Advertisment

ஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
covid drug

ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் 44வது கூட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்து பொருட்கள், கருவிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் எனவும் இது செப்டம்பர் 30ஆம் தேதி வரை என அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

Advertisment

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்(NPPA) ஜூன் 15ஆம் தேதி அனைத்து மருந்துகள்/ஃபார்முலா மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலையை திருத்துவதற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.

publive-image

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே ராகவகனின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் இவ்வாறு கூறினார். ஜிஎஸ்டி குறைப்பைக் கருத்தில் கொண்டு மருந்துகளின் விலையைக் குறைக்க மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை NPPA கேட்டுள்ளதா என்பதை காங்கிரஸ் எம்பி அறிய விரும்பினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Parliament Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment