மேற்கில் அவர் ஊக்குவித்த எல்லாவற்றுக்காகவும் பாராட்டப்பட்டார் என்றால், அவர் சொந்த நாட்டில், தனது நாட்டிற்காக வரையறுத்த வரலாற்றுப் பணியில் தோல்வியடைந்ததால் மிகைல் கோர்பச்சேவ் ஒரு துன்பியல் தலைவராக இருந்தார்.
இரத்தம் சிந்தாமல் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஆற்றிய பங்களிப்புக்காக, அப்போதைய சோவியத் அதிபராக இருந்த கோர்பச்சேவ்-க்கு 1990-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக நாடுகளின் பாராட்டின் உச்சமாக இருந்தது.
ஆனால், அவருடைய நாட்டில் அவர் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட மனிதராக இருந்தார். அடுத்த ஆண்டே பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் 15 தனி மாநிலங்களாக சரிந்ததால், இல்லாத ஒரு நாட்டின் தலைவராகிப் போனார்.
செவ்வாய்க்கிழமை காலமான மிகைல் கோர்பச்சேவ், நலிந்துகிடந்த கம்யூனிஸ்ட் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கவும் 15 குடியரசுகளுக்கு இடையே சமமாக கூட்டுறவு அடிப்படையில் ஒரு புதிய தொழிற்சங்கத்தை வடிவமைக்கவும் முயற்சி செய்தார். அவற்றில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இரண்டும் மிகவும் சக்திவாய்ந்தவையாக இருந்தது. அதன் பிறகு, 6 ஆண்டுகள் இடைவெளியில் கம்யூனிசமும் சோவியத் யூனியனும் சரிந்தது.
பின்னோக்கிப் பார்த்தால், அவருடைய சில தவறுகள் தெளிவாகத் தெரிகிறது.
அவர் அரசியல் சீர்த்திருத்தங்களையும் பொருளாதார சீர்திருத்தங்களையும் ஒரே நேரத்தில் பெரிய லட்சிய நோக்கில் செய்ய முயற்சி செய்தார். அவர் கட்டுப்படுத்த முடியாத சக்திகளை கட்டவிழ்த்துவிட்டார். சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்ட சீனாவின் தலைவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. ஆனால், 1989 இல் தியானென்மென் சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப் பிடியைக் காக்க இரக்கமின்றி செயல்படுவோம் என்று அறிவித்தனர்.
கோர்பச்சேவ் மக்கள் அதிகாரத்தைப் பெறுவதற்காக ஒருபோதும் தேர்தலில் நிற்கவில்லை - ரஷ்யாவின் அதிபராக வாக்களிக்கப்பட்ட அவருடைய பெரிய போட்டியாளரான போரிஸ் யெல்ட்சின் போல இல்லை. போரிஸ் யெல்ட்சின் சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதிலும் கோர்பச்சேவ்வை வெளியேற்றுவதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
கோர்பச்சேவ் தேசியவாத உணர்சியின் வலிமையைத் கணிக்கத் தவறிவிட்டார் - ஆரம்பத்தில் பால்டிக் குடியரசுகளான லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியாவிலும் பிறகு ஜார்ஜியா மற்றும் உக்ரைன் போன்ற பிற நாடுகளுக்கும் தேசியவாத உணர்ச்சி பரவியது - தேசியவாத உணர்ச்சி மாஸ்கோவின் பிடியில் இருந்து தப்பிக்க தடுக்க முடியாத வேகத்தை உருவாக்கியது.
“சோவியத் யூனியன் உண்மையில் விருப்பமில்லாமல் பிணைக்கப்பட்ட நாடுகளின் பேரரசு என்று அவர் நம்பவில்லை” என்று லண்டனில் உள்ள ஒரு சிந்தனைக் குழுவின் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஜோனாதன் இயேல் கூறினார்.
“நான் துணிந்து சொல்கிறேன், அனைத்து சோவியத் தலைவர்களைப் போல, இன்றைய ரஷ்ய தலைவர்களைப் போல, அவர் சோவியத் யூனியனை ரஷ்யாவிற்கு ஒத்ததாகக் கண்டார். மேலும், அந்த நாடுகள் ஏன் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.” என்று ஜோனாதன் இயேல் கூறுகிறார்.
‘கோர்பச்சேவ் வீழ்ச்சிக்கான விதை’
சில வரலாற்றாசிரியர்கள், கோர்பச்சேவ் மரபுரிமையாக பெற்ற அமைப்பு மேற்கத்திய நாடுகளுக்குப் பின்னால் மேலும் மேலும் வீழ்ச்சியடைந்து வந்ததாகவும் தைரியமான சீர்திருத்தங்கள் எதுவும் அதைக் காப்பாற்ற முடியாது என்றும் முடிவு செய்வது சரி என்று நம்புகிறார்கள்.
கோர்பச்சேவ் மீதான விமர்சனப் பார்வை
“சோவியத் யூனியன், சோவியத் சமுதாயம் மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர் உண்மையில் புரிந்து கொள்ளவில்லை என்பதே அவரது வீழ்ச்சிக்கு வித்து என்று நான் நினைக்கிறேன்” என்று பெல்ஃபாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழக வரலாற்று துறை விரிவுரையாளர் அலெக்சாண்டர் டிடோவ் கூறினார்.
“சோவியத் யூனியனை சீர்திருத்த முடியும் என்று அவர் நினைத்தார், சோவியத் அமைப்பின் சில இன்றியமையாத கூறுகளான பயம், அடக்குமுறை, கட்டளை பொருளாதாரம் உள்ளிட்ட பலவற்றை அகற்றுவது இன்னும் அமைப்பைப் பாதுகாக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால், அவை சோவியத் அமைப்பின் உண்மையான இன்றியமையாத கூறுகளாக மாறியது - அவற்றை அகற்றிய பிறகு, சோவியத் அமைப்பும் சரிந்தது” என்று அலெக்சாண்டர் டிடோவ் கூறுகிறார்.
அவர் ஆட்சியில் இருந்து வீழ்ந்த முப்பது ஆண்டுகளில் ரஷ்யா கோர்பச்சேவை கடுமையாக விமர்சித்துள்ளது. அவர் 1996-இல் போரிஸ் யெல்ட்சினுக்கு எதிராக ரஷ்ய அதிபராகப் போட்டியிட்டபோது, அவர் 0.5% வாக்குகளைப் பெற்று மிக மோசமாக தோல்வியடைந்து 7வது இடத்தைப் பிடித்தார்.
ரஷ்யர்கள் நீண்ட காலமாக அவரை மேற்கத்திய நாடுகளால் ஏமாற்றப்பட்ட ஒரு பலவீனமான தலைவராகப் பார்க்கிறார்கள்.
20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய புவிசார் அரசியல் பேரழிவு என்று அதிபர் விளாடிமிர் புதினால் அழைக்கப்பட்டார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பலர் இன்னும் அவரை குற்றம் சாட்டுகிறார்கள். காகசஸ் முதல் செசனியா மற்றும் மத்திய ஆசியா வரையிலான போர்கள் உட்பட பொருளாதார எழுச்சி மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் நிறைந்த ஆண்டுகள் அவை.
புதினின் மேற்கத்திய மோதலும், உக்ரைன் மீதான படையெடுப்பும் கோர்பச்சேவ் மரபைத் தடுத்து மேற்கு நாடுகள் மற்றும்அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தங்களை அழித்துவிட்டது. ரஷ்யாவின் ஆயுதக் களஞ்சியத்தின் அளவு மற்றும் அதன் அழிக்கும் சக்தியைப் பற்றி புதின் திட்டவட்டமாகப் பெருமிதம் கொள்வதால், மாஸ்கோ மற்றும் வாஷிங்டனில் உள்ள அரசியல்வாதிகள் மூன்றாம் உலகப் போரின் அபாயத்தைத் தூண்டியுள்ளனர்.
இப்போது கிரெம்ளினில் ஆட்சியில் இருப்பவர், ரஷ்யா பேரரசில் இருந்து பின்வாங்கி இன்னும் ஒரு பெரிய சக்தியாக இருக்க முடியும் என்று கோர்பச்சேவ் உருவகப்படுத்திய யோசனையையும் முறியடித்துள்ளார் என்று ஜோனாதன் இயேல் கூறினார்.
“ஏகாதிபத்திய ஆசை இப்போது மாஸ்கோவில் அலுவலக ரீதியான கொள்கையாகவும் பொதுவான அணுகுமுறையாகவும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது - நெருக்கடியை எதிர்கொண்டால் அதை டாங்கிகள் கொண்டு நசுக்குவது என்பது இப்போது மீண்டும் பேஷனாகி உள்ளது” என்று ஜோனாதன் இயேல் கூறினார்.
“கோர்பச்சேவ்வின் இறுதி துயரங்களில் ஒன்று, அவரை இறுதியாக ஏற்றுக்கொள்ளவும் ஆதரிக்கும் புள்ளிகள் எதுவும் இன்று ரஷ்யாவின் தலைவர்களால் பாதுகாக்கப்படவில்லை.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.