பணவீக்கம் குறைவது அரசின் நிதி, பட்ஜெட் இலக்குகளுக்கு ஏன் ஒரு சிக்கலாக இருக்கிறது?

பொதுவாக நாம் பார்க்கும் ஜிடிபி வளர்ச்சி, பணவீக்கத்தை சரிசெய்து கணக்கிடப்படும் 'உண்மையான ஜிடிபி' ஆகும். ஆனால், அரசாங்கத்தின் கணக்குகளுக்குப் பயன்படுத்தப்படுவது, பணவீக்கத்தை சரிசெய்யாத 'நாமினல் ஜிடிபி'.

பொதுவாக நாம் பார்க்கும் ஜிடிபி வளர்ச்சி, பணவீக்கத்தை சரிசெய்து கணக்கிடப்படும் 'உண்மையான ஜிடிபி' ஆகும். ஆனால், அரசாங்கத்தின் கணக்குகளுக்குப் பயன்படுத்தப்படுவது, பணவீக்கத்தை சரிசெய்யாத 'நாமினல் ஜிடிபி'.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
low inflation

Why low inflation is a problem for government’s finances, Budget targets

கடந்த வாரம், இந்தியாவின் பொருளாதாரத்தில் இருவேறு பணவீக்கத் தரவுகள் வெளியிடப்பட்டன, அவை இரண்டும் இந்தியக் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தன. முதலில், சில்லறை பணவீக்கத் தரவு வெள்ளிக்கிழமை வெளியானது. அதன் படி, நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (CPI) அடிப்படையிலான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2.07 சதவீதமாக இருந்தது. அடுத்ததாக, திங்கட்கிழமை மொத்த விலைக் குறியீட்டு எண் (WPI) அடிப்படையிலான பணவீக்கம் வெளியானது, இது ஆகஸ்ட் 2024-ஐ விட வெறும் 0.52 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தது.

Advertisment

இந்த விலைவாசி குறைவு சாமானிய மக்களுக்கு வரமாக இருந்தாலும், அரசாங்கத்திற்கும் அதன் பட்ஜெட் கணக்குகளுக்கும் ஒரு சவாலாக உள்ளது.

வளர்ச்சிப் பார்வையில் பணவீக்கம்

பணவீக்கம், அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வழியாக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக நாம் பார்க்கும் ஜிடிபி வளர்ச்சி, பணவீக்கத்தை சரிசெய்து கணக்கிடப்படும் 'உண்மையான ஜிடிபி' ஆகும். ஆனால், அரசாங்கத்தின் கணக்குகளுக்குப் பயன்படுத்தப்படுவது, பணவீக்கத்தை சரிசெய்யாத 'நாமினல் ஜிடிபி' (Nominal GDP).

கடந்த மாதம் வெளியான தரவுகளின்படி, இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% ஆக உயர்ந்து, ஐந்து காலாண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை அடைந்தது. ஆனால், அதே காலகட்டத்தில், 'நாமினல் ஜிடிபி வளர்ச்சி 8.8% ஆகக் குறைந்து, மூன்று காலாண்டுகளுக்குப் பின் குறைந்த அளவை எட்டியது. இதுவே அரசாங்கத்தின் நிதிப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம். ஏனெனில், இந்த வளர்ச்சி, பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் குறைவு.

Advertisment
Advertisements

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதி அமைச்சகம் நாமினல் ஜிடிபி வளர்ச்சி 10.1% ஆக இருக்கும் என கணித்திருந்தது. இந்த கணிப்பின் அடிப்படையில்தான், வரி வருவாய்கள் எவ்வளவு அதிகரிக்கும் என பட்ஜெட் திட்டமிடப்படுகிறது. உதாரணமாக, 2025-26 பட்ஜெட்டில், மத்திய அரசின் நிகர வரி வருவாய் கிட்டத்தட்ட 11%  அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது குறைந்திருக்கும் பணவீக்கம், நாமினல் ஜிடிபி வளர்ச்சியைக் குறைத்துவிட்டது. உற்பத்தி அதிகரித்தாலும், விலைகள் குறையும்போது, மொத்தப் பொருட்களின் மதிப்பான ஜிடிபியும் குறைவாகவே அதிகரிக்கும். 2025-26 நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், மொத்த விலைக் குறியீட்டெண் (WPI) பணவீக்கம் சராசரியாக 0.1% ஆகவும், நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (CPI) பணவீக்கம் 2.4% ஆகவும் இருந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் சராசரி பணவீக்கத்தை விட (WPI 2.3%, CPI 4.6%) மிகவும் குறைவு.

அரசு நிதிநிலையில் தாக்கம்

குறைந்த பணவீக்கம் மற்றும் நாமினல் ஜிடிபி வளர்ச்சி, அரசின் நிதிநிலையிலும் அதன் தாக்கத்தைக் காட்டுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தரவுகளின்படி, மத்திய அரசின் மொத்த வரி வருவாய் கடந்த ஆண்டை விட 1% மட்டுமே அதிகரித்துள்ளது. மேலும், நிகர வரி வருவாய் 7.5% குறைந்துள்ளது.

இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் பராஸ் ஜஸ்ராய் கூறுகையில், "பணவீக்கம் குறைவது நுகர்வோருக்கு நல்ல செய்தி என்றாலும், அது அரசாங்கத்தின் நிதிநிலைக்கு அவ்வளவு நல்லதல்ல. மெதுவான ஜிடிபி வளர்ச்சியின் தாக்கம் ஏற்கனவே அரசின் நிதியில் தெரிவதோடு, வரி வசூல் வளர்ச்சி 2025-26 பட்ஜெட் இலக்குகளை விட குறைவாகவே உள்ளது" என்கிறார்.

பட்ஜெட் இலக்குகளைத் தவற விடுதல்

உண்மையில், அரசாங்கம் பட்ஜெட்டில் நிர்ணயிக்கும் நாமினல் ஜிடிபி வளர்ச்சி இலக்குகள் அடிக்கடி தவறுவதுண்டு. கடந்த 13 ஆண்டுகளில், ஒன்பது முறை உண்மையான வளர்ச்சி, பட்ஜெட் கணிப்பை விட குறைவாகவே இருந்துள்ளது. இருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகளில், மூன்று முறை இந்த வளர்ச்சி கணிப்பை விட அதிகமாகவே இருந்தது.

இங்கு ‘அடிப்படை விளைவு’ (Base Effect) என்ற ஒரு விஷயமும் முக்கியமானது. 2024-25 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி தற்போது ₹331 லட்சம் கோடியாக திருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் இலக்கான ₹357 லட்சம் கோடியை அடைய, நாமினல் ஜிடிபி வெறும் 8% வளர்ந்தால் போதுமானது.

இந்த இலக்கை அடைவது இரண்டு முக்கியக் காரணங்களுக்காக அவசியமாகிறது: நிதிப் பற்றாக்குறை மற்றும் மத்திய அரசின் கடன், இவை இரண்டும் நாமினல் ஜிடிபியின் சதவீதமாகவே கணக்கிடப்படுகின்றன. நாமினல் ஜிடிபி இலக்கு அடையப்பட்டால், 4.4% நிதிப் பற்றாக்குறை மற்றும் 56.1% கடன்-ஜிடிபி விகித இலக்குகளும் பூர்த்தி செய்யப்படும்.

ஆனால், நாமினல் ஜிடிபி வளர்ச்சி குறைந்துகொண்டே வருகிறது. மோர்கன் ஸ்டான்லி போன்ற பொருளாதார நிபுணர்கள், இந்த ஆண்டு நாமினல் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். வரவிருக்கும் வாரத்தில் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட உள்ளதால், விலைகள் மேலும் குறையலாம். இது பணவீக்கத்தைக் குறைத்து, நாமினல் ஜிடிபி வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பணவீக்கம் குறைவது உண்மையில் கெட்டதா?

பணவீக்கம் குறைவது எப்போதும் கெட்டது என்று சொல்ல முடியாது. அது ஏன் குறைவாக உள்ளது என்பதே முக்கியம். அதிக உற்பத்தி காரணமாக விலைகள் குறைந்தால் அது நல்லது. ஆனால், தேவை குறைந்ததால் விலைகள் குறைந்தால் அது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, ஏப்ரல்-ஜூன் மாதங்களில் தனியார் நிறுவனங்களின் விற்பனை 5.5% மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால், அவற்றின் நிகர லாபம் 17.6% ஆக உயர்ந்துள்ளது. இது, உலகளாவிய கச்சாப் பொருட்கள் விலைக் குறைப்பால் சாத்தியமாகியுள்ளது. ஆனால், இந்த லாபத்தை நிறுவனங்கள் முதலீடுகளுக்குப் பயன்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் பிரைமரி டீலர்ஷிப் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள், "நிறுவனங்களின் லாப வரம்பு வலுவாக இருந்தாலும், முதலீட்டு மனநிலை (Capex Sentiment) பலவீனமாகவே உள்ளது" என்று கூறுகின்றனர். இது, குறைந்த பணவீக்கத்திற்கான ஒரு காரணமாக இருக்கலாம். வலுவான உற்பத்தி வளர்ச்சி இருந்தால், குறைந்த பணவீக்கம் நல்ல விஷயமாகும். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், அதுபோல எதுவும் தெரியவில்லை.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

Economy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: