Advertisment

வரலாறு போற்றும் சீனா - மகாபலிபுரம் உறவு... 1300 ஆண்டுக்கால பழமையை நினைத்து பார்க்கும் நேரம் இது!

Modi-Xi Summit in Mamallapuram : இந்தியாவின் மீது கடினப் போக்கை கையாளும் சீனாவின் மனதை இந்த மாமல்லபுர சந்திப்பு மாற்றாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mahabalipuram’s China connection - 1300 years History

Mahabalipuram’s China connection - 1300 years History

நிருபமா சுப்பிரமணியன்

Advertisment

Modi-Xi Summit in Mamallapuram :

உலகமே இன்று உற்று நோக்கி கொண்டிருப்பது சீனா அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு குறித்து தான். இந்த வரலாற்று நிகழ்வில் தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் தருணம் எதுவென்றால் அது மகாபலிபுரத்தில் சீன அதிபர் நமது கட்டிடக்கலை பாரம்பரியத்தை பார்வையிடுவது தான். சீனாவுக்கு மகாபலிபுரத்திற்கும் இடையே இருக்கும் 1300 ஆண்டுக்கால பழமை கதையை இங்கே  தெரிந்துக் கொள்ளுங்கள்.

அக்டோபர் 11 & 12 தேதிகளில் சென்னையிலிருந்து  56 கி.மீ தெற்கே உள்ள மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீனா அதிபர் ஜி-ஜின்பிங்கும் கலந்து கொள்ளும் இரண்டாவது இன்பார்மல் உச்சிமாநாடு நடக்க விருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் போன்ற முக்கிய பிரச்சனைகளை இந்தியாவின் மீது கடினப் போக்கை கையாளும் சீனாவின் மனதை இந்த மாமல்லபுர சந்திப்பு மாற்றாது இருந்தாலும், இந்த மாமல்லபுரம் இந்தியா- சீனாவின் வரலாற்று கற்பனைகளையும் , கதைகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் தான் உள்ளது.

பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில்:

மாமல்லபுரம் என்ற பெயர் மாமல்லன் அல்லது "பெரிய போர்வீரன்" என்பதிலிருந்து உருவாகியது. கி.பி 630-668ம் ஆண்டு வாழ்ந்த பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மனை  இந்த மாமல்லன் தலைப்பு பிரதிநிதுத்தவப்படுத்துகிறது.  முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிக் காலத்தில்தான் சீன புத்த துறவியான "ஹுயென் சாங்"  காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவ தலைநகருக்கு பயணம் செய்திருந்தார்.

publive-image ஹுயென் சாங்

 

வரலாற்றாசிரியர் டேன்சன் சென் 2003 எழுதிய "பௌத்திகம், ராஜதந்திரம் மற்றும் வணிகம்: 600-1400 ல் சீன-இந்திய உறவுகளின் மறுசீரமைப்பு" என்ற வராலாற்று ஆய்வில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

ராஜசிம்மன் என்று அழைக்கப்படும் இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி. 700-728) தென்கிழக்கு ஆசியாவுடன் கடல்சார் வணிக தொடர்புகளை ஒருங்கிணைத்தவர் ஆவார்.  கி. பி. 720களில்  சீனாவின் டாங் அரசவைக்கு தூதரை அனுப்பியிருக்கிறார் இரண்டாம் நரசிம்மவர்மன்.

publive-image

தெற்காசியாவில் அரபு மற்றும் திபெத்திய ஊடுருவல்களை எதிர்த்துப் போராட பல்லவ மன்னரின் தூதர்கள், சீனா ஜுவாங்சோங் பேரரசரோடு பேசி வந்ததாகவும் , திபெத்தியருக்கு எதிரான போருக்கு  தன்னை அர்ப்பணிக்க முன்வந்த  இரண்டாம் நாராயண சிம்ஹாவின் படைகளுக்கு, (நல்லொழுக்கத்தை மதிக்கும் இராணுவம்) என்ற பட்டத்தையும் சீனப் பேரரசர் வழங்கியிருப்பதாகவும், டேன்சன் சென்னின் ஆய்வுக் கட்டுரையில் உள்ளது.  வர்த்தகத்தை அதிகப்படுத்துவதற்காகவும், சக்தி வாய்ந்த சீனப் பேரரசரோடு தன் இணைப்பை இந்த உலகத்திற்குக் காட்டுவதற்காகவும் தான்,  பல்லவ மன்னர்களின் உதவும் தன்மை இருந்ததாக டேன்சன் சென்னின் வரலாற்றுக் கட்டுரை நமக்கு பதில் சொல்கிறது.

மாமல்லபுரத்தில், முதல் நரசிம்மவர்மனால் செதுக்கப்பட்ட கங்கா, அர்ஜுனன் தவம் செய்யும் சிற்பத்தில், இமயமலையில் இருந்து கங்கை நதி தென்னகம் நோக்கி பாய்வதாய் செதுக்கப்பட்டிற்கும் தன்மை இந்தியா- சீனாவின் உறவுகளை மனதில் வைத்து செதுக்கப்பட்டதோ ? என்ற கேள்வியோ எழுப்பும்.

 

publive-image

 

இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீனா

பல்லவர்களுக்குப் பிறகும் தமிழ்-சீன தொடர்புகள் தொடர்ந்தன. சோழர்களின் காலத்தில் கோரமண்டல் கடற்கரை சீனாவுக்கும், மத்திய கிழக்கிற்கும் நுழைவு வாயிலாக அமைந்தது. வரவிருக்கும் சீன அதிபர் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட  கடற்கரை கோயிலின் மேடையில் இருந்து தெற்கே பார்த்தால், 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய அடையாளமான வெள்ளை குவிமாடங்களால் உருவாக்கப்பட்ட சென்னை அணு மின் நிலையம் அவரது கண்ணில் தென்படும். 1980 ல் கட்டப்பட்ட இந்த அணுமின் நிலையம், இந்தியாவில் உள்நாட்டின் மூலம் கட்டப்பட்ட முதல் அணுமின்  நிலையமாகும். இந்தியாவின் மதச்சார்பின்மையையும், பன்முகத்தன்மையும்  இரு தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் முதன்மையாய் பேசப்போவதில்லை என்றாலும் - அவர்களின் சந்திக்கும் தளமான அந்த கடற்கரையின் ஓரத்தில் ஆயிரம் ஆண்டுகளாக இந்துக்களும், இஸ்லாமியர்களும்  ஒன்றோடு, ஒன்றாய் வாழ்ந்து வருகின்றனர்.

9 ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு இஸ்லாம் வருவதற்கு முன்னரே, இஸ்லாமியர்கள் ஏற்கனவே சீனாவுடன் கடல் வழிகள் மூலம் வர்த்தகம் செய்யத் தொடங்கினர் என்பது சென் எழுதிய ஆய்வின் மூலம் தெரிந்துக் கொள்கிறோம். சாங் அரசவைக்கு சோழர்கள் அனுப்பிய வர்த்தகத் தூதர்களில் எண்ணற்ற  இஸ்லாமியர்களும் அடங்குவர். உதாரணமாக, 1015 ல் அனுப்பப்பட்ட தூதர்களில் அபுகாசிம் என்ற வணிகர் முக்கியவராக திகழ்ந்தார், 1033 ல் அனுப்பப்பட்ட சீனாவுக்கான சோழர் பிரதிநிதிகளில்  'அபு ஆதில்' என்பவர் முக்கியம் வாய்ந்தவராக இருந்தார். இந்த இருவரும் கோரமண்டல் கடற்கரையில் தமிழ் பேசும் இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த லப்பை  என்று அறியப்படுகிறார்கள் என்று சென் எழுதுகிறார்.

தொடர் இணைப்புகள்

பிற்கால நூற்றாண்டுகளில் கோரமண்டல் கடற்கரை, சீனாவிற்கும் மேற்கிற்கும் இணைக்கும்  வர்த்தகத்தின் முக்கியத் தளமாக  தன்னை தக்க வைத்துக் கொண்டது. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் டச்சு, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் நாடுகள் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா இடையிலான கடல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சீனாவுடனான வர்த்தகத்தை பலப்படுத்துவதற்காகவும் கோரமண்டல் கடற்கரை முக்கிய வர்த்தக தளவாடமாக மாறியது.

மஹாபலிபுரத்திற்கு தெற்கே 80 கி.மீ தொலைவில் உள்ள பண்டைய துறைமுக நகரமான பாண்டிச்சேரி, சீன ஏற்றுமதிக்கு( க்ரீப் டி சைன் உட்பட ) பெயர் போனதாய் இருந்தது. இன்று அந்த துறைமுக நகரம் ஒரு யூனியன் பிரதேசமாக பிரெஞ்சு மரபைத் தாங்கியும், தமிழ் குடியிருப்பாளர்களைதத் தாங்கியும் ,பெங்காலி மற்றும் ஸ்ரீ அரவிந்தோவின் சர்வதேச பக்தர்களை உள்ளடக்கியும், தென்னிந்தியாவின்  காஸ்மோபாலிட்டன் நகரங்களாக உள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் கோரமண்டல் கடற்கரையில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திய பின்னர், சீனா மற்றும் பிற பிராந்தியங்களுக்கான வர்த்தக வழிகளைப் பாதுகாக்க கிழக்கு நோக்கி விரிவடைந்து மலாக்காத் நீரின் மீதும் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தினர்.

கோரமண்டல் கடற்கரையில், சொல்லும்படியான காலனித்துவ தளவாட நிலையங்கள் கல்பாக்கத்திற்கு அடுத்தபடியாக சதுரங்கப்பட்டினத்தில் அமைந்திருந்தது. வடக்கு சென்னையில் புலிகாட்டைத் தலைநகரமாக்கியப் பின் டச்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவிய இரண்டாவது கோட்டை இந்த சதுரங்கப்பட்டினத்தில் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . டச்சு கட்டுப்பாட்டில் உள்ள பருத்தி மற்றும் மஸ்லின் உற்பத்திக்கு இந்த சதுரங்கப்பட்டினம் பெரிய மையமாக மாறியது. 1603 ஆம் ஆண்டில் இந்தோனேசியா ஜாவாவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டபின் இப்பகுதியில் டச்சு ஆதிக்கம்  வேகமாக வளர்ந்தது. சீனாவின் ஸ்பைஸ் வர்த்தகத்தில் முக்கிய இடம் சதுரங்கப்பட்டினம் முதன்மையாய் இருந்தது குறிப்பிடத்தக்கது

China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment