பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அனைத்து சமூக ஊடக கணக்குகளிலிருந்தும் விலகும் தனது விருப்பத்தை டுவிட் செய்திருந்தார். இந்த ஞாயிற்றுக்கிழமை என்னுடைய ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யுடியூப் ஆகிய சமூக ஊடகக் கணக்குகளை விட்டுக்கொடுக்க நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் பதிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது பிம்பத்தை உருவாக்க சமூக ஊடகங்களை சிறப்பாக பயன்படுத்திவர் என்பதால் பிரதமரின் இந்த அறிவிப்பு பெரியதாக கருதப்படுகிறது. அவர் பிரதமராக வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அனைத்து உலகளாவிய சமூக ஊடக தளங்களிலும் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார்.
This Women's Day, I will give away my social media accounts to women whose life & work inspire us. This will help them ignite motivation in millions.
Are you such a woman or do you know such inspiring women? Share such stories using #SheInspiresUs. pic.twitter.com/CnuvmFAKEu
— Narendra Modi (@narendramodi) March 3, 2020
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இன்று தனது சஸ்பென்ஸை முடித்துக்கொண்டு, “எனது சமூக ஊடக கணக்குகளை தங்கள் வாழ்க்கை மற்றும் வேலைகள் மூலம் நமக்கு ஊக்கமளிக்கும் பெண்களுக்கு வழங்க வேண்டும்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களின் திறனை உணர்ந்த முதல் மைய நீரோட்ட அரசியல்வாதிகளில் ஒருவரான நரேந்திர மோடி 2009-ம் ஆண்டில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய இரண்டிலும் தீவிரமாக இருந்தார். 2007-ம் ஆண்டிலேயே அவருக்கு ஒரு யூடியூப் சேனல் இருந்தது. இப்போது, அவரது டுவிட்டர் கணக்கு 53.3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்டுள்ளது. முதலில் பராக் ஒபாமா (113.3 மில்லியன் ஃபாலோவர்கள்) அடுத்து டொனால்ட் டிரம்ப் (73.3 மில்லியன் ஃபாலோவர்கள்) இவர்களுக்குப் பிறகு பிரதமர் மோடி டுவிட்டரில அதிகமான ஃபாலோவர்களைக் கொண்டு மூன்றாவது உலகத் தலைவராக திகழ்கிறார்.
பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கை 35.2 மில்லியன் பேர் பின்தொடர்ந்து அதிகமானோர் பின்தொடரும் தலைவராக்கியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் பராக் ஒபாமாவை 26.9 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். மேலும், பிரதமர் மோடியின் யுடியூப் சேனலில் 4.51 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். மேலும், அவர் நிறைய இந்திய பயனர்களைக் கவரும் முக்கிய நபராக இருந்துவருகிறார். அவர்களில் சிலர் நரேந்திர மோடியின் பதிவுகளைப் பின்பற்றுகிறார்கள்.
எல்லா சமூக ஊடகங்களையும் விட்டு வெளியேறுவது சாத்தியமா?
ஆம். எல்லா சமூக ஊடகங்களையும் விட்டு நிச்சயமாக வெளியேற முடியும். பேஸ்புக் முதல் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் வரையிலான அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களும் பயனர்களுக்கு தங்கள் கணக்குகளை செயலிழக்கச் செய்வதற்கான விருப்பத்தை அளிக்கின்றன அல்லது அவர்கள் விரும்பினால் அவற்றை முழுவதுமாக நீக்க முடியும். ஒரு கணக்கை செயலிழக்கச் செய்வது என்பது உங்கள் கணக்கு நீக்கப்படவில்லை. அதை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யும் வரை அது தற்காலிகமாக பயன்பாட்டில் இருக்காது. ஒரு கணக்கை செயலிழக்கச் செய்தால், அந்தக் கணக்கிற்கான கடவுச்சொல் மற்றும் மின்னஞ்சல் ஐடியைப் பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் அந்த தளத்தை திரும்பப் பெற முடிவு செய்தால் இவை உங்களுக்குத் தேவைப்படும்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில், நீங்கள் ஒரு கணக்கை தற்காலிகமாக செயலிழக்க செய்யலாம். புதிய சமூக ஊடகக் கணக்கான டிக்டாக் பயனர்கள் தங்கள் கணக்கை முழுவதுமாக நீக்க அனுமதிக்கிறது. டுவிட்டரில், கணக்கை செயலிழக்கச் செய்வதற்கான தேர்வு உள்ளது. உங்கள் கணக்கை முழுவதுமாக நீக்க மட்டுமே வாட்ஸ்அப் அனுமதிக்கிறது.
பியூ ரிசர்ச் நடத்திய 2018 சர்வேவில் சுவாரஸ்யமான விஷயம், அமெரிக்க சமூக ஊடக பயனர்களில் சுமார் 59 சதவீதம் பேர் எந்த தளங்களையும் விட்டு வெளியேறுவது கடினம் அல்ல என்று கருதியுள்ளனர். சுமார் 40 சதவீதம் பேர் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறுவது ஒரு பிரச்சினையாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இது 2014 ஆம் ஆண்டில் கடைசியாக சர்வே நடத்தப்பட்டபோது 28 சதவீதத்திலிருந்து உயர்ந்துள்ளது.
நீங்கள் பேஸ்புக் கணக்கை நீக்கும்போது அல்லது செயலிழக்கச் செய்யும் போது என்ன பொருள்?
பேஸ்புக் பயனர்களுக்கு தங்கள் கணக்கை செயலிழக்க அல்லது முற்றிலும் நீக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. நீக்குவது என்றால் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படாது. மேலும், உங்கள் புகைப்படங்கள், பதிவுகள், வீடியோக்கள் போன்றவை என்றென்றும் இல்லாமல் போய்விடும். இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு முன் உங்கள் அனைத்து பேஸ்புக் தரவையும் பதிவிறக்குவதற்கான விருப்பம் உங்களுக்கு உள்ளது. மேலும், நீக்குவதற்கும் பரிந்துரை செய்துள்ளது. உங்கள் பேஸ்புக் கணக்கை நீக்குவது என்பது நெட்வொர்க்கில் மற்றவர்கள் இடுகையிட்ட உங்கள் புகைப்படங்கள் நீக்கப்பட்டதாக அர்த்தமல்ல. நீங்கள் பதிவேற்றிய உள்ளடக்கம் மட்டுமே நீக்கப்படும்.
உங்கள் பேஸ்புக் கணக்கை நீக்கியதும் பேஸ்புக் மெசஞ்சர் அணுகலும் இல்லாமல் போய்விடும். இருப்பினும், உங்கள் கணக்கு நீக்கப்பட்ட பிறகு நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பிய செய்திகள் அவர்களின் இன்பாக்ஸில் தெரியும். ஆனால், அந்த செய்திகளுக்கு அடுத்ததாக உங்கள் கணக்கு பெயர் மறைந்துவிடும்.
நீங்கள் கணக்கை நீக்கும்போது பிற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுக்கான பேஸ்புக் உள்நுழைவும் ரத்து செய்யப்படுகிறது. எனவே நீங்கள் சமூக வலைப்பின்னலைப் பயன்படுத்தி ஒரு பயன்பாட்டில் உள்நுழைந்திருந்தால், நீக்குவதற்கு முன்பு, அங்கு ஒரு புதிய கணக்கை உருவாக்குவது நல்லது.
ஆனால், பேஸ்புக் பயனர்கள் இந்த நடவடிக்கையைத் தொடங்கி 30 நாட்களுக்குள் இருந்தால் நீக்குதலை ரத்து செய்வதற்கான விருப்பத்தையும் வழங்குகிறது. எல்லா தரவையும் நீக்குவதற்கு 90 நாட்கள் வரை ஆகலாம் என்பதையும் ஒப்புக்கொள்கிறது. இருப்பினும் தகவல்களை மற்ற பயனர்கள் அணுக முடியாது.
“உங்கள் தகவல்களின் நகல்கள் பேரழிவு, மென்பொருள் பிழை அல்லது பிற தரவு இழப்பு நிகழ்வு ஏற்பட்டால் மீட்க நாங்கள் பயன்படுத்தும் காப்பு சேமிப்பகத்தில் 90 நாட்களுக்குப் பிறகு இருக்கலாம். சட்ட சிக்கல்கள், விதிமுறை மீறல்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் தடுப்பு முயற்சிகள் போன்றவற்றிற்காகவும் நாங்கள் உங்கள் தகவல்களை வைத்திருக்கலாம்” என்று நிறுவனம் குறிப்பிடுகிறது.
பேஸ்புக்கை செயலிழக்கச் செய்வதன் மூலம், உங்கள் சுயவிவரம் மறைக்கப்படும். ஆனால், புகைப்படங்கள், பதிவுகள் மற்றும் வீடியோக்கள் நீக்கப்படாது. பேஸ்புக் மெசஞ்சர் அணுகல் தொடரும். சுயவிவரப் படம் உங்கள் நண்பருடனான உரையாடல்களில் இருக்கும். இணையத்தில் மக்கள் உங்களை பெயர் மூலம் தேட முடியும்.
பிற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுக்கான பேஸ்புக் உள்நுழைவு தொடரும். இது நீக்குவதைப் போல இல்லாமல் ஒருவர் விரும்பும் போதெல்லாம் தங்கள் கணக்கை மீண்டும் இயக்கலாம்.
பேஸ்புக் கணக்கை தற்காலிகமாக செயலிழக்க செய்வது எப்படி
பேஸ்புக் அமைப்புகளுக்குச் செல்லவும், பின்னர் பேஸ்புக் தகவல்.
டெலிஷன் அல்லது டி ஆக்டிவேஷன் தேவையானதை கிளிக் செய்யவும்.
கணக்கை செயலிழக்க (டிஆக்டிவேஷன்) என்பதைத் தேர்வுசெய்து, ‘கணக்கு செயலிழக்க தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்க.
கணக்கு செயலிழக்கப்படுவதற்கு முன்பு உங்கள் கடவுச்சொல் கேட்கப்படும்.
உங்கள் கணக்கை மீண்டும் செயல்படுத்த, கணக்கில் உள்நுழையும்போது நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல், மொபைல் எண்ணை அணுக வேண்டும்.
பேஸ்புக் கணக்கை நிரந்தரமாக நீக்குவது எப்படி?
முதலில் உள்நுழைந்து உங்கள் பேஸ்புக் தகவலின் நகலைப் பதிவிறக்கவும். இதைப் பதிவிறக்குவதற்கான விருப்பம் உங்கள் பேஸ்புக் தகவல் அமைப்புகளின் ஒரு பகுதியாக உள்ளது.
உங்கள் தகவலைப் பதிவிறக்கியதும், செயலிழக்கச் செய்தல் மற்றும் நீக்கு என்பதைக் கிளிக் செய்க.
கணக்கை நீக்கு என்பதைத் தேர்வுசெய்து, கணக்கு நீக்குதலுக்குத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்க. உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். முடிந்ததும், கணக்கு நீக்கு என்பதைத் தொடர்ந்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்க.
ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கும்போது அல்லது செயலிழக்கச் செய்யும்ம்போது என்ன நடக்கும்?
இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்குவதற்கு அல்லது செயலிழக்கச் செய்வதற்கான விருப்பங்களை வழங்குகிறது அல்லது முற்றிலும் நீக்குகிறது. செயலிழக்கச் செய்தால், பயனரின் சுயவிவரம், புகைப்படங்கள், கருத்துகள் மற்றும் விருப்பங்கள் அனைத்தும் தளத்திலிருந்து மறைக்கப்படுகின்றன. மேலும், இந்த தரவுகள் எதுவும் நீக்கப்படவில்லை.
மீண்டும் உள்நுழைந்து கணக்கை மீண்டும் செயல்படுத்தும் வரை அவை மறைக்கப்படும். உங்களுக்கு நிறைய பின்தொடர்பவர்கள் இருந்தால், அவர்களால் இனி உங்கள் கணக்கைக் கண்டுபிடிக்க முடியாது, உங்கள் புகைப்படங்களைப் பார்க்கவும் முடியாது.
உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்குவது மிகவும் கடுமையானது. இது நிரந்தர விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் இந்த நடவடிக்கை எடுத்தவுடன் கணக்கு, சுயவிவரம், புகைப்படங்கள், வீடியோக்கள், கருத்துகள், விருப்பங்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் அனைவரும் நிரந்தரமாக அகற்றப்படுவார்கள். மேலும், நீங்கள் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கியதும், அதே பயனர்பெயருடன் மீண்டும் பதிவுபெறவோ அல்லது அந்த பயனர்பெயரை மற்றொரு கணக்கில் சேர்க்கவோ முடியாது. இன்ஸ்டாகிராம் “நீக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் செயல்படுத்தாது.”
இணைய உலாவியில் இருந்து ஒரு கணக்கை செயலிழக்க அல்லது நீக்க மட்டுமே இன்ஸ்டாகிராம் உங்களை அனுமதிக்கும். ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்ட் பயன்பாட்டில் இந்த அமைப்பு கிடைக்கவில்லை.
உங்கள் இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தை முடக்குவதற்கான முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் இன்ஸ்டாகிராம் சுயவிவரப் பக்கத்தைத் திறந்து, சுயவிவரத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்க.
கணக்கு விருப்பத்தை தற்காலிகமாக முடக்க கீழே ஸ்க்ரோல் செய்யவும்.
நீங்கள் உங்கள் கணக்கை ஏன் செயலிழக்க செய்கிறீர்கள் என்பதற்கான காரணத்தை தேர்வு செய்ய வேண்டும் என இன்ஸ்டாகிராம் விரும்புகிறது. “உங்கள் கணக்கை ஏன் முடக்குகிறீர்கள்?” என்ற கேள்விக்கு அடுத்து கீழே தோன்றும் மெனுவிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மெனுவிலிருந்து ஒரு காரணத்தை நீங்கள் தேர்ந்தெடுத்த பின்னரே முடக்குவதற்கு விருப்பம் தோன்றும் என்பதால் ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுப்பது கட்டாயமாகும்.
உங்கள் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிட இன்ஸ்டாகிராம் உங்களைக் கேட்கும். ‘தற்காலிகமாக கணக்கை முடக்கு’ என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும். நீங்கள் மீண்டும் இயக்க விரும்பினால், கடவுச்சொல்லை மறந்துவிடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் மீண்டும் உள்நுழைந்து கணக்கை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
உங்கள் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான முறை:
உங்கள் கணக்கை நீக்கும் பக்கத்திற்குச் செல்லவும். இது வழக்கமான அமைப்புகளில் காண்பிக்கப்படாது. அதற்கு பதிலாக instagram.com/accounts/request/remove/permanent என்ற இணைப்பு உள்ளது.
உங்கள் கணக்கை ஏன் நீக்குகிறீர்கள் என்பதற்கான சரியான காரணத்திற்காக மீண்டும் ஒரு விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இது கட்டாயமாகும்.
உங்கள் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடவும்.
‘எனது கணக்கை நிரந்தரமாக நீக்கு’ என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.
டுவிட்டர் கணக்கை நீக்க முடியுமா? நீக்கும்போது என்ன நடக்கும்?
டுவிட்டர் ஒரு கணக்கை செயலிழக்கச் செய்வதற்கான விருப்பத்தை மட்டுமே வழங்குகிறது. உங்கள் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்க விருப்பமில்லை. உங்கள் டுவிட்டர் கணக்கை நீங்கள் செயலிழக்கச் செய்யும்போது, பெயர், பயனர்பெயர் மற்றும் பொது சுயவிவரம் ஆகியவை டுவிட்டரின் வலைத்தளம், அதன் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டில் இனி தெரியாது.
உங்கள் எல்லா தரவையும் பதிவிறக்க இந்த தளம் உங்களை அனுமதிக்கும். ஆனால், நீங்கள் செயலிழக்கச் செய்வதற்கு முன் கோரிக்கை அனுப்பப்பட வேண்டும். “உங்கள் தரவைப் பதிவிறக்குவதற்கான இணைப்புகளை செயலிழக்கச் செய்த கணக்குகளுக்கு அனுப்ப முடியாது” என்று செயலிழக்கச் செய்யும் பக்கத்தைக் குறிப்பிடுகிறது.
செயலிழக்கச் செய்யும் நேரத்திலும் மீண்டும் செயல்படுத்தும் காலத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இப்போது, இது அமைப்புகள் பக்கத்தில் 30 நாட்கள் அல்லது 12 மாதங்கள் என இரண்டு விருப்பங்களைக் காட்டுகிறது. டுவிட்டர் ஒரு பொது தளம் என்பதால், நீங்கள் ஒரு கணக்கை செயலிழக்க செய்தாலும், சில கணக்கு தகவல்கள் கூகிள் அல்லது பிங் போன்ற தேடுபொறிகளில் கிடைக்கக்கூடும்.
உங்கள் டுவிட்டர் கணக்கை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?
உங்கள் சுயவிவர ஐகானை கிளிக் செய்து அமைப்புகள் மற்றும் தனியுரிமைக்குச் செல்லவும்.
கணக்கைத் திறந்து கீழே உங்கள் கணக்கை செயலிழக்க தட்டவும்.
கேட்கும் போது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு செயலிழக்க செய்வதை உள்ளீடு செய்யவும்.
பின்னர் திறப்பதன் மூலம் உறுதிப்படுத்தி செயலிழக்கச் செய்யவும்.
யுடியூப் சேனலை நீக்குவது அல்லது மறைப்பது எப்படி?
பயனர்கள் தங்கள் சேனலை மறைக்க அல்லது நிரந்தரமாக நீக்குவதற்கான விருப்பத்தை யுடியூப் வழங்குகிறது. உங்கள் சேனலை நீங்கள் மறைத்தால், சேனல் பெயர், வீடியோக்கள், விருப்பங்கள், சந்தாக்கள் மற்றும் சந்தாதாரர்கள் அனைத்தும் தனிப்பட்டதாக மாற்றப்படும். மறைப்பது யுடியூப்பின் சேவையகங்களிலிருந்து உள்ளடக்கத்தை நீக்காது மற்றும் பயனர்கள் அதை மீண்டும் செயல்படுத்த விருப்பம் உள்ளது.
ஆனால், நீங்கள் ஒரு சேனலை மறைக்கும்போது எல்லா கருத்துகளும் பதில்களும் நிரந்தரமாக நீக்கப்படும். பிற கூகுள் பண்புகளின் தரவு பாதிக்கப்படாது.
யுடியூப் சேனலை எவ்வாறு மறைப்பது?
கணினியில் யுடியூப்பில் உள்நுழைக
மேம்பட்ட கணக்கு அமைப்புகளுக்குச் செல்லவும். கணக்கு> அமைப்புகள் அல்லது கீழ் இடது கை மூலையில் கிளிக் செய்யவும், மேம்பட்ட அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
கீழே, சேனலை நீக்குவதற்கான ஒரு விருப்பம் இருக்கும். மறை அல்லது நீக்கு விருப்பங்கள் உள்ளன.
இணைப்புக்குச் செல்லவும். உங்கள் கணக்கில் உள்நுழைந்து, எனது சேனலை மறைப்பதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்க.
உங்கள் சேனலில் மறைக்கப்படுவதைத் தேர்ந்தெடுக்கவும்.
எனது சேனலை மறை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
யுடியூப் சேனலை எவ்வாறு நீக்குவது?
மேலே குறிப்பிடுள்ளபடி நீக்குவதற்கு சேனல் அமைப்புகளை அடைந்ததும், நீங்கள் மீண்டும் உள்நுழைய வேண்டும்.
எனது உள்ளடக்கத்தை நிரந்தரமாக நீக்க விரும்புகிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் சேனலை நீக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த பெட்டிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
எனது சேனலை நீக்கு அல்லது எனது உள்ளடக்கத்தை நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
புதுப்பிப்புக்கு சிறிது நேரம் ஆகலாம் என யுடியூப் கூறுகிறது. எனவே, உங்கள் வீடியோக்களின் வரிசைகளை ஒரு குறுகிய காலத்திற்கு தொடர்ந்து காணலாம். உங்கள் கூகுள் கணக்கில் உள்ள வேறு எந்த தரவும் பாதிக்கப்படாது.
டிக்டாக் கணக்கை நீக்குவது எப்படி?
டிக்டாக் இப்போது கணக்கை முழுவதுமாக நீக்குவதற்கான ஒரு விருப்பத்தை மட்டுமே வழங்குகிறது. செயலிழக்கச் செய்வதற்கான தேர்வு இல்லை. இது நிரந்தரமானது மற்றும் மாற்றியமைக்க முடியாது. நீக்கப்பட்ட கணக்கிற்கு மீட்பு எதுவும் இல்லை. உங்கள் கணக்கு நீக்கப்பட்டதும், டிக்டாக்கில் உள்நுழைய கணக்கைப் பயன்படுத்த முடியாது. மேலும் நீங்கள் இடுகையிட்ட வீடியோக்களுக்கான அணுகலை இழக்கிறீர்கள். டிக்டாக்கில் வாங்கிய எந்தவொரு பொருளும் இழக்கப்படும். மேலும், பணத்தைத் திரும்பப் பெற முடியாது. இருப்பினும், அரட்டை செய்திகள் போன்ற பகிரப்பட்ட தகவல்கள் இன்னும் மற்றவர்களுக்குத் தெரியும்.
உங்கள் டிக்டாக் கணக்கை நீக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்
சுயவிவர பக்கத்துக்குச் சென்று அமைப்புகள் ஐகானைத் தட்டவும்
எனது கணக்கை நிர்வகி> கணக்கை நீக்கு என்பதைத் திறக்கவும்
உங்கள் கணக்கை நீக்க பயன்பாட்டில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.