மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக கூறி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) அதிகாரிகள் சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர். மதுபானக் கொள்கையின் பல்வேறு அம்சங்கள், எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள தினேஷ் அரோரா மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சிசோடியாவின் தொடர்பு உள்பட பல கேள்விகளை சி.பி.ஐ அவரிடம் எழுப்பி விசாரணை மேற்கொண்டது. தொலைபேசி உரையாடல்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டது.
துணை முதல்வர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்கவில்லை அதனால் கைது செய்யப்பட்டதாக சி.பி.ஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. சிசோடியா கைதிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார். “அவர் நிரபராதி. இது ஒரு மோசமான அரசியல் என்று கூறினார். தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மனீஷ் கைது செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. எல்லோரும் பார்க்கிறார்கள். மக்கள் அனைத்தையும் புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை குறித்து சிபிஐ கூறிவது
டெல்லி கலால் கொள்கை 2021-2022 தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆரில் சிசோடியா உள்பட 15 நபர்களின் பெயர் குறிப்பிட்டுள்ளது. இதில் சிசோடியா பெயர் முதன்னையான குறிப்பிடப்பட்டுள்ளது. சிசோடியா, அப்போதைய டெல்லி கலால் ஆணையர் ஆரவ கோபி கிருஷ்ணா மற்றும் 2 மூத்த கலால் துறை அதிகாரிகள், “2021-ம் ஆண்டுக்கான கலால் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கும், பரிந்துரை செய்வதற்கும் உறுதுணையாக இருந்தனர்”. உரிமம் பெற டெண்டருக்கு முறைகேடாக சலுகைகளை வழங்கும் நோக்கத்துடன் தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் நடைபெற்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விபரம். Only Much Louder என்ற Entertainment and Event management நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் நாயர், மனோஜ் ராய், ஒயின் மற்றும் ஸ்பிரிட்ஸ் நிறுவனமான பெர்னோட் ரிக்கார்டின் முன்னாள் ஊழியர், பிரிண்ட்கோ ஸ்பிரிட்ஸ் உரிமையாளர் அமந்தீப் தால் மற்றும் சமீர் மகேந்திரு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Indospirit இன் உரிமையாளர், “கலால் கொள்கையை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துவதில் முறைகேடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்” என்று கூறப்படுகிறது.
எஃப்ஐஆர் படி, “எல்-1 உரிமம் வைத்திருப்பவர்களில் சிலர், பொது ஊழியர்களுக்கு தேவையற்ற பணப் பலன்களை அளிக்கும் நோக்கத்துடன் சில்லறை விற்பனையாளர்களுக்கு கடன் குறிப்புகளை வழங்குகிறார்கள். முறைகேடாக பதிவு செய்தார்கள்”என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சிசோடியாவின் வீட்டில் ஆகஸ்ட் 2022 இல் சிபிஐ சோதனை நடத்தியது.
டெல்லியின் மதுபானக் கொள்கை என்ன?
டெல்லி மதுபானக் கொள்கை 2020 இல் முன்மொழியப்பட்டது. நவம்பர் 2021 இல் நடைமுறைக்கு வந்தது. டெல்லியை 32 மண்டலங்களாகப் பிரித்து அதில் ஒவ்வொரு மண்டலத்தில் 27 மதுபான விற்பனை கடைகள் வைக்கப்பட்டன. தனியார் மதுபானக் கடைகள் மட்டுமே நகரத்தில் இயக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு நகராட்சி வார்டிலும் 2-3 கடைகள் வைக்கப்பட்டன, இது மதுபான மாஃபியா மற்றும் கறுப்புச் சந்தையை முடிவுக்குக் கொண்டு வருவது, வருவாயை அதிகரிப்பது மற்றும் நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்துவது மற்றும் மதுபான விற்பனை நிலையங்களின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
அரசாங்கம் நிர்ணயித்த MRP விலையில் இருந்து தள்ளுபடிகளை வழங்க அனுமதிப்பது, அவர்களின் சொந்த விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகைள் உரிமையாளர்களுக்கு அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து, விற்பனையாளர்களால் தள்ளுபடிகள் வழங்கப்பட்டன. இது மதுபிரியர்களை ஈர்த்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, கலால் துறை பின்னர் தள்ளுபடியை திரும்பப் பெற்றுக் கொண்டது.
புதிய கலால் கொள்கை 2021-22 அமலுக்கு வந்த பிறகு, அரசின் வருவாய் 27 சதவீதம் அதிகரித்து, சுமார் ரூ.8,900 கோடியை எட்டியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/