‘குறித்த நேரத்தில் இலக்கு’ – இது J&K புதிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பாணி

61 வயதான சின்ஹா, வாரணாசியின் பிஹெச்யூ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் முடித்தவர்

By: August 6, 2020, 8:53:02 PM

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, குறித்த நேரத்தில்இலக்கைஅடையும் கடினமான உழைப்பாளியாக அறியப்படுகிறார், அவர் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் எளிதில் அணுகக்கூடியவர். அவர் ஸ்ரீநகர் ராஜ் பவனுக்கு ஒரு பரந்த அனுபவத்தை கொண்டு வருவார்.

மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினரான சின்ஹா, நரேந்திர மோடி அரசாங்கத்தின் முந்தைய பதவிக்காலத்தில் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகவும் (ரயில்வே துறை அமைச்சராகவும்) பணியாற்றினார். இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தலில் அவர் தனது காசிப்பூர் தொகுதியை இழந்தார்.

அமைச்சராக இருந்த காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்கள் நிறைவடைவதை உறுதி செய்த பெருமைக்குரியவர் சின்ஹா. சின்ஹாவை அறிந்த மற்றும் அவருடன் பணிபுரிந்த பலர், “அவர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கக் கூடியவர், அதையும் மிகவும் இணக்கமான பாணியில் செய்து முடிப்பார். அவரை எப்போதும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியவர். விரைவாக முடிவெடுப்பவர்” என்றனர்.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏன் குறைக்கவில்லை?

ஜூலை 2016 முதல் வாரத்தில், தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் பொறுப்பை சின்ஹா ஏற்றுக்கொண்டபோது, அவரது உடனடி பணி 2017 டிசம்பர் இறுதிக்குள் பிராட்பேண்ட் இணையம் மூலம் 1 லட்சம் கிராமங்களை இணைப்பதன் மூலம் பாரத்நெட்டின் இலக்கை அடைவதே ஆகும். 2014 வரை நிலுவையில் இருந்த இப்பணியை, இலக்கு வைத்து நிறைவு செய்தார்.

call drops அச்சுறுத்தலை திறம்பட கையாள்வதில் சின்ஹா தன்னைப் பயன்படுத்திக் கொண்டார். அவரது பதவிக் காலத்தில் தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் வங்கி பிரதமர் நரேந்திர மோடியால் ஆகஸ்ட் 2018 இல் தொடங்கப்பட்டது.

ரயில்வேத் துறை அமைச்சராக, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் ரயில்வே திட்டங்களை அமல்படுத்துவதைக் கவனிக்க சின்ஹா நியமிக்கப்பட்டார், அவர் மீண்டும் சரியான நேரத்தில் பணியை செய்து முடித்தார்.

61 வயதான சின்ஹா, வாரணாசியின் பிஹெச்யூ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் முடித்தவர். உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள மோகன்புராவில் ஜூலை 1, 1959 இல் பிறந்த சின்ஹா, ஐ.டி-பிஹெச்யூவுக்குச் செல்வதற்கு முன்பு உ.பி. கல்வி வாரியத்தின் கீழ் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பல்கலைக்கழகத்தில், பாஜகவின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏபிவிபி) சேர்ந்தார்.

உறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை

மாணவர் தலைவரான பிறகு, சின்ஹா 1982-83 காலத்தில் காஷி இந்து விஸ்வவித்யாலயாவில் மாணவர் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். 1989 இல் அவர் பாஜகவின் தேசிய கவுன்சில் உறுப்பினரானார்.

சின்ஹா 1996 இல் 11 வது மக்களவையில் முதல் முறையாக எம்.பி. ஆனார். பின்னர் அவர் 1999இல் 13 வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் எரிசக்தி தொடர்பான நிலைக்குழுவிலும், அரசாங்க உத்தரவாதங்களுக்கான குழுவிலும் பணியாற்றினார்.

2014 ஆம் ஆண்டில், அவர் மக்களவைக்கு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் மோடியின் அமைச்சர்கள் குழுவில் ரயில்வே அமைச்சரானார். ஜூலை 2016 இல், அவர் மத்திய மாநில அமைச்சர் (சுயாதீன பொறுப்பு) பதவிக்கு உயர்த்தப்பட்டார், மேலும் தகவல் தொடர்பு அமைச்சின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Meet manoj sinha the new l g of jk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X