Advertisment

நாதுராம் கோட்சே மீது விசாரணை: காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு என்ன நடந்தது?

பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், காந்தியைக் கொல்ல சதி செய்யப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என்றதற்கு கோட்சே எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மனம் திருந்தவில்லை என்று கொட்சேவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி கோஸ்லா எழுதியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gandhi, death, date, godse, anniversary, january 30, how was Gandhi killed, மகாத்மா காந்தி, காந்தி படுகொலை, நாதுராம் கோட்சே, கோட்சே விசாரணை, who killed gandhi, nathuram godse, VD savarkar, Narayan Apte, express explained, current affairs

1948 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தால் கோட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், காந்தியைக் கொல்ல சதி செய்யப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என்றதற்கு கோட்சே எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மனம் திருந்தவில்லை என்று கொட்சேவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி கோஸ்லா எழுதியுள்ளார்.

Advertisment

75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் (ஜனவரி 30), மகாத்மா காந்தி டெல்லியில் உள்ள பிர்லா ஹவுஸில் பிரார்த்தனை மண்டபத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​35 வயதான நாதுராம் கோட்சே அவருக்கு முன்னால் வந்து தனது பாக்கெட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து, காந்தியின் மார்பு, வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டான். 15 நிமிடங்களில், தேசத்தந்தை மகாத்மா காந்தி இறந்தார்.

அந்த இடத்தில் இருந்த ராணுவ வீரர்கள் உடேனே கோட்சேவை கைது செய்து, அவரது கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கொலையாளியை போலீசார் கைது செய்யும் முன் கூட்டத்தால் தாக்கப்பட்டார். இதையடுத்து, அவர் துக்ளக் சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோட்சே மீது விசாரணை

டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 1948-ம் ஆண்டு மே மாதம் விசாரணை தொடங்கியது. இந்த செங்கோட்டை நினைவுச் சின்னம் முன்பு கடைசி முகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர் பர்மாவிற்கு நாடு கடத்தப்பட்டு 90 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய தேசிய இராணுவத்தின் உறுப்பினர்களின் இடமாக இருந்தது.

இந்த வழக்கு விசாரணை இந்திய குடிமைப் பணி நீதித்துறையின் மூத்த உறுப்பினரான சிறப்பு நீதிபதி ஆத்மா சரண் முன் நடந்தது. அப்போது பம்பாய் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த சி.கே.டாப்டரி, பின்னர் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், பின்னர் இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாகவும் ஆனார்.

இந்த வழக்கில் கோட்சே உடன் நாராயண் ஆப்தே மற்றும் விநாயக் சாவர்க்கர் உள்பட மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் விருப்பப்படி வழக்கறிஞரின் உதவியைப் பெற அனுமதிக்கப்பட்டனர்.

அசோக் குமார் பாண்டேவின், “அவர்கள் ஏன் காந்தியைக் கொன்றார்கள்: மறைக்கப்படாத சிந்தாந்தமும் சதியும்’ (‘Why They Killed Gandhi: Unmasking the Ideology and the Conspiracy) என்ற புத்தகத்தில், “சட்டம் அதன் கடமையை செய்தது. அதில் அவருக்கு (கோட்சே) அரசாங்க செலவில் சட்ட உதவி வழங்கப்பட்டது, அவர் சிறையில் இருந்தபோது அவரது பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. விசாரணையின் இரண்டாவது நாளில், காவலில் இருந்தபோது, அனைவரும் தன்னிடம் முறையாக நடந்துகொண்டனர் கோட்சே ஒப்புக்கொண்டார்” என்று பாண்டே எழுதியுள்ளார்.

ஜூன் மற்றும் நவம்பர் 1948-க்கு இடையில், சிறப்பு நீதிமன்றம் 149 சாட்சிகளை விசாரித்தது. 404 ஆவணங்கள் மற்றும் 80 சாட்சிப் பொருள்கள் ஆதாரங்களாக அரசுச் தரப்பு முன் வைத்தது.

கோட்சே மற்றும் பிறரின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி ஜி.டி.கோஸ்லாவின் கருத்துப்படி, இந்த வழக்கு விசாரணையின் போது, அரசுத் தரப்புக்கு மிக முக்கியமான சாட்சியாக திகம்பர் பேட்ஜ் இருந்தார். “அவர் சதிகாரர்களில் ஒருவராகவும், கொலைத் திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவராகவும் குற்றம் சாட்டப்பட்டார்” என்று நீதிபதி கோஸ்லா தனது 'மகாத்மாவின் படுகொலை' புத்தகத்தில் எழுதியுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, பேட்ஜ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது கூட்டாளிகளை குற்றஞ்சாட்ட ஒப்புக்கொண்டார் என்று நீதிபதி கோஸ்லா எழுதியுள்ளார்.

பிப்ரவரி 10, 1949 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ஆத்மா சரண், நாதுராம் கோட்சே, ஆப்தே மற்றும் 5 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். கோட்சே மற்றும் ஆப்தே இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து குற்றவாளிகள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் நீதிபதி அறிவித்தார். நான்கு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சிம்லாவில் அமைந்திருந்த அது அப்போது கிழக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்பட்டது.

இதில் சுவாரஸ்யமாக, தண்டனையை எதிர்ப்பதற்கு பதிலாக, கோட்சேவின் மேல்முறையீடு, காந்தியின் கொலையில் அவர் மட்டும் ஈடுபடவில்லை என்றும், அவரைக் கொல்ல பெரிய சதி இருப்பதாகவும் நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி கோஸ்லா, நீதிபதி ஏஎன் பண்டாரி, நீதிபதி அச்சு ராம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, கோட்சே ஒரு வழக்கறிஞர் மூலமாக ஆஜராக மறுத்தார். தனது மேல்முறையீட்டு மனுவில் தானே வாதாட அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

நீதிபதி கோஸ்லா நீதிமன்றத்தில் கூறுகையில், கொலையாளி தனது குற்றத்திற்காக வருந்தவில்லை என்றும், அச்சமற்ற தேசபக்தர் மற்றும் இந்து சித்தாந்தத்தின் உணர்ச்சிமிக்க கதாநாயகனாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறினார்.

“அவர் (கோட்சே) தனது கொடூரமான குற்றத்திற்காக முற்றிலும் வருத்தப்படவில்லை. அவரது நம்பிக்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாகவோ அல்லது கடைசியாக பகிரங்க மன்னிப்பு கேட்பதற்காகவோ இந்த வாய்ப்பை நாடவிலை. அவர் மறதிக்குள் மறைந்து போவதற்கு முன்பு தனது திறமைகளை வெளிப்படுத்த இந்த வாய்ப்பை நாடியுள்ளார்” நீதிபதி கோஸ்லா எழுதியுள்ளார்.

இந்த நீதிபதிகள் அமர்வு ஜூன் 21, 1949-ல் தனது தீர்ப்பை வழங்கியது. அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட தத்தாத்ராய பார்ச்சூர் மற்றும் ஷங்கர் கிஸ்தாய்யா ஆகியோரின் வழக்குகளைத் தவிர, கீழ் நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் தண்டனைகளை இது உறுதிப்படுத்தியது.

இறுதி மேல்முறையீடு

குற்றவாளிகள் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவின் உச்ச நீதிமன்றமாக இருந்த தனி சிறப்பு கவுன்சிலில் மேல்முறையீடு செய்ய சிறப்பு அனுமதி கோரியும் மனு தாக்கல் செய்தனர். அது 1950-ல் உச்ச நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது. இருப்பினும், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோரின் கருணை மனுக்களை இந்திய கவர்னர் ஜெனரல் நிராகரித்ததை அடுத்து அவர்கள் தூக்கிலிடப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. கோட்சேவின் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது அவர் அல்ல, அவரது பெற்றோர் தாக்கல் செய்தனர். இருவரும் நவம்பர் 15, 1949 அன்று அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mahatma Gandhi Nathuram Godse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment