Indian women’s cricketer Mithali Raj Tamil News: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் நேற்று புதன்கிழமை அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 39 வயதான மிதாலி அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1999ம் ஆண்டு இந்திய மகளிர் அணியில் அறிமுகமானார். இவர் இந்திய மகளிர் அணியின் முகமாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அணிக்கு பல வழிகளில் தனது பங்களிப்பை நல்கி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
Thank you for all your love & support over the years!
I look forward to my 2nd innings with your blessing and support. pic.twitter.com/OkPUICcU4u— Mithali Raj (@M_Raj03) June 8, 2022
மிதாலி ராஜ் தனது 23 வருட வாழ்க்கையில் இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்ட், 232 ஒருநாள் மற்றும் 89 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வலது கை பேட்டரான மிதாலி, ஒரு நாள் போட்டிகளில் இன்றுவரை 7,805 ரன்கள் எடுத்த சாதனை உட்பட, அவரது நெருங்கிய போட்டியாளரான முன்னாள் இங்கிலாந்து கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸை விட கிட்டத்தட்ட 2,000 ரன்களுக்கு மேல் தனது அபாரமான ரன் எடுத்த சாதனைகளுக்காக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். மேலும் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 7 சதங்கள் மற்றும் 64 அரைசதங்களை விலகியுள்ளார். இவரது தலைமையிலான இந்திய மகளிர் அணி 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டு உலகக்கோப்பைகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருக்கிறது.
Your contribution to Indian Cricket has been phenomenal. Congratulations @M_Raj03 on an amazing career. You leave behind a rich legacy.
We wish you all the very best for your second innings 🙌🙌 pic.twitter.com/0R66EcM0gT— BCCI (@BCCI) June 8, 2022
மிதாலி படைத்துள்ள சாதனை பட்டியல்:
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் படைத்துள்ள சாதனைகளை இங்கு பார்க்கலாம்.
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மொத்தமாக 23 வருடங்கள் விளையாடியவர் மிதாலி ராஜ்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட மிதாலி சற்றே முன்னேற்றி இருக்கிறார்.
சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் சச்சின் டெண்டுல்கர் 22 வருடங்கள், 91 நாட்கள் விளையாடியுள்ளார். அதேவேளையில், மிதாலி ராஜ் 22 வருடங்கள், 274 நாட்கள் விளையாடியுள்ளார்.
- அதிக ரன்கள் குவித்தவர் என்கிற சாதனையை மிதாலி படைத்துள்ளார்
மிதாலியின் ஒருநாள் போட்டிக்கான சராசரி 50.6 ஆக உள்ளது. இதுவே இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் சராசரி ஆகும்.
நல்ல சராசரியுடன் 64 அரைசதங்களை விலகியுள்ளார் மிதாலி.
- மிதாலி 155 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 155 ஒருநாள் போட்டிகளில் மிதாலி ராஜ் கேப்டனாக வழிநடத்தி இருக்கிறார். முன்னதாக, முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி 200 ஒருநாள் ஆட்டங்களிலும், முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 176 ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணியை வழிநடத்தியுள்ளனர்.
- மிதாலி ராஜ் சொந்தமாக்கியுள்ள சாதனைகளின் பட்டியல்:
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக கேட்ச்களை (64) பிடித்த வீராங்கனையாக மித்தாலி இருக்கிறார்.
ஓர் ஆண்டில் அதிக டி-20 ரன்கள் (575 ரன்கள்) குவித்தவர்.
தொடர் அரைசதங்களை (7) விளாசியவர்.
டி-20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை குவித்தவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.