பந்தய குதிரைகள் வாங்குவது முதல் அறை முழுவதும் கொட்டிக்கிடந்த நகைகள் வரை, துபாள் ஆட்சியாளருக்கும் அவரது முன்னாள் மனைவிக்கும் இடையே அரங்கேறிய சட்ட போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல்-மக்தூமு பிரிந்து சென்ற மனைவிக்கு ஜீவனாம்சமாக 500 மில்லியன் பவுண்டு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 5,500 கோடி தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இளவரசி ஹயா
ஜோர்டானில் பிறந்து, பிரிட்டனில் கல்வி பயின்ற 45 வயதான இளவரசி ஹயா, கோடால்பின் குதிரை பந்தய அமைப்பின் உரிமையாளரான ஷேக் முகமதை 2004ம் ஆண்டு திருமணம் செய்து, அவரது ஆறாவதும், இளைய மனைவியுமாக மாறினார். அவரது ஆடம்பர வாழ்க்கை முறையின் பின்னணி குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
பிளாக்மெயில்
நீதிமன்ற விசாரணையின் போது, ஹயாவிடம், பாதுகாவலருடன் தொடர்பில் இருந்ததை வெளியே சொல்வதாக மிரட்டிய சம்பவத்தில், பாதுகாப்புக் குழுவின் பெயர் குறிப்பிடப்படாத நான்கு நபர்களுக்கு அவர் செலுத்திய 6.7 மில்லியன் பவுண்டுகள் குறித்தும், குழந்தைகளின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை ஏதற்கு பயன்படுத்தினர் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய அவர், ” நான் மிகவும் பயந்துவிட்டேன். அப்போது என்னிடம் இருந்த பணமும் அது மட்டும் தான்” என கூறியுள்ளார்.
அப்போது பேசிய ஷேக் வழக்கிறஞர் நிகல் டையர், “முதலில் பாதுகாப்பு காவலருக்கு 1.12 மில்லியன் பவுண்ட் அணுப்பியுள்ளனர். அதற்கு முன்னதாக, மேலும் இருவர் மிரட்டி 4 மில்லியன் பவுண்ட் வாங்கியுள்ளனர். இறுதியாக, நான்காவது நபருக்கு 1.2 மில்லியன் பவுண்ட வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

வாதத்தை கேட்ட நீதிபதி பிலிப் மூர், யாரும் மிரட்டப்படக்கூடாது, இந்த கட்டத்தில் (ஹயா) மிகவும் பயந்திருக்க வேண்டும். மிரட்டியவர்களுக்கு தனது சொந்த பணத்தை ஹயா கொடுத்திருக்கலாம். ஆனால், அப்போது அவரது இக்கட்டான சூழ்நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. முகமது ஒருபோதும் அவர் மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடிக்க கூடாது என இருந்துள்ளார்” என தெரிவித்தார்.
மாளிகைகள்:
லண்டன் வீடு: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அவரது மனைவி வசிக்கும் கென்சிங்டன் அரண்மனைக்கு அருகிலுள்ள மாளிகையை 2016 ஆம் ஆண்டில் 87.5 மில்லியன் பவுண்டுகளுக்கு ஹயா வாங்கினார். தற்போது, அதன் மதிப்பு சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.அந்த அரண்மனை 2017-18 இல் 14.7 மில்லியன் பவுண்டுகள் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகளை 10 வருட புதுப்பித்தலுக்கு வேண்டும் என ஹயா கோரினார். மேலும் ஷேக் ஐந்து வீட்டுப் பணியாளர்கள் மற்றும் ஒரு கைவினைஞரின் செலவுகளை ஈடுகட்ட வேண்டும். இதுதவிர புதிய கர்டென், கார்பட்கள், உடைத்த பர்னிச்சர்கள் மாற்றுவதற்கு 900,000 பவுண்டுகளும், அங்கிருக்கும் பொருள்களை சுத்தம் செய்வதற்கு 100,000 பவுண்டும் வேண்டும் என கோரினார்.
வாதத்தை கேட்ட நீதிபதி மூர், 10 மில்லியன் பவுண்டுகள் மறுசீரமைப்புக்கும், 500,000 பவுண்டுகள் தேய்மானத்திற்கும், 223,000 பவுண்டுகள் பராமரிப்பு செலவுகளுக்கு வழங்க உத்தரவிட்டார்.
காஸில்வுட் மாளிகை:
பெர்க்ஷயரில் உள்ள தனது காஸில்வுட் மாளிகையைப் பராமரிப்பதற்காக ஆண்டுக்கு 770,000 பவுண்டுகள் வேண்டும் என இளவரசி கோரினார். அந்த தொகையில், மாளிகையின் இரண்டு மேலாளர்கள் மற்றும் மூன்று வீட்டுப் பணியாளர்களின் செலவுகள் அடங்கும். அப்போது வழக்கறிஞர் டையர், கடந்த 10 ஆண்டுகளில், அதாவது 4.5 மில்லியன் மதிப்புள்ள வீட்டிற்கு 7.7 மில்லியன் பவுண்டுகள் செலவழித்ததாக வாதிட்டார்.
வாதத்தை கேட்ட நீதிபதி, மாளிகையின் தேய்மான செலவுக்கு ஆண்டுக்கு 125,000 பவுண்டுகளும், 10 வருட மறுசீரமைப்புக்காக வருடத்திற்கு 200,000 பவுண்டுகள் வழங்கவும் உத்தரவிட்டார்.
குதிரைகள்
எப்சம் டெர்பி வெற்றியாளர் நியூ அப்ரோச் உட்பட 400க்கும் மேற்பட்ட பந்தயக் குதிரைகள் தனது பெயரில் ஓடியதாக கூறிய ஹயா, அந்த குதிரைகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களாக நானும், எனது குழந்தைகளும் தான் இருந்தோம். அவை என் பெயரில் ஓடுவதால் இழப்பீடாக 75 மில்லியன் பவுண்டுகள் வேண்டும் என கோரினார்.

குதிரை ஆர்வளரான முகமது, தனது சகோதரருடன் சேர்ந்து கோடோல்பின் குதிரை பந்தய அமைப்பை உருவாக்கினர். குதிரைகள் அவர் பெயரில் ஓடினாலும், அவை கோடோல்பின் சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது நீதிமன்றத்தில், ஹயா தனது குதிரைகளிடமிருந்து எந்த வெற்றியையும் பெற்றதில்லை என்று முகமது கூறினார். உடனே குறிக்கிட்ட ஹயா, துபாய் உலகக் கோப்பைக்குப் பிறகு மார்ச் 2018 இல் அவர் தனக்கு 15 மில்லியன் பவுண்டுகளான பரிசுத் தொகையை வழங்கினார் என்றார். ஆனால் அதை மறுத்த முகமது, அந்த தொகை தனது விருந்தினர்களை பார்த்துக்கொள்ளும் வேலையைச் சிறப்பாகச் செய்ததற்காக வழங்கியதாக கூறினார்.
வாதத்தை கேட்ட நீதிபதி, முகமதுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். குதிரைகள் கோடோல்பினின் ஒரு பகுதியாக இருந்தன என்பது தான் உண்மை. ஏனெனில் குதிரை லாயம் அவற்றின் பராமரிப்புக்காக பணம் செலுத்தியது, கட்டண தொகைகளை செலுத்தியுள்ளனர். மேலும் அந்த 15 மில்லியன் பவுண்டுகள் பரிசு பணமாக ஒப்புக்கொள்ளப்படுகிறது என்றார்.
விடுமுறை மற்றும் ஓய்வு காலங்கள்
இத்தாலியில் ஒரு கோடை விடுமுறைக்கு 631,000 பவுண்டுகளும், கிரீஸில் உள்ள ஒரு ஹோட்டலுக்கான பில் 274,000 யூரோக்களும் செலவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி மூர், ஆண்டில் ஒன்பது வாரங்களுக்கு வெளிநாடுகளுக்கு விடுமுறை செல்வதற்கான ஹயாவின் கோரிக்கை ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு வாரங்கள் இங்கிலாந்திலும், ஜார்டனிடம் மூன்று வார இறுதிநாள்களும், பிரிட்டனில் இரண்டு வார இறுதி நாள்களும் செலவிட அனுமதி வழங்கினார்.
திருமணத்தின் போது இந்த குழந்தைகள் அனுபவிக்கும் விதிவிலக்கான செல்வம் மற்றும் குறிப்பிடத்தக்க வாழ்க்கைத் தரம் இந்த வழக்கை முற்றிலும் வழக்கத்திற்கு மாறாக எடுத்துச் செல்கிறது. அதன்படி மனமுறிவுக்கு பிறகு அவர்கள் பழைய வாழ்க்கையை வாழ உரிமை உள்ளது.
அதன்படி, விடுமுறை நாட்களுக்கான மொத்த செலவாக 5.1 மில்லியன் பவுண்டகள் வழங்க வேண்டும். இதில் தனியார் விமானங்களை வாடகைக்கு எடுக்கும் செலவும் 1 மில்லியன் பவுண்டும், ஹோட்டல்கள் மற்றும் உணவுக்காக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொகையும் அடங்கும்.
இதுதவிர, மேலும் 1 மில்லியன் பவுண்டுகளை ஓய்வுக்காகச் செலவழிக்க வழங்க கோரினார். மேலும்செல்லப்பிராணிகளுக்கு செலவழிப்பதற்காக ஆண்டுக்கு 277,050 பவுண்டுகள் வழங்க வேண்டும். இதில், குதிரைகளை வாங்க 25,000 பவுண்டுகள் மற்றும் பொம்மைகள், சீர்ப்படுத்துதல் மற்றும் குறிப்பிடப்படாத விலங்குகளுக்கு பயிற்சி அளித்திட 12,000 பவுண்டுகள் அடங்கும்.
ஆடை, நகைகள்
திருமணத்தின் போது தனது முன்னாள் கணவர் தாராளமாக நடந்துகொண்டதாகக் கூறிய ஹயா, ஆடைகள் மற்றும் நகைகள் காணாமல் போனதாகக் கூறி இழப்பீடாக 52 மில்லியன் பவுண்டுகள் கேட்டார்.
ஹயா கூறுகையில், ஹாட் கோச்சர் கலக்சஷன் மதிப்பு 74 மில்லியன் யூரோ ஆகும். ஆனால், அவர் பிரிட்டனுக்கு சென்றபிறகு அடிப்படை நகைகள் மட்டுமே வந்ததாக குற்றச்சாட்டினார்.
துபாய் அரண்மையில் இருந்த வைரங்கள், முத்துக்கள், நீலமணிகள் மற்றும் மரகதங்கள் உட்பட தனது நகைகளில் பெரும்பாலானவை காணவில்லை. நெக்லஸ், மோதிரம் மற்றும் காதணிகள் உட்பட ஒரு வைர செட் மட்டும் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்புடையது . இந்த நீதிமன்ற அறை முழுவதும் என்னிடம் இருந்த அனைத்து நகைகளையும் வைத்தால், அது நிரம்பியிருக்கும் என்றார்.
அப்போது, நீதிபதியிடம் நகை வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் 23 நிமிட காணொலி காண்பிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, காணாமல் போன நகைக்கு இழப்பீடு தொகையை 13.7 மில்லியன் புவண்டும், மிஸ்ஸான ஆடைக்கு 1 மில்லியன் புவுண்டும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil