முதன்முறையாக, நட்சத்திர மீன்களின் நெருங்கிய தொடர்புடைய பிரிட்டல் ஸ்டார்ஸ் வகை உயிரினங்கள், கண்கள் இல்லாவிட்டாலும் பார்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கரீபியன் கடலின் பவளப்பாறைகளில் வாழும் சிவப்பு பிரிட்டல் நட்சத்திரம் (ஓபியோகோமா வென்டி), இந்த திறனைக் கொண்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கடல் அர்ச்சின் (sea urchin) இனத்திற்குப் பிறகு, இந்த சிறப்பு குணம் கொண்ட இரண்டாவது உயிரினமாக பிரிட்டல் ஸ்டார்ஸ் கண்டறியப்பட்டுள்ளது.
கண்கள் இல்லாமல் பார்க்கும் திறன் extraocular vision என்று அழைக்கப்படுகிறது. 1966 ஆம் ஆண்டில், கொச்சின் மருத்துவமனையின் டாக்டர் எல் செர்டோக், சோவியத் யூனியனைச் சேர்ந்த ரோசா கவுலெச்சோவாவைப் (Rosa Koulechova) என்பவரைப் பற்றி எழுதினார். அப்பெண், தனது விரல்களால் வண்ணங்களை "பார்க்க" முடிந்தது என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டார். வெளிப்புற பார்வைக்கான விளக்கம் மனித தோலின் புகைப்பட-உணர்திறனில் தான் கண்டறியப்பட வேண்டும் என்று பலர் நினைத்ததாக செர்டோக் எழுதினார்.
மேலும் படிக்க - யார் இந்த மேஜர் ஜென்ரல் காஸ்ஸெம் சுலைமானி?
கடல் அர்ச்சின்கள் மற்றும் பிரிட்டல் ஸ்டார்ஸ் வகை உயிரினங்களில், அதன் உடலில் காணப்படும் ஒளிச்சேர்க்கை செல்கள் மூலம் வெளிப்புற பார்வை எளிதாக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். தங்கள் உயிரியலில் குறித்த கண்டுபிடிப்புகளை வெளியிட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பிரிட்டல் ஸ்டார்ஸை ஆய்வகத்தில் ஒரு வட்ட அரங்கில் வைத்தனர். பிரிட்டல் ஸ்டார்ஸ்கள் ஒரு கருப்பு பட்டையுடன் வெள்ளை நிறமாக இருந்த சுவர்களை நோக்கி நகர்ந்தன, இது பகல்நேர மறைவிடத்தை குறிக்கிறது. சாம்பல் சுவர்கள் அங்கு மாற்றப்பட்ட போது, அவை வெள்ளை பட்டையின் மையத்தில் இருந்த கருப்பு பட்டையை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தன.
ஒரு பிரிட்டல் ஸ்டார்ஸ் அதன் முழு உடலையும் உள்ளடக்கிய ஒளி-உணர்திறன் உயிரணுக்களின் உதவியுடன் பார்க்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஒளி-உணர்திறன் செல்கள் பிரிட்டல் ஸ்டார்ஸ் உயிரினத்திற்கு காட்சி தூண்டுதல்களைக் கொடுக்கின்றன, இது பாறைகள் போன்ற கரடுமுரடான கட்டமைப்புகளை அடையாளம் காண அனுமதிக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
Explained : முப்படை தலைமைத் தளபதியின் அதிகாரம் என்ன?
சிகப்பு பிரிட்டல் ஸ்டார்ஸ் உயிரினத்தின் மற்றொரு விசித்திரமான அம்சம் நிறத்தை மாற்றுவது. அந்த உயிரினம் பகலில் ஆழமாக சிவப்பு நிறத்தில் இருக்கும்போது, அதன் நிறத்தை இரவில் பழுப்பு நிறமாக மாற்றுகிறது. பகல் நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட உயிரினங்களில் அவர்கள் கண்ட பதில்கள், இரவில் பரிசோதிக்கப்பட்டவற்றில் மறைந்துவிட்டதால், அவைகளின் வெளிப்புற பார்வைக்கும் வண்ணத்தை மாற்றும் திறன்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
"இது மிகவும் உற்சாகமான கண்டுபிடிப்பு. 30 ஆண்டுகளுக்கு முன்பு வண்ணத்தை மாற்றுவது ஓபியோகோமாவில் ஒளி-உணர்திறனுக்கான திறவுகோலைக் கொண்டிருக்கக்கூடும் என்று பரிந்துரைக்கப்பட்டது, எனவே எஞ்சியிருக்கும் சில இடைவெளிகளை நிரப்பவும், இந்த புதிய வழிமுறையை விவரிக்கவும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று லாரன் சம்னர்-ரூனி கூறினார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் அசாதாரண காட்சி அமைப்புகளைப் படிக்கும் ஒரு ஆராய்ச்சி மாணவர் என்று, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.