செவ்வாய் கிரகத்துக்கு தொடர் விண்கலங்கள்; ஏன், எப்போது அனுப்பப்படுகிறது?
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி அதன் பாதையில் உள்ளது. சீனாவின் தியான்வென் -1 மற்றும் நாசாவின் பெர்செவரன்ஸ் விரைவில் செலுத்தப்பட உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் அரபு உலகின் முதல் வின்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது. அமல் (ஹோப்) என்ற விண்கலம் ஜப்பானின் தானேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ’எச் -2 ஏ ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட் ஜூலை இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ள மூன்று விண்கலங்களில் இது முதல் விண்கலம் ஆகும். சீனா தனது முதல் செவ்வாய் கிரக ஆய்வான தியான்வென் -1 (முன்னர் ஹூக்ஸிங் 1) விண்கலத்தை வரவிருக்கும் சில நாட்களில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்பு, செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்பிய ஒரே நாடு அமெரிக்கா. பெர்செவெரன்ஸ் விண்கலத்தை ஜூலை 30ம் தேதி செலுத்த திட்டமிடுகிறது.
பூமியும் செவ்வாய் கிரகமும் இந்த இரண்டு ஆண்டுகளில் மிக நெருக்கமாக வருவதால் 2020 ஜூலை இறுதியில் விண்கலங்கள் செலுத்த திட்டமிடப்படுகிறது. இதனால், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செல்ல குறைவான எரிபொருள் பயன்படுத்தபடும்.
ஒரு விண்கலம் மிக விரைவாகவோ அல்லது தாமதமாகவோ ஏவப்பட்டால் கிரகம் இல்லாதபோது அது கிரகத்தின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும்.
பெர்செவரன்ஸ் விண்கலம்: வேட்டை அல்லது வாழ்க்கை
நாசாவின் ரோவர் பெர்செவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழக்கூடிய சூழல்கள் மற்றும் அதன் பண்டைய காலங்களில் நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகளைத் தேடும்.
ஒரு செவ்வாய் ஆண்டில் (பூமியில் 687 நாட்கள்) விண்கலம் அதன் ஆய்வுக் காலத்தில் அது பூமியில் பகுப்பாய்வு செய்வதற்காக செவ்வாய் கிரகத்தின் பாறை மற்றும் வண்டல் மாதிரிகளை சேகரிக்கும்.
தரவைச் சேகரிப்பதற்கும், எதிர்காலத்தில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு பயணங்களைத் திட்டமிட உதவும் வகையில் வானிலை நிலைமைகளை ஆய்வு செய்வதற்கும், கார்பன்-டை ஆக்சைடு நிறைந்த வளிமண்டலத்திலிருந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கும் ரோவரில் சிறப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பெர்செவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் 2012 முதல் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. அதன் இலக்கு ஆய்வுப் பணி காலம் முடிந்தாலும் அது இன்னும் செயலில் உள்ளது.
ஹோப்: வளிமண்டல தரவு
அமெரிக்காவில் ஐக்கிய அரபு எமிரேட் விஞ்ஞானிகளால் ஹோப் விண்கலம் உருவாக்கப்பட்டது. இது ஹெச்-2 ஏ ராக்கெட்டின் 45வது ஏவுதல் ஆகும். உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமரா மற்றும் ஸ்பெக்ட்ரோமீட்டர் உள்ளிட்ட மூன்று கருவிகளைக் கொண்டுள்ள இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் காலநிலை பரிமாணங்கள் குறித்த தரவுகளைச் சேகரிப்பதற்கும், செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் ஏன் விண்வெளியில் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுவதற்கும் ஒரு சுற்றுப்பதையில் செலுத்தப்பட உள்ளது.
ஹோப் விண்கலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 4வது விண்வெளி திட்டம். மேலும், இது அந்நாட்டின் முதல் வேறு கிரகத்துக்கு செலுத்தப்படும் விண்கலம் ஆகும். இதற்கு முன்பு செலுத்தப்பட்டவை மூன்றும் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள் ஆகும்.
தியான்வென் -1: மண் ஆய்வு
சீனாவின் முதல் செவ்வாய் கிரக ஆய்வு சீனாவின் ஜிச்சாங்கிலிருந்து லாங் மார்ச் 5 ஒய் -4 பூஸ்டர் செலுத்தப்படும். இது ஒரு ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு மற்றும் நிலவியலை ஆய்வு செய்வதையும், மேற்பரப்பு பொருள், காலநிலை மற்றும் சுற்றுச்சூழலின் கலவையை தீர்மானிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஆர்பிட்டர் செவ்வாய் கிரகத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அது உட்டோபியா பிளானிட்டியா பிராந்தியத்தில் எங்காவது பொருத்தமான தரையிறங்கும் இடத்தை தேட உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்களையும் பயன்படுத்தும்.
இந்த ஆர்பிட்டர், 240 கிலோ எடையுள்ளதாக இருக்கும். மேலும், இது கேமராக்கள், ஒரு மேற்பரப்பு ரேடார், ஒரு ஸ்பெக்ட்ரோமீட்டர், ஒரு காந்தமானி மற்றும் வளிமண்டல சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்லும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“