லிஸ் மேத்யூ, கட்டுரையாளர்
Maharashtra, Haryana Election results: மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின் போக்குகளைப் பார்த்தால், ஆளும் பாஜகவுக்கு கவலை அளிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன. வாக்குப்பதிவுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட மிகைப்படுத்தல்களுக்கு மாறாக, இரண்டு மாநிலங்களிலும் கட்சி அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.
இன்று நண்பகல் நிலவரப்படி 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜக-சிவசேனா 163 இடங்களுடன் பாதி இடங்களைத் தாண்டியது. நண்பகலில் நடந்த போக்குகளின்படி, 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக-சிவசேனா 163 இடங்களுடன் பாதி எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. ஆனால், சொந்தமாக ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான எண்களைக் கொண்டிருக்கும் பாஜக, விதர்பா உள்ளிட்ட சில பகுதிகளில் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.
ஆனால், பாஜகவுடன் இடங்களைப் பகிர்ந்துகொண்டதில் மேலாதிக்கத்தை கைவிட்டிருந்த கூட்டணி கட்சியான சிவசேனா சிறப்பாக செயல்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டன. தற்போது, எதிர்க்கட்சி கூட்டணி 95 இடங்களை முன்னிலை வகிக்கிறது. காலாவதியாகும் கடந்த சட்டசபையில் அவர்கள் பெற்றிருந்த 42, 41 இடங்களைவிட சிறப்பாக பெற்றுள்ளனர்.
பாஜக தலைவர்கள் இதுவரை துணை முதல்வர் பதவி இருக்காது என்றும், கூட்டணி மற்றும் புதிய அரசாங்கத்தின் வரையறைகள் அவர்களால் தீர்மானிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் சிவ சேனாவின் செயல்திறன் எதிர்பார்த்ததை விட மிகவும் தாக்கத்துடன் வெளிவருவதால், அதனுடைய கோரிக்கை அதிகமாக இருக்கும்.
மகாராஷ்டிராவில், பாஜக தனியாக போட்டியிட்ட 2014 தேர்தலில் 27.59 சதவீத வாக்குகளைப் பெற்று 122 இடங்களை வென்றது.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா மாநில சட்டசபையில் பாஜகவின் “மிஷன் 75” என இருந்த நிலையில், இன்று மதியம் அது இன்னும் பாதியையே கடக்கவில்லை. அதே நேரத்தில் உள்கட்சி பிரச்சினைகள் காரணமாக குழப்பத்தில் இருக்கும் காங்கிரஸ், எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
காங்கிரஸ் 29 இடங்களில் முன்னிலை வகித்தது. புதிதாக உருவாக்கப்பட்ட ஜே.ஜே.பி-யின் வேட்பாளர்கள் குறைந்தது 11 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் ஒரு அக்கட்சி முதலமைச்சரை தீர்மாணிக்கும் கட்சியாக வரக்கூடும். ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாததாக இருக்கிறது. ஏனெனில் சுயேச்சைகள் உட்பட மற்றவர்கள் 10 இடங்களில் முன்னிலை வகித்தனர்.
தேர்தல் முடிகளின் தொடக்கத்திலிருந்து இதுதான் முதல் முக்கிய உண்மை
மக்களவை தேர்தலுக்கும் மாநிலத் தேர்தல்களுக்கும் இடையில் வாக்காளர்கள் நிச்சயமாக வேறுபடுகிறார்கள். தேர்தல்கள் பிரதமர் நரேந்திர மோடியின் வாக்கு அல்ல என்பதை தேர்தல் முடிவு நிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தேசியவாதம் மற்றும் 370 வது பிரிவை ரத்து செய்தல் - இந்த பிரச்னையில் பாஜக பெரும் ஆதரவு பெற்றதாக கருதியது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் இது மட்டுமே பிரச்சினை அல்ல.
விதர்பாவில் பாஜக செயல்திறன் அவ்வளவு ஈர்க்கும்படியாக இல்லை. கடந்த தேர்தலில் அங்கே பாஜக - சிவசேனா இருவரும் கணிசமான எண்ணிக்கையிலான இடங்களை வென்றன. வாக்கு சதவீதத்தின் வீழ்ச்சியில் சேரும். விதர்பா நிதின் கட்கரியின் சொந்தப் பகுதி. கட்சியின் தற்போதைய தலைமையால் மூத்த தலைவர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பாஜகவில் ஒரு குறிப்பிடத்தக்க சலசலப்பு ஏற்பட்டது.
விவசாய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பகுதிகளும் பாஜகவுக்கு சாதகமான சமிக்ஞைகளை அனுப்புவதாகத் தெரியவில்லை. இது இந்த பிராந்தியத்தில் வாக்காளர்கள் மாநில அரசின் நிர்வாகத்தில் மகிழ்ச்சியடையவில்லை என்பதைக் குறிக்கிறது.
நிர்வாகப் பிரச்சினை மகாராஷ்டிராவில் பாஜகவின் வாய்ப்புகளை சேதப்படுத்தக்கூடும் என்றால், அரசு ஆவணங்கள் ஹரியானாவில் பாஜகவின் எண்ணிக்கையை பாதித்ததாகப் பார்க்கப்படுகிறது.
தேசியத் தலைமையின் செயலில் பங்கேற்பு அல்லது ஆர்வம் இல்லாவிட்டாலும் காங்கிரசின் செயல்திறன் உள்ளூர் தலைமை, குறிப்பாக பூபிந்தர் சிங் ஹூடா ஒரு நல்ல செயல்திறனைக் காட்டியிருக்கிறார்.
இந்த முடிவுகள் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மோசமான செய்தியாக இருக்கும். ஏனென்றால் பழைய தலைமையை மீண்டும் கொண்டுவருவதற்கான தற்போதைய தலைவர் சோனியா காந்தியின் முடிவால் ஹரியானாவில் கட்சி சிறப்பாக செயல்பட்டதாகத் தெரிகிறது. ராகுல் நியமித்த அசோக் தன்வார் தேர்தலுக்கு முன்னதாக கட்சியில் இருந்து விலகியிருந்தார். மேலும் ஹூடா தான் மாநிலத்தில் கட்சிக்கு தலைவர்களை அழைத்தார். (மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் குமாரி செல்ஜா இருந்தபோதிலும்.)
மாநிலத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் வாக்காளர்கள் வேறுபட்டு நடந்துகொள்கிறார்கள் என்பதை இந்த தேர்தல்கள் சுட்டிக்காட்டுவதால், இது ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற வெளிப்படையாக வாதிடுபவர்களின் சிந்தனைக்கும் சிறிது தீணி போட்டிருக்கும்.