கொரோனா 2வது அலை மிக மோசமாக பரவி வருகிறது. பெண்களை விட ஆண்களே சராசரியாக அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.ஹார்மோன் குறைபாடுகள் ஆண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்களை விட ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருப்பதால், சில விஞ்ஞானிகள் டெஸ்டோஸ்டிரோனின் அதிக அளவு இதற்கு காரணம் என கூறுகின்றனர். டெஸ்டோஸ்டிரான் என்பது ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஜெ.ஏ.எம்.ஏ (JAMA) மருத்துவ ஆய்வு இதற்கு நேர்மாறாக கூறுகிறது. டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பது கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாவதாக கூறுகிறது.
குறைந்த டெஸ்டோஸ்டிரோன் கடுமையான கோவிட் -19 க்கு ஒரு காரணம் என்பதை ஆய்வில் நிரூபிக்க முடியவில்லை. இருந்தாலும், குறைந்த அளவு வேறு சில காரணிகளாக அமைகிறது..
கோவிட் -19 நோய்த்தொற்றுடன் பார்ன்ஸ்-யூத மருத்துவமனைக்கு வந்த 90 ஆண்கள் மற்றும் 62 பெண்களிடமிருந்து இரத்த மாதிரிகளில் ஹார்மோன்களை ஆராய்ச்சியாளர்கள் அளவிட்டனர். அவர்களில் 143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் மத்தியில், எந்த ஹார்மோனின் அளவிற்கும் நோய் தீவிரத்திற்கும் தொடர்பு இல்லை. ஆனால் ஆண்களில், கோவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களின் டெஸ்டோஸ்டிரோன் குறைந்த அளவு இருப்பது தெரியவந்துள்ளது.
குறைந்த ஹார்மோன் அளவு நோயை மிக கடுமையாக்குகிறது. உதாரணமாக, மிகக் குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு கொண்டவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. வெண்டிலேட்டர், தீவிர சிகிச்சை மற்றும் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 37 நோயாளிகள் (25 ஆண்கள் உட்பட) ஆய்வின் போது இறந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"