மாடர்னா தடுப்பூசி குழந்தை மாதிரியில் நோயெதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துகிறது

Moderna vaccine elicits immune response in infant model தடுப்பூசிகளின் நீண்டகால பாதுகாப்பை நன்கு புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு சவாலான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக வட கரோலினா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

Moderna vaccine elicits immune response in infant model Tamil News
Moderna vaccine elicits immune response in infant model Tamil News

Moderna vaccine elicits immune response in infant model Tamil News : மாடர்னா எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி மற்றும் புரத அடிப்படையிலான தடுப்பூசி வேட்பாளர், குழந்தை ரீசஸ் மாகாக்ஸில் (baby rhesus macaques), முன் மருத்துவ ஆராய்ச்சியில் SARS-CoV-2-க்கு நீடித்த நடுநிலையான ஆன்டிபாடி ரெஸ்பான்ஸை வெளிப்படுத்தியதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்தனர். இதில் பாதகமான விளைவுகள் எதுவும் இல்லை.

சிறு குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் முக்கியமானவை என்றும் அவை தொற்றுநோயைக் குறைப்பதற்கான பாதுகாப்பு கருவிகள் என்றும் அறிவியல் இம்யூனாலஜியில் வெளியிடப்பட்ட முடிவுகளில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

16 குழந்தை ரீசஸ் மாகாக்ஸில், தடுப்பூசிகளால் வெளிப்படுத்தப்பட்ட வலுவான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடி ரெஸ்பான்ஸ் 22 வாரங்கள் நீடித்தன. தடுப்பூசிகளின் நீண்டகால பாதுகாப்பை நன்கு புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு சவாலான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக வட கரோலினா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

SARS-CoV-2 குழந்தை தடுப்பூசியை மதிப்பீடு செய்ய, 2.2 மாத வயதில் 8 குழந்தை rhesus macaques, இரண்டு குழுக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் வழங்கினர். தொடர்ந்து, நான்கு வாரங்களுக்குப் பிறகு கலிபோர்னியா தேசிய பிரைமேட் ஆராய்ச்சி மையத்திலும் வழங்கினர். ஒவ்வொன்றும், இரண்டு தடுப்பூசி வகைகளில் ஒன்றைப் பெற்றன. அதாவது, மாடர்னா எம்ஆர்என்ஏ தடுப்பூசியின் முன்கூட்டிய பதிப்பு அல்லது அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் ஒரு பகுதியான தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் (என்ஐஐஐடி) தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட புரத அடிப்படையிலான தடுப்பூசி ஆகியவை பெற்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Moderna vaccine elicits immune response in infant model tamil news

Next Story
கிராபென் பயன்படுத்தி கொரோனா வைரஸை விரைவாக கண்டறியலாம்; புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com