Advertisment

பாகிஸ்தான் ராணுவமும், இம்ரான் கானும்… ஐஎஸ்ஐ உளவுப் பிரிவில் முக்கிய மாற்றம்!

ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் இதுவரை வகுக்கப்படவில்லை. இருப்பினும், ஐஎஸ்ஐ தலைவரை , ராணுவ தலைமை தளபதி தேர்வு செய்கிறார். பிரதமர் அதில் கையெழுத்திடுகிறார்.

author-image
WebDesk
New Update
பாகிஸ்தான் ராணுவமும், இம்ரான் கானும்… ஐஎஸ்ஐ உளவுப் பிரிவில் முக்கிய மாற்றம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அஞ்சூமை, ஐஎஸ்ஐ அமைப்பின் அடுத்த இயக்குநராக நியமனம் செய்யும் உத்தரவில் கையெழுத்திட சுமார் ஒரு மாதம் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஜெனரல் நதீம் அஞ்சூம், நவம்பர் மூன்றாம் வாரத்தில் ஐஎஸ்ஐ இயக்குநராக பொறுப்பேற்கவுள்ளார். தற்போதைய ஐஎஸ்ஐ இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீது, பெஷாவரில் உள்ள XI கார்ப்ஸூக்கு தளபதியாக பதவியேற்கவுள்ளார்.

Advertisment

ஹமீதை படைக்கு மாற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பரிந்துரையை ஏற்பதில் இம்ரான் கான் காலம் தாழ்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2018 தேர்தலில் இம்ரான் கான் வெற்றிப்பெற ஹமீத் முக்கிய பங்கு விகித்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக, அவரே ஐஎஸ்ஐ அமைப்பின் இயக்குநராகவே தொடருவதற்கான முயற்சிகள் இம்ரான் மேற்கொண்டுள்ளார். இருப்பினும், ராணுவத்தின் அழுத்ததால், பிரதமர் கான் கையெழுத்திட்டுள்ளார்.

இம்ரான் குழப்பமும், பஜ்ராவின் முடிவும்

ராணுவத்தில் முக்கிய பங்கு வகித்த் ஹமீட், ராணுவ தளபதி பஜ்ராவுடன் நெருக்கமாக தான் இருந்தார். ஆனால், ஆப்கானை தாலிபான் கைப்பற்றியதற்கு பிறகு காபூலில் அவர் மக்களிடையே தோன்றியது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கியது அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் தான், ஒரு காலத்தில் ராணுவ தளபதியாக வருவார் என கூறப்பட்டது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், பஜ்ரா 2022 இல் ஓய்வுபெற்றாலும், அவர் வரும் சாத்தியங்கள் குறைவு தான் என கூறப்படுகிறது.

அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட உறவுகளை ஜென்ரல்கள் கொண்டிருப்பதாக ராணுவம் சந்தேகிக்கிறது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவிக்காலத்தில் ஐஎஸ்ஐ தலைவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப்புடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தார். இதன் காரணமாக, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இம்ரான் கான் ஆட்சி எத்தனை நாள்கள்?

பாகிஸ்தான் ஊடகங்கள் தற்போது இம்ரான் கான் அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும்? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளன. 2018இல் நவாஷ் ஷெரீப் வெளியேறியது போல், இம்ரான் கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படி, தேர்தல் வந்தாலும் ராணுவம் இம்ரான் கான் பக்கத்தில் இல்லாத போது, அவரால் வெற்றிபெற முடியுமா என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இம்ரான் கானுக்கு பக்க பலமாக உள்ள ராணுவம் தனது பாதுகாப்பை எப்போது அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறும் தருணத்திற்காக எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.

பாகிஸ்தானின் புதிய ஐஎஸ்ஐ தலைவர்

இதற்கு முன்னதாக லெப்டினன்ட் ஜெனரல் அஞ்சும், ஐஎஸ்ஐயில் எவ்வித பொறுப்பும் வகித்ததுஇல்லை. 1988இல் ராணுவ பணியில் இணைந்த அவர், பலுசிஸ்தானில் உள்ள எல்லைப்புறப் படைக்கு தலைமை தாங்கினார். டிசம்பர் 2020 இல் கராச்சி கார்ப்ஸ் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டார். அவரை ஐஎஸ்ஐ தலைவராக நியமனம் செய்வதன் மூலம், தலைமை தளபதி பஜ்ரா, மீண்டும் ராணுவ கட்டுப்பாட்டில் ஐஎஸ்ஐயை முழுமையாக கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஐஎஸ்ஐ யார் கன்ட்ரோல்?

ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் இதுவரை வகுக்கப்படவில்லை ஆனாலும் ஐஎஸ்ஐயில் ஏற்படும் மாற்றங்கள் இதுவரை சர்ச்சையை ஏற்படுத்தியில்லை. ஐஎஸ்ஐ உளவு துறை, தனது நடவடிக்கைகளை பிரதமருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால், அந்த துறையில் உள்ள அதிகாரிகள் பெரும்பாலும் ராணுவத்தில் உள்ளவர்கள் என்பதால், ஐஎஸ்ஐ ராணுவத்தின் ஒரு பகுதியாக மாறதொடங்கியது.

பல ஆண்டுகளாக, ஐஎஸ்ஐ ராணுவத்தால் அதன் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஐஎஸ்ஐ தலைவர் மூன்று ஸ்டார் கொண்ட ஜெனரலாக இருக்க வேண்டும். அவரது நியமனத்திற்கு இதுவரை எவ்வித வழிமுறையும் வகுக்கப்படவில்லை. இருப்பினும், ஐஎஸ்ஐ தலைவரை , ராணுவ தலைமை தளபதி தேர்வு செய்கிறார். பிரதமர் அதில் கையெழுத்திடுகிறார்.

அரசு கட்டுப்பாட்டில் ஐஎஸ்ஐ

முன்னாள் பிரதமர்கள் பெனாசிர் பூட்டோ மற்றும் ஷெரீப் ஆகியோர் ஐஎஸ்ஐ அமைப்பின், அரசின் கட்டுப்பாட்டில் கொண்ட வர முயன்றனர். ஆனால், அதனை வெற்றிக்கரமாக செய்துவிடமுடியவில்லை. 2008 இல், குடியரசு தலைவர் ஆசிப் அலி, ஐஎஸ்ஐ அமைப்பை உள் துறை அமைச்சக்த்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பால் அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலே திரும்ப பெறப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Imran Khan Military Isis Pakistan Pm Imran Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment