Advertisment

குறைந்த செலவில் கொரோனா வைரஸின் உருமாற்றத்தை கண்காணிக்கும் புதிய முறை

உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைக் கண்காணிக்க குறைந்த செலவில் ஒரு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
corona virus

கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய SARS-CoV-2 வகைகளின் உலகளாவிய பரவலை கண்காணிக்க குறைந்த செலவில் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் இந்த புதிய கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, கொரோனா வைரஸின் உருமாற்றத்தையும், உலகளாவிய பரவலையும் கண்டறிய ஆயிரக்கணக்கான வைரஸ் மரபணுக்கள் மறுசீரமைக்க வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தொற்றும் தன்மை கொண்ட, நோய்க்கிருமி அல்லது தற்போதுள்ள தடுப்பூசிகளை எதிர்க்கும் மாறுபாடுகள் குறித்து அடையாளம் காணுவதற்கு இது முக்கியமான ஒன்றாக உள்ளது.

உலகளவில் மரபணுக்களை கண்காணிக்க, பல மாதிரிகளை செலவு குறைந்த முறையில் வரிசைப்படுத்துவதும் ஆய்வு செய்வதும் முக்கியமானது. ஸ்வீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் உள்ள Bienko-Crosetto ஆய்வகம் மற்றும் Science for Life Laboratory (SciLifeLab) ஆய்வகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் COVseq என்ற புதிய முறையை உருவாக்கியுள்ளனர். இது வைரஸ் மரபணுவை மிகக் குறைந்த செலவில் கண்காணிக்கப் பயன்படுகிறது.

மல்டிபிளக்ஸ் பிசிஆர் பயன்படுத்தி வைரஸ் மரபணுவின் பல பிரதிகள் உருவாக்கப்படுகின்றன. மாதிரிகள் பின்னர் ஒரே வரிசை நூலகத்தில் பெயரிடப்பட்டு ஒன்றாக இணைக்கப்படுகின்றன. Bienko-Crosetto ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட முந்தைய முறைய பயன்படுத்தி இவை இணைக்கப்படுகிறது. இது தற்போது SARS-CoV-2 ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் இணையதளத்தில், ஆய்வின் முதன்மை இணை எழுத்தாளர் நிங் ஜாங்கை மேற்கோள்படி, "மிகச் சிறிய அளவில் எதிர்வினைகளைச் செய்வதன் மூலமும், நூற்றுக்கணக்கான மாதிரிகளை ஒரே வரிசைமுறையில் சேகரிப்பதன் மூலமும், வாரத்திற்கு ஆயிரக்கணக்கான வைரஸ் மரபணுக்களை வரிசைப்படுத்தலாம். இதற்காக ஒரு மாதிரிக்கு 15 டாலருக்கும் குறைவான செலவே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment