அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலைகளுள் ஒன்றான மௌனா லோவா எரிமலை 38 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) வெடித்து நெருப்பு குழம்புகளை வெளியேற்றி வருகிறது. மேற்கு அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடலை ஒட்டி ஹவாய் தீவில் மௌனா லோவா எரிமலை அமைந்துள்ளது. எரிமலையின் தீ மற்றும் அதன் புகைகள் மலை உச்சி உரை உயர்ந்து பரவி வருகிறது.
இதுகுறித்து ஹவாய் மேயர் மிட்ச் ரோத் கூறுகையில், எரிமலை வெடிப்பு அப்பகுதி மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
எரிமலைகள் ஏன் வெடிக்கின்றன?
பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் ஆழமான ஒன்று அதன் மையத்தை நோக்கிச் செல்லும்போது, அது வெப்பமடைகிறது. புவிவெப்ப சாய்வு, பூமியின் வெப்பநிலை ஆழத்துடன் அதிகரிக்கும் அளவு, பூமியின் சூடான உட்புறத்திலிருந்து அதன் மேற்பரப்புக்கு வெப்பம் பாய்வதைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆழத்தில், வெப்பமானது பாறைகளை உருக்கி, புவியியலாளர்கள் 'மாக்மா' என்று அழைக்கும் ஒன்றை உருவாக்குகிறது.
மாக்மா பாறையை விட இலகுவானது. எனவே அது உயர்ந்து அதிகளவில் உருவாகிறது. எரிமலை வெடிப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட மாக்மா மேற்பரப்பிற்கு அடியில் 6 முதல் 10 கி.மீ வரை, ஆழத்தில் வெடிப்பை ஏற்படுத்துகிறது. மாக்மா உருவாகும்போது, அது பூமியின் மேற்பரப்பில் விரிசல் மற்றும் பிளவுகளை உருவாக்குகிறது. இதைத்தான் எரிமலை வெடிப்பு என்கிறோம்.
ஏன் சில எரிமலைகள் வெடித்து சிதறுகிறது?
நாம் சில புகைப்படங்களில் எரிமலைகள் வெடித்து சிதறுவது போன்று பார்த்திருப்போம். எரிமலைகள் வெடித்து சிதறுவதற்கான காரணம் மாக்மா கலவையின் தீவிரம் மற்றும் வெடிக்கும் தன்மையில் வேறுபடுகின்றன.
எளிமையாக சொன்னால், ரன்னி மாக்மா குறைந்த அளவிலான வெடிக்கும் தன்மையை உருவாக்குகிறது. அவை குறைவான ஆபத்தை ஏற்படுத்துகிறது. ரன்னி மாக்மாவில் வாயுக்கள் நிலையாக வெளியில் சென்று நெருப்பு குழம்புகள் மெதுவாக வெளியேறுகிறது. மௌனா லோவா எரிமலை வெடிப்பு இந்த வகையானது. எரிமலைக் குழம்பு மெதுவாக வெளியேறுவதால், மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற போதுமான நேரம் உள்ளது. புவியியலாளர்கள் கூறுகையில், மௌனா லோவா எரிமலை வெடிப்பு இந்த வகையில் உள்ளதால், அதன் நெருப்பு குழம்பு வெளியேற்றும் வேகத்தை கணிக்க முடிகிறது எனக் கூறினர்.
எரிமலைக்குழம்பு வெடித்து சிதறுவது டெஃப்ரா எனப்படுகிறது. இந்த வகையான மிகவும் ஆபத்தானவை, சிறிய துகள்களின் அளவு முதல் பாறை வரை வெடிக்க செய்கிறது.
மாக்மா தடிமனாகவும் ஒட்டும் தன்மையுடனும் இருந்தால், வாயுக்கள் சீரான அடிப்படையில் வெளியேறுவதை கடினமாக்குகிறது. இது உச்ச கட்டத்தை அடையும் வரை அழுத்தத்தை உருவாக்க வழிவகுக்கிறது. இந்த நேரத்தில், வாயுக்கள் வெடித்து வெளியேறுகின்றன, ஒரே நேரத்தில், வெடிப்பை ஏற்படுத்துகின்றன.
எரிமலை வெடிப்பு குறியீடு (Volcanic Explosivity Index (VEI)) என்பது எரிமலையின் வெடிப்புத் திறனை அளவிடப் பயன்படுத்தும் அளவுகோலாகும். 1 முதல் 8 வரையிலான குறியீடு அதிக வெடிப்புத்தன்மையைக் குறிப்பதாகும். மௌனா லோவாவின் VEI குறியீடு என்னும் அறியப்படவில்லை.
கடந்த 1984-ம் ஆண்டு வெடிப்பின் போது 0 VEI கொண்டிருந்தது. மௌனா லோவாவில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச VEI குறியீடு 2 ஆகும் (1854 மற்றும் 1868).
சில பிரபலமான எரிமலைகள்
ஹோலோசீன் காலத்தில் (கடந்த 11,650 ஆண்டுகளில்) வெடித்த எந்த எரிமலையும் விஞ்ஞானிகளால் "செயலில்" அதாவது இருப்பதாகக் கருதப்படுகிறது. அதாவது ஆக்டிவ் எரிமலைகள் ஆகும். டோர்மண்ட் 'Dormant' எரிமலைகள் என்பது தற்போது வெடிக்கும் செயல்பாட்டில் இல்லாதவையாகும். ஆனால் எதிர்காலத்தில் வெடிக்க கூடிய ஆற்றல் கொண்ட எரிமலைகளாகும்.
தற்போது மௌனா லோவா எரிமலை கடந்த 38 ஆண்டுகளாக 'Dormant'செயலற்ற எரிமலையாக இருந்தது. மேலும், விஞ்ஞானிகள் "அழிந்துபோகும்" எரிமலைகள் குறித்தும் கணித்துள்ளனர். இந்த வகை எரிமலைகள் எந்த வெடிப்பு செயல்பாட்டையும் எதிர்கொள்ளாது. இங்கிலாந்தின் மிக உயரமான மலை, பென் நெவிஸ், அழிந்துபோன எரிமலையாக கூறப்பட்டுள்ளது.
கிரகடோவா
1883 இல் இந்தோனேசியாவின் கிரகடோவாவில் (VEI 6) மிகவும் பேரழிவுகரமான எரிமலை வெடிப்புகளில் ஒன்று. எரிமலை பெரிய அளவில் நெருப்பு குழம்புகள் மற்றும் சாம்பலை வெளியிட்டது. அதிபயங்கர வெடிச் சத்தம் ஏற்பட்டது. 3,100 கிமீ தொலைவில் மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதி வரை கேட்டன. டச்சு காலனித்துவ அதிகாரிகளின் கூற்றுப்படி, க்ரகடோவாவின் வெடிப்பு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியால் 36,417 உயிரிழந்தனர். இருப்பினும் நவீனகால மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மவுண்ட் வெசுவியஸ்
கி.பி 79 -ம் ஆண்டில் இத்தாலியின், வெசுவியஸ் மலை வெடித்தது (VEI 5). இது ஐரோப்பிய வரலாற்றில் மிக மோசமான வெடிப்புகளில் ஒன்றாகும். 16,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் பாம்பீ நகரத்தை அழித்தது. இந்த வெடிப்பு ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகளால் வெளியிடப்பட்ட வெப்ப ஆற்றலை விட 100,000 மடங்கு அதிகமாக வெளியிடப்பட்டது. அதன் அருகில் இருந்தவர்கள் ஏராளமானோர் கடும் பாதிப்புகளை சந்தித்தனர் என்று கூறப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.