விக்கி லீக்ஸ், பனமா லீக்ஸ் கேள்விப்பட்டிருக்கிறோம் அது என்ன மொரிஷியஸ் லீக்?

இந்த நிறுவனம் குவெர்ன்சி, கேமேன் தீவு, ஹாங்காங், லண்டன் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவு என உலகம் முழுவதும் அலுவலகங்களைத் திறந்தன. இந்த நிறுவனங்கள் கோடான் டிரஸ்ட் என்ற துணை நிறுவனத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது

By: Updated: July 24, 2019, 09:25:17 PM

ரிது சரின்

18 நாடுகளில் நடத்திய கூட்டுவிசாரணையில், சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் 500 நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட கோனியர்ஸ் டில் அண்ட் பியர்மேன் என்ற வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு சிறப்பு சட்ட நிறுவனத்தின் தரவுகள் உள்ளன.

மொரிஷியஸ் லீக் என்றால் என்ன?

ஸ்விஸ் லீக்ஸ், பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ் லீக்கிற்கு பிறகு மொரிஷியஸிலிருந்து 2,00,000-க்கும் மேலான ஒப்பந்தங்கள், வங்கி கணக்குவிவரங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் எப்படி ஒரு சிறிய தீவு நாடு பல கார்ப்பரேட் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவங்களுடன் கூட்டுசேர்வதை எளிதாக்கியிருக்கிறது என்று காட்டப்பட்டுள்ளது. மேலும், அது எந்த மூலதன வரியையும் செலுத்தாமல் லாபங்களை அந்நிய நேரடி முதலீடாக இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.

18 நாடுகளில் நடத்திய கூட்டுவிசாரணையில், சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் 500 நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட கோனியர்ஸ் டில் அண்ட் பியர்மேன் என்ற வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு சிறப்பு சட்ட நிறுவனத்தின் தரவுகள் உள்ளன. அது தனது செயல்பாடுகளை 1928 ஆம் ஆண்டு பஹமாஸில் தொடங்கியது. 2009 ஆம் ஆண்டில் மொரிஷியசிலிருது ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு முதலீடுகளை அனுப்பிவருகிறது.

கோனியர்ஸ் டில் அண்ட் பியர்மேன் நிறுவனமும் மொரிஷியஸ் லீக்கும்

1998 ஆம் ஆண்டில் பெர்முடாவைச் சேர்ந்த நிதிநிலை ஆய்வாலர் ரோஜர் குரோம்பி அவருடைய புத்தகத்தில் தனது நிறுவனத்தைப் பற்றி கார்ப்பரேட் மற்றும் வணிகச் சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு “முழு சேவை” சட்ட நிறுவனம் என்றும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு சொத்து வழங்குதல், மற்றும் மேலாண்மை சேவைகளை அளிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

இந்த நிறுவனத்துக்கு ஜேம்ஸ் ரெஜினால்ட் கோனியர்ஸ், நிகோலஸ் பேயார்ட் டில் மற்றும் ஜேம்ஸ் யூஜின் பியர்மேன் என மூன்று நிறுவனர்கள். இவர்கள் அனைவரும் பெர்முடாவின் கௌரவப் பதவியான நைட் பதவியை வகித்தவர்கள். இது பல ஆண்டுகளாக தனியார் துறை வாடிக்கையாளர்களுக்கும் தனிநபர்களுக்கும் விதிக்கப்படும் வரியை குறைக்கவும், அவர்களது குடும்ப சொத்துக்களை பாதுகாக்கவும் பல்வேறு அறக்கட்டளைகள் அமைப்பு மூலம் உதவியது. இந்த நிறுவனம் குவெர்ன்சி, கேமேன் தீவு, ஹாங்காங், லண்டன் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவு என உலகம் முழுவதும் அலுவலகங்களைத் திறந்தன. இந்த நிறுவனங்கள் கோடான் டிரஸ்ட் என்ற துணை நிறுவனத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் மொரிஷியஸின் தொடர்பு முக்கியமானது ஏன்?

மொரிஷியஸ் வழியாக இந்தியாவுக்கு தங்களுடைய முதலீடுகளை அனுப்பும் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை ஏற்பட்டபோது பல பத்தாண்டுகளாக பயனடைந்தவர்களில் கோனியர்ஸ் டில், அண்ட் பியர்மேனும் இருந்தனர். 2016 ஆம் ஆண்டில் இந்தியா மொரிஷியசுடன் தனது இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை திருத்தியது. மேலும், புதிய விதிகளில் மூலதன ஆதாய வரிகள் முழுமையாக நடைமுறையில் இருந்தன.

சிஇஓ டுடே என்ற வணிக இதழின் 2019 ஜூன் மாத பதிப்பில் வெளியான ஒரு நேர்காணலில், அந்த சட்ட நிறுவனத்தின் கூட்டாளியான அஸ்வான் லக்ராஸ் கூறுகையில், “மொரிஷியஸுக்கும் இந்தியாவுக்கும் இடையே இரட்டை வரிவிதிப்பு முறையில் சமீபத்தில் செய்த மாற்றம் தங்களுடைய சவால்களில் அடங்கும். இது சந்தையில் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டு வந்துள்ளது. மேலும், இந்தியாவில் GAAR (பொது எதிர்ப்புத் தடுப்பு விதி) மற்றும் முக்கிய நிதி மையங்களில் உள்ள CRS (பொதுவான அறிக்கையிடலின் தரநிலை) ஆகியவற்றின் வருகை மொரீஷியஸின் கார்ப்பரேட் நிறுவன கட்டமைப்பை மேலும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

ஒப்பந்தம் திருத்தப்படுவதற்கு முன்பு மொரிஷியஸில் இந்த சட்ட நிறுவனம் செய்தது என்ன?

இது மூதலீட்டு நிறுவனங்களை அமைத்தல், பதிவு செய்யப்பட்ட அலுவலகங்களுக்கு உள்ளூர் இயக்குநர்களை ஏற்பாடு செய்தல், செயலக மற்றும் நிர்வாக சேவைகளை வழங்குதல் மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதில் உதவுதல், வரி தாக்கல் செய்ய உதவுதல் போன்றவற்றை செய்துவந்தன.

தற்போது ரகசியமாக வெளியாகியுள்ள அந்த நிறுவனத்தின் ஒரு பவர்பாயிண்ட் விளக்கக் காட்சியின் ஒரு பகுதியில், ஜி.பி.சி1 (குளோபல் பிசினஸ் கம்பனி, வரி செலுத்துபவர் மொரிஷியஸில் வசிப்பவர்) என்ற நிறுவனத்தை பத்து நாட்களில் அமைக்க முடியும் என்றும் அதற்கு வருடாந்திர உரிமத்துக்காக 1,750 டாலர் கட்டணம் என்றும் கூறுகிறது. மேலும், மொரிஷியஸில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு வருமான வரி 3 சதவீதத்தை தாண்டாது என்றும் மூலதன ஆதாய வரி இல்லை என்றும் அது சுட்டிக்காட்டுகிறது.

மேலும், அந்த பவர்பாயிண்ட் விளக்க காட்சியில், “இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா (பிற பகுதிகளிலும்) சம்பந்தப்பட்ட ஏராளமான உள் மற்றும் வெளிப்புற முதலீட்டு பரிவர்த்தனைகளில் நாங்கள் செயல்படுகிறோம். குறிப்பாக, இந்தியா மற்றும் மொரீஷியஸில் முதலீடு செய்யும் பாரம்பரிய சந்தைகளில் உறுதியாக இருப்பதாக” அது கூறுகிறது.”

அவர்கள் மொரீஷியஸிலிருந்து கவர்ச்சிகரமான “வரி சலுகைகள் மற்றும் சாதகமான நிதி ஆட்சி” ஆகியவை வழங்கப்படுகின்றன என்றும் மொரிஷியஸில் மூலதன ஆதாய வரி செலுத்தப்படாத “குறைந்த / பூஜ்ஜிய வரி முறை” வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.

ரகசியமாக கசிந்த தகவல்: சட்ட நிறுவனத்தால் பட்டியலிடப்படும் சில பரிவர்த்தனைகள்

வொடஃபோன் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்கள் கூட்டாக தொடங்கிய வொடஃபோன் எஸ்ஸார் லிமிடெட் நிறுவனத்தில் 5.46 பில்லியன் டாலருக்கான 33% பங்குகளை வாங்க வொடஃபோன் குரூப் பிஎல்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மொரிஷியஸை சேர்ந்த இரண்டு முதலீட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்கு ஆலோசனை (ஒரு சுவிஸ் வங்கி மேலாளராக) வழங்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட பத்திரங்கள் மற்றும் நிலையான வருமான உற்பத்திகளில் அந்த இருவருமே முதலீடு செய்திருக்கிறார்கள்.

ஒரு முன்னணி நிறுவனத்துக்கு இந்தியாவில் முதலீடு செய்யும் மூலதனத்தை மறுசீரமைப்பு செய்ய ஆலோசனை வழங்கியுள்ளனர். மொரிஷியஸ் மற்றும் கேமேன் தீவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு புதிய முதலீடுகளை உருவாக்குவதில் ஆலோசனை வழங்கியுள்ளது.

விதிமுறைகள் கடுமையான சட்ட நிறுவனத்துக்கு பாதிப்பு

இந்தியா போன்ற நாடுகளில் வரி தளங்களை உயர்த்த வரி ஒப்பந்த சலுகைகளை கட்டுப்படுத்த முடிவு செய்வதற்கு முன்பு வங்கியாளர்கள் மற்றும் கோனியர்ஸ் டில் அண்ட் பியர்மேன் போன்ற நிறுவனங்களுக்கு விதிமுறைகளை கடுமையாக்குவதன் வழியாக இணக்கத்துக்கு சிவப்புக்கொடி காட்டுகிறது என்பதை வெளியான தகவல்கள் காட்டுகின்றன.

அஸ்வான் லக்ராஸால் பெறப்பட்ட ஒரு கடிதம் வெளியாகி உள்ளது. அதில், மொரிஷியஸின் அறக்கட்டளை மற்றும் மேலாண்மை நிறுவனங்களின் சங்கத்தின் உறுப்பினர்களுடைய கவலைகளை பட்டியலிடுகிறது. அதில் எச்எஸ்பிசி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு போன்ற வங்கிகள் “இணக்க காரணங்களுக்காக” இலாப நோக்கற்ற கணக்கு வைத்திருப்பவர்களை எவ்வாறு அகற்றின என்பதை ஒரு உறுப்பினர் குறிப்பிடுகிறார்.

மற்றொரு குறிப்பில், “முட்டால்தனமான பொறுப்பு மற்றும் விடாமுயற்சியின் தேவைகள் வங்கிகளில் குவிக்கப்பட்டு எல்லா சேவைகளையும் வழங்குகிறது. ஆனால், இது சாத்தியமற்றது. ஆகையினால் இது பொருளாதாரமற்றது என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் இந்தியா அல்லது ஓ.இ.சி.டி (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு) அதன் குரலை சரிசெய்துகொள்ளும்போது, நாங்கள் மிகவும் அழிவுகரமான ஒழுங்குமுறைகளுடன் அதற்கு மிகையான எதிர்வினையாற்றுகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Mauritius leaks tax evasion icij

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X