scorecardresearch

இந்தியாவில் ஏன் ஒரு கமலா ஹாரிஸ் உருவாகியிருக்க முடியாது?

21 ஆம் நூற்றாண்டில் பெரும்பான்மை வாதத்தை முன்னிலைப் படுத்தும் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள், கமலா ஹாரிஸ் உருவாக்கியிருக்க முடியாது.

இந்தியாவில் ஏன் ஒரு கமலா ஹாரிஸ் உருவாகியிருக்க முடியாது?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டது, இந்தியாவை மகிழ்ச்சியடைய வைத்தது. அவர் ‘எங்கள்  நாட்டுப் பெண்’ என்ற ஒற்றைக் கருத்து   அனைவரிடத்திலும் மேலோங்கியது.  இருப்பினும், கமலா ஹாரிஸின்   அசாதாரண வளர்ச்சி, இந்தியாவின் அடிப்படை உண்மைகளை எப்படி வெளிபடுத்துகின்றன என்பது பேசப்படவில்லை என்று  என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் பங்களிப்பு ஆசிரியர் நிருபமா சுப்பிரமணியன்  தனது கட்டுரையில் எழுதினார்.

” முதலாவதாக, 21 ஆம் நூற்றாண்டில் பெரும்பான்மை வாதத்தை முன்னிலைப் படுத்தும் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள், கமலா ஹாரிஸை உருவாக்கியிருக்க முடியாது” என்று ஆசிரியர் தெரிவிக்கிறார்.

சிறுபான்மை இனத்த்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாக  கமலா ஹாரிஸ் நாட்டின் தலைமை பதவிக்கு முன்னேறியுள்ளார். இது, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் உயர்வை பின்தொடர்கிறது . இதற்கு முக்கிய காரணம், அமேரிக்க அரசியல்  பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதாக ஆசிரியர் தனது கட்டுரையில் தெரிவித்தர்.

அமெரிக்காவின் இனம், நிறம் ரீதியான பாகுபாடு  இன்னும் அங்கு நீர்த்துப்போகவில்லை என்பதை  அமெரிக்காவின் சமீபத்திய ஆர்ப்பாட்டங்கள் நிரூபித்துள்ளது உண்மை தான். பல வழிகளிலும், இனப்பாகுப்பாடு அங்கு ஆழமாக பரவ தொடங்கியுள்ளது. இருப்பினும்,  அதன் ஜனநாயக உள்ளுணர்வுகளும் ஆழமாக உள்ளது என்று ஆசிரியர் விவரிக்கிறார்.

A majoritarian democracy like India could not have produced a Kamala Harris

சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் மூலம், ” வெள்ளை இன மேலாதிக்கத்தின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு…. மேலாதிக்கத்திற்கு எதிராக அரசு தன்னாட்சி முகமைகள், அரசியல், ஊடகங்கள், சிவில் சமூகங்கள் முன்னேடுக்கும் இடைவிடாத போராட்டம், சிவில் சமூகத்தின் மீது அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அழுத்தம்” போன்றவைகளை நம்மால் தெளிவாக  தெரிந்துக் கொள்ள முடிகிறது.

அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவது ஒன்றும்  புதிதல்ல. அமெரிக்கா அரசியல் தலைமை பதவிகளில் கறுப்பின மக்களின் பங்கு கடந்த 50 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய ஒரு கட்டமைப்பில் தான் கமலா ஹாரிஸ் ஒரு அரசியல்வாதியாக வளர்ந்தார். தமிழ் பிராமண வம்சாவளியை சேர்ந்தவர் என்று எடுத்துக் கொண்டாலும், அமெரிக்காவில் ஹாரிஸின் கண்ட அரசியல் உயர்வை, இந்திய அரசியலில்  இஸ்லாம் மக்கள்  பிரதிநிதித்துவத்தோடு  நாம் ஒப்பிட வேண்டும்,  ”என்று சுப்பிரமணியன் தனது கட்டுரையில் தெரிவித்தார்.

இந்தியாவில், மிகப்பெரிய மத சிறுபான்மையினராகவும், மக்கள்தொகையில் சுமார் 15 சதவீதமாகவும் உள்ள இஸ்லாமியர்கள், அமெரிக்காவின் கறுப்பின சமூகத்துடன்  ஒப்பிடக்குயவர்கள் தான். ஆனால், இஸ்லாமியர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பல தசாப்தங்களாக குறைந்து வருகிறது. 1980 வருட மக்களவைத் தேர்தலில் 49 இடங்கள் என்பதுதான் இதுவரை அதிபட்ச எண்ணிக்கையாக உள்ளது.

ஆகஸ்ட் 19 ம் தேதி  அன்று அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ளும் உரையில் பேசிய கமலா ஹாரிஸ், ” பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் சமத்துவம், சுதந்திரம், நீதி கிடைக்கும் வகையில் தமது பணி இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.  மேலும், கமலா ஹாரிஸ் நாட்டைப் பற்றி குறிப்பிடுகையில், ” ஒருவரையொருவர் பார்த்துக்  கொண்டோம். வாழும், வீழும் போதும் நாம் ஒன்றாக இருந்தோம்.  சவால்களை ஒன்றாக எதிர் கொண்டோம் . வெற்றிகளை ஒன்றாக பகிந்தோம். இன்று … அந்த நாடு தொலைவில் இருப்பதாக  உணர்கிறேன் ,”  என்றும்  அவர் கூறினார்.

கமலா ஹாரிஸ் தனது உரையில் இந்தியாவைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். அங்கு அவரைப் போன்ற ஒரு நபர் பரிந்துரைக்கப்பட்டால், சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் செயல், பெரும்பான்மைக்கு எதிரான கட்சி  என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் என்று  கூறி நிருபமா சுப்பிரமணியன் தனது கட்டுரையை முடிக்கிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Majoritarian democracy like india could not have produced a kamala harris