Advertisment

இந்தியாவில் சிறுபான்மை அரசுகளைக் குறிப்பிட்ட மோடி: குறைவான எம்.பி.க்கள் கொண்ட கட்சிகளின் பிரதமர்கள்

மக்களவையில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 272 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்கள் தேவை. இருப்பினும், ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்து ஒரு பிரதமரை வழங்கியது.

author-image
WebDesk
New Update
Modi

இந்தியாவில் சிறுபான்மை அரசுகளைக் குறிப்பிட்ட மோடி: லோக்சபாவில் குறைவான எம்.பி.க்கள் கொண்ட கட்சிகளின் பிரதமர்கள்

மக்களவையில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 272 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்கள் தேவை. இருப்பினும், ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்து ஒரு பிரதமரை வழங்கியது. ஆனால், அந்த கட்சி ஒரு சில இடங்களை மட்டுமே வென்றிருந்தது.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (செப்டம்பர் 18) நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மக்களவையில் தனது உரையுடன் தொடங்கி வைத்தார். அங்கே பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை குறிப்பிட்டார்.

அவர் பல நிகழ்வுகளைப் பற்றி பேசினார். மோடி சுட்டிக் காட்டி பேசியதாவது: “இந்தப் நாடாளுமன்றம் வெறும் நான்கு எம்.பி.க்கள் கொண்ட கட்சி ஆட்சியில் அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளது, அதே நேரத்தில், 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சியாகவும் அமர்ந்திருந்தது.” என்று கூறினார்.

ஒரு கட்சிக்கு லோக்சபாவில் 272 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்கள் ஆட்சி அமைப்பதற்குத் தேவை (மொத்த இடங்கள் 543 பிளஸ் 2 ஆங்கிலோ-இந்தியன் பரிந்துரைகள்). இருப்பினும், ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்து, ஒரு பிரதமரை வழங்கியது, அந்த கட்சி ஒரு சில இடங்களை மட்டுமே வென்றிருந்தது. அப்படிப்பட்ட மூன்று பிரதமர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சந்திர சேகர் (ஜனதா தளம் (சமாஜ்வாடி))

காங்கிரஸ் கட்சி 1984-ல் பெற்றிருந்த 404 இடங்களில் இருந்து 1989 லோக்சபா தேர்தலில் 197 இடங்கள் பெற்று சரிந்த பின்னர் பெரும் பின்னடைவை சந்தித்தது. ஜனதா தளம் 143 இடங்களை பெற்று ஆட்சியை பிடித்தது. இடதுசாரி கட்சிகள் மற்றும் பா.ஜ.க வெளியில் இருந்து ஆதரவளித்தது. வி.பி. சிங் பிரதமர் ஆனார். வி.பி. சிங்கிற்கு உயர் பதவி வழங்குவதற்கான முடிவு சந்திர சேகருக்கு விருப்பமில்லை. அவர் அந்த பதவிக்கு தன்னை மிகவும் தகுதியானவர் என்று கருதினார்.

ch

சந்திர சேகர் மார்ச் 25, 1991 அன்று பீகாரில் உள்ள சாப்ராவில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

எனவே, 1980 முதல் ஜனதா தளத்தின் ஒரு பகுதியாக இருந்த சந்திர சேகர், 64 எம்.பி.க்களுடன் கட்சியில் இருந்து விலகி ஜனதா தளம் (சமாஜ்வாடி) என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார். நவம்பர் 10, 1990-ல் வெளியில் இருந்து காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார். இருப்பினும், அவரது பதவிக்காலம் 223 நாட்கள் மட்டுமே நீடித்தது.

எச்.டி. தேவ கவுடா (ஜனதா தளம்)

1996 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க 161 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார். ஆனால், அவர் பெரும்பான்மை பலம் பெறத் தவறியதால் சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் ராஜினாமா செய்தார்.

hd

எச்.டி. தேவ கவுடா (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

இதையடுத்து, தேர்தலில் 45 இடங்களைப் பெற்ற ஜனதா தளம் உட்பட 13 கட்சிகளின் கூட்டணியாக ஐக்கிய முன்னணி உருவானது. காங்கிரஸ் கட்சி (140 இடங்களை வென்றது) வெளியில் இருந்து அளித்த ஆதரவின் உதவியுடன், ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. அப்போது கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எச்.டி. தேவ கவுடா பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்ததை அடுத்து அவரது பதவிக்காலம் குறைக்கப்பட்டது. தேவகவுடாவுக்குப் பதிலாக மற்றொரு ஐக்கிய முன்னணி/ஜனதா தளத் தலைவர் ஐ.கே. குஜ்ரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐ.கே. குஜ்ரால் (ஜனதா தளம்)

ஐ.கே. குஜ்ரால் பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பு எச்.டி தேவ கவுடாவின் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். பீகாரில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராகவும், பஞ்சாபின் ஜலந்தர் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தார்.

ik

ஐ.கே. குஜ்ரால் மாலத்தீவுக்கு புறப்படுவதற்கு முன் பாலம் விமானப்படை நிலையத்தில். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் சுனில் சக்சேனா)

ஆனால், அவருக்கு முந்தைய பிரதமரைப் போலவே, அவர் அலுவலகத்தில் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அவர் ஒரு வருடத்திற்குள் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. 11-வது மக்களவை கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment