New Update
/indian-express-tamil/media/media_files/wqe5fm40EjUn8T9h8jDN.jpg)
/
தென் கொரியாவை சேர்ந்த ஹைடோல் நிறுவனம், மறதி நோயால் பாதிக்கப்பட்ட வயதானவர்களின் தனிமையை போக்க ஏ.ஐ ரோபோட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.1.5 லட்சமாகும்.
தென் கொரியாவை சேர்ந்த ஹைடோல் நிறுவனம், மறதி நோயால் பாதிக்கப்பட்ட வயதானவர்களின் தனிமையை போக்க ஏ.ஐ ரோபோட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.1.5 லட்சமாகும்.
தென் கொரிய அரசு, 700 ஹைடோல் ஏ.ஐ ரோபாட்டுகளை வயதானவர்களை கவனித்திக்கொள்ள அமர்த்தி உள்ளது. தென் கொரியாவில் வயதானவர்கள் தனிமையில் இருப்பது முக்கிய சமூக பிரச்சனையாக வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஹைடோ ரோபாட் என்ன செய்யும் ?
இந்த வகை ரோபாட்டுகள், விளையாட்டு பொருளை போன்றது. நாம் பேசும் எல்லா மொழியையும் அவை புரிந்துகொள்ளும். மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும், பேசும், பாடல்களை ஒளிபரப்பும். மேலும் இது வயதானவர்களிடம் உரையாடும்.
இந்த நிறுவனம் இந்த ரோபட் தொடர்பாக கூறுகையில், இது வயதானவர்களுக்கு ஏற்றவாறு அவர்களின் தேவையை புரிந்துகொண்டு செயல்படும். மேலும் இது வயதானவர்களுடன் பேசுகையில் கிடைக்கும் தகவலில் இருந்து அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்துகொள்ளும்.
இந்நிலையில் இந்த நிறுவனம் மனித உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஏ.ஐ உருவாக்கி அதில் அதிக கவனம் செலுத்துகிறது. இதை பயன்படுத்தும் நபர்களின் மனநிலையை புரிந்து, அவர்களுக்கு தேவையான ஆறுதலை கொடுக்கிறது.
இந்நிலையில் இந்த ரோபாட், ஒரு முழு நீள உரையாடலை நிகழ்த்தும் பண்புகள் கொண்டது. இதில் கம்பானியன் செயலி மற்றும் வயதானவர்களை 24 மணி நேரம் கண்காணிக்கும் அம்சமும் இடம் பெற்றுள்ளது.
வயதானவர்களை கவனித்துகொள்ளும் உறவினர்களுக்கு இந்த வசதிகள் உபயோகமாக இருக்கும். அதிக நேரம் வயதானவர்களிடத்தில் எந்த அசைவும் இல்லை என்றால், இது எச்சரிக்கை ஒலியை எழுப்பும். மேலும் கவனத்திகொள்பவரிடம் இந்த செய்தியை தெரிவிக்கும்.
மேலும் இதை நாம் தொட்டு பார்த்து பேசவும் முடியும். 24 மணி நேரம் என்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புகளை இது தெரிவிக்கும். உடல் பயிற்சி செய்ய நினைவுப்படுத்தும். மாத்திரைகளை எடுத்துகொள்ள நினைவுப்படுத்தும். இந்நிலையில் ஒரு நாளில் இரண்டு முறை கேள்வி - பதில் மூலமாக வயதானவர்களின் ஆரோகியத்தை பார்த்துகொள்ளும்.
இந்நிலையில் இந்த ரோபாட் பெறும் தகவலை, தவறான வழியில் பயன்படுத்த மாட்டோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ரோபாட் பெறும் தகவல்கள் எப்படி பாதுகாக்கப்படும் என்று அந்நிறுவனம் எந்த விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.