/indian-express-tamil/media/media_files/4xrBSVkMRIUO1ZqcsLK0.jpg)
அமெரிக்காவில் உள்ள ஏ.ஐ ஆய்வகத்தில், உலகத்தில் முதல் முறையாக ஏ.ஐ மென்பொறியாளர் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கியவர்கள், இந்த ஏ.ஐ ஏஜண்ட்-க்கு டெவின் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஏ.ஐ. ஏஜெண்ட், முன்னணி ஏ.ஐ நிறுவனங்கள் நடத்திய பொறியாளர் தேர்வுக்கான நேர்காண்களில் சிறப்பா செயலாற்றி உள்ளது.
இந்த டெவின் ஏ.ஐ ஏஜெண்ட், சோர்வில்லாமல் வேலை செய்யும் திறன் கொண்டது. இது பொறியாளர்களுக்கு கூடுதல் உதவியாக இருக்கும். இன்னும் சவாலான சிக்கலை தீர்க்க உதவியாக இருக்கும்.
ஏ.ஐ ஏஜெண்ட், டெவினால் என்ன செய்ய முடியும்?
மென்பொருள் மேம்பாட்டில், கூடுதல் திறன்கள் கொண்டதாக இது இருக்கும் . குறிப்பாக கோடிங், பிழைத்திருத்தம், முக்கிய சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் வேலைகளை செய்கிறது. டெவின், கணினியின் அல்கிரிதம்-யை புரிந்துகொண்டு, தன்னைத்தானே வளர்த்துகொண்டு சிறப்பாக செயல்படும். இதனால் ஒரு செயலியை தொடக்கம் முதல் முடிவரை, முழுதாக உருவாக்க முடியும்.
ஆயிரம் முக்கிய முடிவுகளை உள்ளடக்கிய பொறியிலில் சவாலான விஷயங்களை டெவினால் செய்ய முடியும். எதிர்கால தொலைநோக்கு திட்டமிடலுக்கான அறிவாற்றலை இது கொண்டுள்ளது. ஒவ்வொரு படிநிலையில் உள்ள அர்த்தத்தை புரிந்துகொள்ளவும், தான் பெரும் தகவலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்ளவும் முடியும். தவறுகளை சரி செய்யவும் முடியும்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நபர்களின் தேவைக்கு ஏற்றவாறு செயல்படும். இதை பயன்படுத்தும் நபரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும். அவர்களுடன் இணைந்து, அவர்களின் தேவைக்காக பணிபுரியும்.
இந்நிலையில் இந்த தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்தபோது, 13.86 % ஏற்படும் சிக்கலை மற்றவர்களின் துணையில்லாமல் இது சரி செய்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனம், டெவின் ஏ.ஐ ஏஜெண்ட் மாடலை பற்றி முழு விவரங்களை இது வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.