Moderna, Pfizer vaccines work better in men :
அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளில் ஒரு முக்கியமான நுணுக்கம் குறித்து ஒரு ஆராய்ச்சியாளர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் - மாடர்னா மற்றும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் பெண்களை விட ஆண்களுக்கு சற்று சிறப்பாக செயல்படுவதாகத் தெரிகிறது. மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மோர்டெஸா மஹ்முதீ, நானோ மெடிசின் ஆய்வுகளில் பாலினத்தின் பங்கு குறித்து கவனம் செலுத்தும் மூன்று சக மதிப்பாய்வு ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அவை அனைத்தும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுடன் தொடர்புடையவை. நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வியாழக்கிழமை சமீபத்திய கட்டுரை வெளியாகியுள்ளது.
மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகள் நம் நோயெதிர்ப்பு மண்டலங்களில் உள்ள உயிரணுக்களுக்கு தேவையான உட்பொருட்களை சிறிய உருண்டைகள் அல்லது நானோ துகள்களைப் பயன்படுத்துகின்றன. நோயாளிகளின் பாலினத்தின் அடிப்படையில் நானோ மெடிசின்கள் எவ்வாறு, ஏன் வித்தியாசமாக பாதிக்கப்படலாம் என்பதை மஹ்மூதி ஆய்வு செய்து வருகிறார். தடுப்பூசிகளுடன் இது ஒரு காரணியாக இருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
மஹ்மூதி தனது சமீபத்திய ஆய்வறிக்கையில், நானோ துகள்கள் எவ்வாறு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் படிக்கப்படுகின்றன என்பதில் முறையான மாற்றங்களை முன்வைத்துள்ளார். அவரது கட்டுரை நானோ மெடிசின் செயல்திறனில் பாலினத்தின் பங்கை ஆராய்ச்சி செய்வதில் உள்ள சவால்களை அடிகோடிட்டு காட்டுகிறது.
எடுத்துக்காட்டாக, ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் எடுக்கப்பட்ட உயிரணுக்களில் அல்லது பிற மாதிரிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆயினும்கூட இந்த ஆராய்ச்சியாளர்களும் மற்றவர்களும் தங்கள் முடிவுகளை அனைத்து பாலினங்களுக்கும் சமமாக பொருந்தும் என்று விளக்கலாம். இதைத் தடுக்க, ஆராய்ச்சியாளர்கள் மிகவும் வெளிப்படையானவர்களாகவும், பாலியல் சார்ந்த ஆய்வுகளின் வரம்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் மஹ்மூதி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் படிக்க : இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற அமெரிக்கா செல்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர்
மாடர்னா தடுப்பூசியைப் பொறுத்தவரை, மருத்துவ பரிசோதனைகள் ஆண்களுக்கு கோவிட் தொற்றை எதிர்ப்பதில் 95.4% பயனுள்ளதாக இருப்பதைக் காட்டியது, பெண்களில் இந்த சதவிகிதம் 93.1% ஆக இருக்கிறது. ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் ஆண்களுக்கு 96.4% மற்றும் பெண்களுக்கு 93.7% ஆகும்.
லிபிட்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நானோ துகள்களை இரண்டு தடுப்பூசிகளும் பயன்படுத்துகின்றன. மருந்தக நிறுவனங்கள் இந்த சிறிய லிப்பிட் அடிப்படையிலான துகள்களை தடுப்பூசிகளின் செயலில் உள்ள பொருட்களுடன் பேக் செய்கின்றன.
ரோமின் சபியென்சா (Sapienza University) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் பணிபுரியும் மஹ்மூதி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடுப்பூசி செயல்திறனில் உள்ள வேறுபாட்டிற்கு பின்னால் லிப்பிட் அடிப்படையிலான நானோ துகள்கள் ஒரு காரணமாக இருக்க முடியுமா என்பதை சோதிக்க ஒரு பரிசோதனையை வடிவமைத்தார். அந்த ஆய்வு மே 13 அன்று Molecular Pharmacology இதழில் வெளியிடப்பட்டது.
பெண்கள் உடலில் இருக்கும் நேச்சுரல் கில்லர் செல்கள் ஆண்களில் இருக்கும் நேச்சுரல் கில்லர் செல்களைக் காட்டிலும் குறைந்த அளவே நானோ மருந்தினை எடுத்துக் கொள்கிறது. இந்த மாதிரி முறையின் அடிப்படையில், ஆண்களின் மற்றும் பெண்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் தடுப்பூசிக்கு வித்தியாசமாக பதிலளிக்கும் என்று நம்பப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil