன் பொருட்டு மத்திய அரசால் அமைக்கப்பட்டதே. அவற்றுள் நான்கு மட்டுமே இதுவரையில் தீர்ப்புகள் கொடுத்துள்ளன. அதில் ஒன்று தான் தமிழாடு மற்றும் கர்நாடக இடையில் இருக்கும் காவிரி நதிநீர் தகராறு. இதை முடித்து வைக்க 28 வருடங்கள் தேவைப்பட்டது. மேலும், ரவி அண்ட் பியாஸ் நதிநீர் தீர்ப்பாயம் ஏப்ரல் 1986 இல் அமைத்தாலும் , இன்னும் இறுதி தீர்வை அதை வழங்காமல் உள்ளது.இந்த தீர்ப்பாயங்களில் கிருஷ்ணா நீர் தகராறில் தீர்வுக்கு எடுக்கப்பட்ட 7 வருடங்களே இதனின் அதிகப் பட்ச சாதனையாக உள்ளது.
தற்போது கொண்டுவந்திருக்கும் சட்டத் திருத்த மசோதா இந்த கால அவகாசத்தை குறைக்கும் நோக்கில் உள்ளது எனக் கூறலாம். அனைத்து மோதல்களும் இனிமேல் அதிகபட்சமாக நான்கரை ஆண்டுகளுக்குள் தீர்க்கப்பட வேண்டும் சட்டத்துக்குள் கொண்டுவர இந்த மசோதா முனைகிறது.
பல தீர்ப்பாயங்கள் இருப்பதால் அதிகமான காலதாமதங்கள் ,பணவிரயங்கள் ஏற்படும். ஒரு ஆய்வின் படி ஒரே ஒரு நிரந்தர நடுவர் மன்றம் கொண்டு வருவதால் பணியாளர்களின் எண்ணிக்கையை 107-லிருந்து 80 வரை என 25 சதவீதம் குறைக்கப்படும். இதனால் அரசாங்கம் வருடத்திற்கு 4.27 கோடியை சேமிக்கலாம்.
இனிமேல் (அதாவது இந்த மசோதா சட்டம் ஆக்கப்பட்டால் ) நதிநீர் தீர்வுகள் இரண்டு அடுக்கு அணுகுமுறையில் தீர்க்கப்படும். சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒரு சமரசம் தீர்மானக் குழு (Disputes Resolution Committee) மூலம் பேச்சுவார்த்தைக்கு தீர்வு காண ஊக்குவிக்கப்படும். இந்த சமரசக் குழுவினாலும் சர்ச்சையைத் தீர்க்க முடியாவிட்டால் மட்டுமே, இந்த விவகாரம் நடுவர் மன்ற அமர்வுக்கு பரிந்துரைக்கப்படும்.
இந்த புது விதிமுறை எப்படி செயல்படும் :
இப்போது நடைமுறையில் இருக்கும் 1956சட்டத்தின் இரு/பல மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் .மத்திய அரசு நினைத்தால் மட்டுமே தீர்ப்பாயத்தை உருவாக்க முடியும். சில அரசியல் காரணங்களுக்காக தீர்ப்பாயம் உருவாக்க நின்னைப்பது கூட இல்லை.
இந்த சட்ட மசோதா , மாநில அரசின் கோரிக்கைகளை அதை தீர்க்கும் சாத்தியக் கூறுகளை சமரசம் திட்டக் குழுவிற்கு (Disputes Resolution Committee) வழங்கியுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டியது.
அதாவது, டி.ஆர்.சி ஒரு வருடத்திற்குள் சம்மந்தப்பட்ட மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை மூலம் நதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிக்கும். பின்பு, இந்த டி.ஆர்.சி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். தேவை ஏற்பட்டால், இந்த கால அவகாசத்தை அதிகபட்சம் இன்னும் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கலாம்.
டி.ஆர்.சி தனது அறிக்கையில் இதை பேச்சுவார்த்தையால் தீர்க்க முடியாது இதை நிரந்தர நடுவர் மன்றத்திற்கு மாற்றப்படவேண்டும் என்று பரிந்துரைக்கலாம்.
நிரந்தர நடுவர் மன்றம் என்றால் என்ன?
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிரந்தர நடுவர் மன்றம் இந்த சட்ட மசோதாவால் அமைக்கப்படும். இதில் ஒரு தலைவர்(ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி), துணைத் தலைவர் மற்றும் அதிகபட்சம் ஆறு உறுப்பினர்கள் - மூன்று நீதித்துறை மற்றும் மூன்று நிபுணர் உறுப்பினர்கள் இருப்பார்கள்.அதன் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு நதிநீர் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு தனித்தனி அமர்வுகள் ஏற்படுத்தப்படும். அந்த குறிப்பிட்ட அமர்வு டி.ஆர்.சி அறிக்கையைப் படித்து தீர்ப்பை அதிகபட்சமாக இரண்டு வருடங்களில் முடிக்கப் போராடும். தேவைப்பட்டால் இன்னும் ஒருவருடம் நீடிக்கலாம். குறிப்பிட்ட நதிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன் அதற்கான அமர்வு கலைக்கப்படும்.
நிரந்தர நடுவர் மன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நிகரானது. இதை எதிர்த்து மேல்முறை கிடையாது என்பது அரசியலமைப்பு 262(பி) லுள்ள அம்சமாகும்.இருந்தாலும் உச்ச நீதிமன்றம் காவிரி தீர்ப்பாயத்தின் மேல்முறையீட்டு மனுவை சரத்து 136-ன் கீழ் சிறப்பு விடுப்பு மனுவாய் எடுத்தது குறிப்பிடத்தக்கது.