Advertisment

மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு திறப்பு விழா: நாட்டின் மிக நீளமான கடல் பாலம் பயண நேரத்தை எப்படி குறைக்கும்?

மும்பையை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் ஒரு விரிகுடா கிராசிங் யோசனை முதன்முதலில் 1963 இல் அமெரிக்க கட்டுமான ஆலோசனை நிறுவனமான வில்பர் ஸ்மித் அசோசியேட்ஸிடம் இருந்து வந்தது,

author-image
WebDesk
New Update
The Mumbai Trans Harbour Link

The Mumbai Trans Harbour Link

Listen to this article
00:00 / 00:00

கடலில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். 22 கிமீ மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு, அதிகாரப்பூர்வமாக அடல் சேது நவா ஷேவா கடல் இணைப்பு என பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் முதன்முதலில் உருவாக்கப்பட்ட பாலம் செவ்ரி மற்றும் சிர்லே இடையேயான பயண நேரத்தை 20 நிமிடங்களுக்குள் குறைக்கும்.

புதிய கடல் இணைப்பு                                                         

மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் (என்பது அரபிக் கடலில் உள்ள தானே சிற்றோடையின் மீது கிமீ நீளமுள்ள இரட்டை- ஆறு வழி பாலமாகும் (twin-carriageway six-lane bridge). இது தீவு நகரமான மும்பையில் உள்ள செவ்ரியை பிரதான நிலப்பரப்பில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ள சிர்லேயுடன் இணைக்கிறது. MTHL இணைப்பு, 16.5 கி.மீ. கடல் இணைப்பு மற்றும் 5.5 கி.மீ. நீளம் கொண்ட நிலத்தின் இரு முனைகளிலும் உள்ள வழித்தடங்களை உள்ளடக்கியது.

மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் மாவட்டங்களை உள்ளடக்கிய மும்பை பெருநகரப் பகுதியில் இணைப்பை மேம்படுத்துவதும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதும் திட்டத்தின் நோக்கமாகும். MTHL ஆனது பயண நேரத்தை வியத்தகு முறையில் குறைப்பதன் மூலம் மும்பை மற்றும் நவி மும்பையை நெருக்கமாக கொண்டு வரும், மேலும் வாஷி பாலத்தின் வழியாக இருக்கும் பாதையில் நெரிசலை குறைக்கும்.

1963 முதல் 2024 வரை

மும்பையை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் ஒரு விரிகுடா கிராசிங் யோசனை முதன்முதலில் இல் அமெரிக்க கட்டுமான ஆலோசனை நிறுவனமான வில்பர் ஸ்மித் அசோசியேட்ஸிடம் இருந்து வந்தது. ஆனால் அதன்பின் நடவடிக்கை எதுவும் தொடங்கப்படவில்லை. 90களின் பிற்பகுதியில் இந்தத் திட்டம் புத்துயிர் பெற்றது. 2006 முதல் டெண்டர்கள் இல் வெளியிடப்பட்டன.

பிப்ரவரி 2008இல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பொதுத் தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் மூலம் ஒன்பது ஆண்டுகள் மற்றும் 11 மாதங்களில் ரூ.6,000 கோடி மதிப்பிலான பாலத்தைக் கட்டுவதற்கான செலவை பொறுப்பேற்பதாக உறுதியளித்த பின்னர் விருப்பமான ஏலதாரராக உருவெடுத்தது.

சில மாதங்கள் கழித்துஅம்பானி திட்டத்தில் இருந்து விலகினார்.

பல ஏல செயல்முறைகள் தோல்வியில் முடிந்தனமேலும் நோடல் ஏஜென்சி மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்திலிருந்து மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையமாக (MMRDA) மாற்றப்பட்டது.

MMRDA ஆனது ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையுடன் (JICA) ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு, திட்டச் செலவில் 80 சதவிகிதம் நிதியளிக்க ஒப்புக்கொண்டது, மீதமுள்ள தொகையை மாநில மற்றும் மத்திய அரசுகள் ஏற்றன.

ஒப்பந்தம் மற்றும் டெண்டர் இறுதியாக 2017  டிசம்பரில் நிறைவடைந்து. 201ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பணிகள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.21,200 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.15,100 கோடி ஜைகா நிறுவனத்திடமிருந்து கடன்.

மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு எப்படி உதவும்?

* MMRDA மற்றும் JICA நடத்திய ஆய்வின்படி, மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு ஆனது செவ்ரி மற்றும் சிர்லே இடையேயான சராசரி பயண நேரத்தை தற்போது 61 நிமிடங்களில் இருந்து 16 நிமிடங்களுக்கும் குறைவாகக் குறைக்கும். தொடக்க ஆண்டில் (2024) ஒவ்வொரு நாளும் 40,000 வாகனங்கள் இணைப்பைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த திட்டம் நவி மும்பையை மும்பையுடன் அதிக பொருளாதார ஒருங்கிணைப்பை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் நன்மைகள் பன்வெல், அலிபாக், புனே மற்றும் கோவா வரை நீட்டிக்கப்படுகின்றன.

இது தெற்கு மும்பை மற்றும் கட்டுமானத்தில் உள்ள நவி மும்பை சர்வதேச விமான நிலையம், மும்பை புனே எக்ஸ்பிரஸ்வே, மும்பை-கோவா நெடுஞ்சாலை மற்றும் பொதுவாக முக்கிய உள்நாட்டிற்கு இடையேயான தொடர்பை கணிசமாக மேம்படுத்தும். இது ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு மேம்பட்ட அணுகலை வழங்கும்.

சில கேள்விகள் உள்ளன

மெகாபோலிஸ் மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட சுற்றுப்புறத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் வெளிப்படையான பலன்களைக் கொண்டிருந்தாலும் தினமும் மும்பை மற்றும் நவி மும்பை இடையே பயணம் செய்யும் வழக்கமான பயணிகளுக்கு இது உதவியாக இருக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.

டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை ஒரு வழி கடக்க ரூ.250 கட்டணம் அதிகமாகக் கருதப்படுகிறது. பிரதான நிலப்பரப்பில் உள்ள பாலத்தின் தரையிறங்கும் இடங்கள் - உல்வேயில் உள்ள சிவாஜி நகர் மற்றும் சிர்லே - முக்கிய குடியிருப்பு பகுதிகளான வாஷி, நெருல், சன்படா, ஜூய்நகர் மற்றும் சீவுட்ஸ் ஆகியவற்றிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது. இது பயணச் செலவை அதிகரிக்கும்.

பிரத்யேக பாதையில் பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்து வசதிகள் எதுவும் பாலத்தில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Read in English: Mumbai Trans Harbour Link inauguration today: How the country’s longest sea bridge will cut travel time

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment