கவிதா ஐயர், கட்டுரையாளர்
மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை என்.சி.பி தலைவர் அஜித் பவார் ராஜினாமா செய்வதற்கு முந்தைய நாள் திங்கள்கிழமை ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.பி) பல கோடி ரூபாய் நீர்ப்பாசன ஊழல் தொடர்பான ஒன்பது வழக்கு விசாரணைகளை மூடிவிட்டதாகக் கூறியுள்ளது.
பாஜக தலைமையில் அரசு அமைக்க (இப்போது ராஜினாமா செய்துவிட்டார்) ஆதரவு அளித்த அஜித் பவார், குற்றமற்றவர் என சான்று அளிப்பதற்காக இது செய்யப்படவில்லை என்று ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் அஜித் பவார் எங்கே வருகிறார்?
அஜித் பவார் முந்தைய காங்கிரஸ்-என்.சி.பி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில், அவர் தலைவராக இருந்த விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகம் (வி.ஐ.டி.சி) உட்பட நீர்ப்பாசன திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. மகாராஷ்டிராவில் ஐந்து மண்டல சிறப்பு நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகங்கள் உள்ளன.
இதில் எந்தவொரு எஃப்.ஐ.ஆர்.-களிலும் அஜித் பவார் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், நீர்ப்பாசன திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் அஜித் பவார் தலையிட்டதாக ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பார்வே 2018 நவம்பரில் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் தெரிவித்திருந்தார்.
விசாரணை நடத்தப்பட்ட 2,654 ஒப்பந்த அறிவிப்புகளில் 45 ஒப்பந்தங்கள் வி.ஐ.டி.சி.-க்கானது. இதில் 9 வழக்கு விசாரணைகள் மூடப்பட்டது.
ஊழல் தடுப்பு பிரிவு, 212 ஒப்பந்தங்களில் விசாரணை முடித்துவிட்டது என்றும் பதிவு செய்யப்பட்ட 24 வழக்குளில் 5 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.
ஜூன் 2011 நிலவரப்படி, மகாராஷ்டிரா நீர்வளத் துறையால் 3,712 பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் நடந்துகொண்டிருக்கும் திட்டங்கள் மூலம் 48.26 லட்சம் ஹெக்டருக்கு பாசன வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜூன் 2012 நிலவரப்படி பயன்படுத்தப்பட்ட நீர்ப்பாசன திறன் 32.51 லட்சம் ஹெக்டர் அல்லது 67.36% மட்டும்தான்.
2001-02 மற்றும் 2011-12 ஆண்டுகளுக்கு இடையில், நீர்வளத் துறை திட்டங்கள் குறித்த இந்தியாவின் வரவுசெலவு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் (சிஏஜி) பல்வேறு அறிக்கைகள், நீண்டகால திட்டங்கள் இல்லாதது, திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்காதது, நிறைவு செய்வதில் தாமதம், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் பணிகளைத் தொடங்குதல் போன்றவற்றை சுட்டிக்காட்டியது.
குற்றச்சாட்டுகள் முதலில் எப்படி வெளியானது?
2012 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா பொறியியல் பயிற்சி அகாடமியின் தலைமை பொறியாளரும், முன்னாள் நீர்ப்பாசனத் துறை பொறியியலாளருமான விஜய் பண்டாரே முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் மற்றும் ஆளுநர் கே.சங்கரநாராயணன் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
அதில் பல்வேறு நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகங்களால் வழங்கப்பட்ட அணை கட்டும் ஒப்பந்தங்களில் அதிகப்படியான செலவு மதிப்பீடுகள் மற்றும் பிற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைகளை பரிந்துரைத்திருந்தார்.
இந்த வழக்கில், பல ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்ததாக விவரங்கள் வெளிவந்தால் துணை முதல்வர் அஜித் பவார் பதவி விலகினார். இதனால், வழக்கு விசாரணைக்கு காரணமான பண்டாரேவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியிருந்தது. பின்னர், பண்டாரே 2014 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட பண்டாரே தோல்வி தோல்வியடைந்தார்.
இந்த முறைகேடுகளை பரப்பிய செயல்பாட்டாளர் அஞ்சலி தமானியா, இவரும் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். மற்றொரு செயல்பாட்டாளர் பிரவீன் வதேகோன்கரும் தோல்வியடைந்தார்.
அன்றைய அரசாங்கம் எவ்வாறு பதிலளித்தது?
இந்த ஊழல் குறித்த ஆரம்ப விவரங்கள் பிப்ரவரி 2012 இல் பாண்டாரேவின் முதல் கடிதத்தில் வந்துள்ளன. மார்ச் 2012 இல், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு பொருளாதார ஆய்வு அறிக்கையில், ஒரு தசாப்தத்தில் நீர்ப்பாசனத்தின் கீழ் உள்ள பகுதிக்கு சுமார் ரூ.70,000 கோடி செலவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, என்.சி.பி நீர்வளத் துறையை கட்டுப்படுத்தி இருந்தவரை அஜித் பவார் அந்தக் காலத்தில் ஒரு நல்ல பகுதிக்கு அமைச்சராக இருந்தார்.
என்.சி.பி தரவுகளை எதிர்த்தது. ஆனால், முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் எதிர்க்கட்சிகளின் விசாரணை கோரிக்கையை ஆதரித்தார். (அடுத்தடுத்த ஆண்டுகளில் பொருளாதார ஆய்வு அறிக்கைகள், நீர்ப்பாசனத்தின் பரப்பளவு அதிகரிப்பு ஆகியவை எளிதாக கைவிடப்பட்டது.) ஆகஸ்ட் 2012 இல், பிருத்விராஜ் சவான் ஒரு வெள்ளை அறிக்கையை தயாரிக்க உத்தரவிட்டார்; செப்டம்பரில், அஜித் பவார் அமைச்சரவையில் இருந்து விலகினார், வெள்ளை அறிக்கை வழங்கப்பட்ட பின்னர் டிசம்பரில் அமைச்சர் பதவிக்கு திரும்பினார். எதிர்க்கட்சி ஒரு பாரபட்சமற்ற விசாரணையை வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து 2012 டிசம்பர் 31 அன்று காங்கிரஸ்-என்சிபி அரசு முன்னாள் மத்திய நீர்வளத்துறை செயலாளர் டாக்டர் மாதவ் சிட்டாலே தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. ஜூன் 2014 இல், சிட்டாலே கமிட்டி அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது அஜித் பவார் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் சுனில் தட்கரே ஆகியோரை குற்றமற்றவர்கள் என்று கூறியது. அதற்கு பதிலாக உயர் அதிகாரிகளை குற்றம் சாட்டியது. மாநிலத்தில் நீர்ப்பாசன திறன் 10 ஆண்டுகளில் 0.1% அல்ல, 20% அதிகரித்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையையும் மாநில அரசு தாக்கல் செய்தது.
இந்த விவகாரத்தில் வேறு அறிக்கைகள் வந்ததா?
2014 ஆம் ஆண்டில், சிஏஜி 2007 மற்றும் 2013 ஆண்டுகளுக்கு இடையில் ‘நீர்ப்பாசன திட்டங்களை நிர்வகித்தல்’ குறித்த செயல்திறனை தணிக்கை மேற்கொண்டது. இது 2012 முதல் செயல்பாட்டாளர்கள் முன்வைத்த சில குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியது. அதன் கண்டுபிடிப்புகளில்: மகாராஷ்டிரா நீர்வள ஒழுங்குமுறை ஆணையம் 2007-13 ஆம் ஆண்டில் 189 திட்டங்களை நீக்கியது. நீக்கப்பட வேண்டிய மாநில நீர்வளத் திட்டமும் எதுவும் இல்லை என்றாலும் முன்னுரிமை இல்லாததால், பின்தங்கிய மாவட்டங்களில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. முன்னுரிமை இல்லாததால், பின்தங்கிய மாவட்டங்களில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன, இதன் விளைவாக வளங்கள் மெதுவாக பரவின.
நீர்வளத்துறை “ஜூன் 2013 நிலவரப்படி செயல்படுத்தப்பட்ட 601 திட்டங்களுடன் சேர்ந்துள்ளது. இதற்கு ரூ.82,609.64 கோடி இருப்பு செலவு இருப்பு உள்ளது” என்று கூறியுள்ளது. மீதமுள்ள செலவு 2012-13 ஆம் ஆண்டிற்கான மூலதன மானியத்தின் ஒன்பது மடங்கு ஆகும்.
பல சந்தர்ப்பங்களில், வேலை தொடங்குவதற்கு முன்பு நிலம் கையகப்படுத்தல் முடிக்கப்படவில்லை. அதனால், பணிகள் நிறுத்தப்படுவதற்கும் தாமதங்களுக்கும் வழிவகுத்தது. மேலும், பணிகளுக்கு முன் முறையற்ற ஆய்வுகளால் செலவு அதிகரித்தன. நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகங்களும் மகாராஷ்டிரா பொதுப்பணி கையேட்டின் விதிகளை மீறியுள்ளன. இது நிர்வாக ஒப்புதல்களுக்கு மேல் 10% க்கும் அதிகமான செலவினங்களை, திருத்தப்பட்ட நிர்வாக ஒப்புதல்களுக்கு மேல் அதிகாரத்தின் ஒப்புதல் இல்லாமல்அனுமதித்தது.
இந்த குற்றச்சாட்டுகளை கடந்த அரசு எப்படி பின்தொடர்ந்தது?
எதிர்க்கட்சியில் இருந்தபோது, பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் விசாரணை கோருவதில் முன்னணியில் இருந்தார். 2014 டிசம்பரில், அவர் முதல்வராக பொறுப்பேற்ற ஒரு மாதத்திலேயே, நீர்ப்பாசன ஊழலில் அஜித் பவார் மற்றும் தட்கரே ஆகியோரின் பங்கு குறித்து ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைகளுக்கு ஃபட்னாவிஸ் ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்பந்தம் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாத்திரங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொங்கனின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கொன்டேன் அணை திட்டத்தின் நிதி முறைகேடுகளில் நான்கு நான்கு பொறியாளர்களை அரசு இடைநீக்கம் செய்தது. இது தட்கரே அமைச்சராக இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்டது. அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்றால், திட்டத்தின் செலவு ரூ.80.35 கோடியிலிருந்து 327.62 கோடியாக உயர்த்தப்பட்டது. அணையின் உயரத்தை 32.30 மீட்டராக உயர்த்துவதற்கான முடிவு, மேல் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறாமல் எடுக்கப்பட்டது என்பதே குற்றச்சாட்டுகள் ஆகும். இதனால், 45 அதிகாரிகள் துறை ரீதியான விசாரணைகளை எதிர்கொண்டனர்.