தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசர்... விநோத மலேசியா!

ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை, இவ்வாறு ஒரு மன்னர் ஆட்சியில் நீடிக்கலாமா இல்லையா என்பதை இவர்கள் தான் முடிவு செய்கிறார்கள்.

ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை, இவ்வாறு ஒரு மன்னர் ஆட்சியில் நீடிக்கலாமா இல்லையா என்பதை இவர்கள் தான் முடிவு செய்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Malaysian Monarch interesting facts

Malaysian Monarch interesting facts

Malaysian Monarch interesting facts :  மன்னராட்சிக்கும் குடியாட்சிக்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் வாக்குகள் தான். மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வது மக்களுக்கான ஆட்சியாக, மக்கள் விரும்பும் ஆட்சியாக என்றும் இருக்கும். ஆனால் முடியாட்சியோ, ஒரு அரசின் குலம், அரசின் வாரிசுகள், சிம்மாசனத்திற்கு உரிய மகன்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அதிகாரம் ஆகும்.

மலேசியாவின் புதிய அரசர்

Advertisment

ஆனால் தேர்தல் மூலமாக மன்னர் ஒருவரை  தேர்வு செய்யும் நாடு ஒன்று உலகில் உள்ளது உங்களுக்கு தெரியுமா?  இந்த வாரத்தின் ஆரம்பத்தில் மலேசியா நாடு தங்களின் 16வது அரசரை தேர்தல் மூலம் தேர்வு செய்தது. 1957ம் ஆண்டு மலேசியா பிரிட்டிஷிடம் இருந்து  சுதந்திரம் அடைந்த பின்பு இருந்து இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. மலேசியாவின் பஹாங் மாகாணத்தின் சுல்தானாக இருந்த அப்துல்லா தற்போது புதிய மலேசிய மன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் 15வது மன்னராக கேலந்தான் மாகாணத்தை சேர்ந்த முகமது என்பவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஜனவரியில், ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண்ணை மணப்பதற்காக இந்த அரச பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அந்த மண வாழ்க்கை ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. அவரைத் தொடர்ந்து அப்துல்லா பதவி ஏற்றுள்ளார்.

மேலும் படிக்க : இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

மலேசியாவின் உயர்ந்த அரசு அலுவலகம் யாங் டி-பெர்துஆன் அகோங் (Yang di-Pertuan Agong) என்று அழைக்கப்படுகிறது. தேர்தல் முறையை மேற்கோள்காட்டும் அவ்வாக்கியம் “இவர் தான் எங்களின் கடவுளை உருவாக்குகின்றார் (He Who is Made Lord)” என்ற அர்த்தத்தை அது தருகிறது. உலகில் வேறெங்கும் இது போன்ற ஒரு மன்னராட்சி இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் மன்னர்களை தேர்வு செய்கின்றனர்.

எலெக்டெட் மோனார்ச் என்றால் என்ன?

Advertisment
Advertisements

மலேசியாவின் 9 ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள், மலேசியாவின் 9 மாகாணங்களை ஆட்சி செய்து வருகிறார்கள். ஜொஹோர், கேதாஹ், கெலந்தான், கெகேரி செம்பிலான், பஹாங், பெராக், பெர்லிஸ், செலங்கூர், மற்றும் தெரெங்கனு என்ற 9 மாகாணங்களை அவர்கள் ஆட்சி செய்து வருகிறார்கள். அவர்கள் சுல்தான் என்று அழைக்கப்படுகிறார்கள். நெகேரி செம்பிலான் மற்றும் பெரிலிஸ் ஆகிய இடங்களில் அவர்கள் யாங்க் - டி பெர்துவான் பெசார் என்றும் ராஜா என்றும் முறையாக அழைக்கப்படுகிறார்கள்.

காலனிய ஆதிக்கம் மலேசியாவில் 1957ல் முடிவுக்கு வந்தது. இந்த 9 சுல்தான்களும் சேர்ந்து ஒரு அரசரை முடிவு செய்யும் வழக்கமும் அன்றில் இருந்து தான் உருவானது. ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை, இவ்வாறு ஒரு மன்னர் ஆட்சியில் நீடிக்கலாமா இல்லையா என்பதை இவர்கள் தான் முடிவு செய்கிறார்கள்.  மலாக்கா, பெனாங்க், சரவாக், சபா ஆகிய மாகாணங்களில் உள்ள கவர்னர்களும் இந்த மன்னர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மன்னராட்சியின் சரித்திரம்

இந்த மன்னராட்சி 15ம் நூற்றாண்டிற்கும் முந்தைய வரலாற்றை தன்னகத்தில் கொண்டுள்ளது. பரமேஷ்வரா என்று அழைக்கப்பட்ட மன்னர் அவர் பிற்காலத்தில் இஸ்லாத்திற்கு மதம் மாறினார். இஸ்கந்தர் ஷா என்ற பெயரில் அவர் மலாக்காவின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.  ஆனால் பிற்காலத்தில் தன்னுடைய சாம்ராஜ்ஜியமும், அவர்களின் அதிகாரமும் செயலிழக்கத் துவங்கியது. பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் இவர்கள் பெரிதாக பங்கேற்கவில்லை. மலேசியா சுதந்திரம் அடைந்த பிறகு பெரும் அளவில் விழாக்களை மட்டுமே நடத்தி வந்தனர்.

ஆனாலும் பிரதம அமைச்சரை நியமனம் செய்வது, மற்ற மந்திரிகளை நியமனம் செய்வது உள்ளிட்ட மிக முக்கியமான பங்குகளில் இந்த அரசாங்கம் இயங்கி வருகிறது. மேலும் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் உருவாக்கப்படுகிறது என்றால் அதற்கு இவர்களின் சம்மதமும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Malaysia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: