இருவேறு தடுப்பூசிகள் போடுவது பக்கவிளைவுகளை அதிகரிக்கும்

Covid vaccination: முதல் டோஸ் ஒரு தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியும் போட்டுக்கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

covid vaccination

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் சிலர் முதல் டோஸ் ஒரு தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியும் போட்டுக்கொள்கின்றனர். ஆனால் இப்படி இருவேறு தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இருவேறு தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. அதாவது Oxford/AstraZeneca கொரோனா தடுப்பூசி மற்றும் Pfizer-BioNTech தடுப்பூசி என வெவ்வெறு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் பொதுவாக ஏற்படும் விளைவிகளை விட சற்று அதிகமான விளைவுகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக லேன்செட் மருத்துவ பத்திரிகையில் வெளிவந்துள்ள ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 4 வார இடைவெளியில் இரு வேறு தடுப்பூசிகளை (Pfizer-BioNTech தொடர்ந்து Oxford/AstraZeneca மற்றும் Oxford/AstraZeneca தொடர்ந்து Pfizer-BioNTech) போட்டு சோதித்தபோது, ஒரே தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதை விட இரண்டாவது, ‘பூஸ்ட்’ டோஸைத் வேறு எடுத்துக்கொள்வது தொடர்ந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில், இதுபோன்ற பக்கவிளைவுகள் மிக குறுகிய காலம் மட்டுமே இருந்தன. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் அளவிற்கு ஆபத்தானதாக இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த பரிசோதனையின் தலைமை புலனாய்வாளர் மேத்யூ ஸ்னேப் கூறுகையில் “இந்த ஆய்வு முடிவு எதுவாக இருந்தாலும் மக்களுக்கு தகவலை தெரிவிக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் பல நாடுகளில் இருவேறு தடுப்பூசிகளை மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என கூறினார்.

இந்த ஆய்வின் முடிவுகளின்படி நோய் தடுப்புக்கு வெவ்வேறு தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் வேலைக்கு வரமுடியாத சூழல் உருவாகும். மேலும் சுகாதாரப் பணியாளர்களின் நோய்த்தடுப்புத் திட்டத்தைத் திட்டமிடும்போது இது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

டாக்டர் ஸ்னேப் கூறுகையில், இதனால் நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்படுமா என்பது குறித்து அடுத்தடுத்த சோதனைகளில் தெரியவரும் என நம்புவதாக கூறினார். இதற்கிடையில் பாராசிட்டமால் தொடர்ந்து எடுத்து வருவதால் இந்த பக்கவிளைவுகளை குறைக்கமுடியுமா என்பது பற்றியும் ஆய்வு நடந்து வருகிறது என்றார்.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.இளம் வயதினருக்கும் வெவ்வேறு தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ரியாக்டோஜெனிசிட்டி என்பது தடுப்பூசியை உடலில் செலுத்திய பின் ஏற்படும் பக்கவிளைவுகள் ஆகும். பொதுவாக உடல் வலி, புண், சிவத்தல் அல்லது வீக்கம், காய்ச்சல், தலைவலி போன்றவை இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mixing covid 19 vaccines increases reactogenicity

Next Story
வங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express