Advertisment

மோடி- சுந்தர் பிச்சை பேச்சு: இந்தியாவில் கூகுள் தொழில்நுட்ப தயாரிப்பு திட்டங்கள் ஏன் மிகவும் முக்கியமானவை?

உலகளாவிய நிறுவனங்கள் சீனாவிலிருந்து விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்த விரும்புவதால், உயர்நிலை தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கான (High-end tech products) உற்பத்தி இடமாக இந்தியா மாற விரும்புகிறது. தற்போதைய நிலை என்ன, அதை மாற்ற இந்தியா என்ன செய்கிறது?

author-image
WebDesk
New Update
Chrome.jpg

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இருவரும் திங்கள்கிழமை (அக்டோபர் 16) இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவுவதற்கான கூகுளின் திட்டம் குறித்து விவாதித்தனர்.

Advertisment

மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஆன்லைன் வீடியோ கான்பிரன்ஸ் உரையாடலின் போது, ​​இந்தியாவில் குரோம்புக்  (Chromebook) லேப்டாப்களை தயாரிப்பதற்கு ஹெவ்லெட் பேக்கார்ட் (HP) உடன் கூகுள் இணைந்துள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டினார். ஆல்பாபெட் கூகுளின் தாய் நிறுவனம் ஆகும்

இந்தியாவில் குரோம்புக் தயாரிப்பு இதில் உள்ள பெரிய விஷயம் என்ன?

இந்தியாவில் குரோம்புக் உற்பத்தியானது நாட்டின் மின்னணுவியல் உற்பத்தி லட்சியங்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது. புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு விடையிறுக்கும் வகையில் உலகளாவிய நிறுவனங்கள் விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்த விரும்புவதால், இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்குவதற்கான மிக உயர்ந்த பெயர்களில் கூகுளை இது சேர்த்துள்ளது.

கூகுளின் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும் லேப்டாப்பான குரோம்புக், சென்னைக்கு அருகிலுள்ள ஃப்ளெக்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இங்கு ஆகஸ்ட் 2020 முதல் ஹெச்.பி பல்வேறு வகையான லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களை தயாரித்து வருகிறது.  குரோம்புக், உற்பத்தி இங்கு அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவில் குறைந்த விலை PC-களுக்கான தேவை உள்ளது. குறிப்பாக கல்வித் துறை பயன்பாட்டிற்கு தேவை உள்ளது. 

உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் Chromebooks மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் இந்தியாவில் பெரும்பாலாலும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் மூலம் இயங்கும் லேப்டாப்கள் பயன்படுத்தப்படுகிறது.  

இந்தியாவில் Chromebooks தயாரிப்பது, Dell, Lenovo மற்றும் Asus போன்ற நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்ட Windows லேப்டாப்களுடன் Google மிகவும் திறம்பட போட்டியிட உதவும்.

இந்தியாவிற்கு உள்ளூர் மின்னணு உற்பத்தி ஏன் முக்கியமானது?

பல தசாப்தங்களாக தொழில்நுட்ப பொருட்கள் உற்பத்தியின் மையமாக இருந்து வரும் சீனாவில் இருந்து , குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் விலகிச் செல்ல விரும்புவதால், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் "நம்பகமான பார்ட்னராக" தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்தியா முயல்கிறது.

எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மடிக்கணினிகள்/கணினிகளின் இந்திய இறக்குமதி கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. தனிநபர் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளின் இந்திய இறக்குமதியில் தோராயமாக 70-80% சீனாவில் இருந்து வருகிறது. இந்த நிலையை விரைவில் மாற்ற டெல்லி விரும்புகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலத்தில், எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதி 4.73 பில்லியன் டாலரிலிருந்து 6.96 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, ஒட்டுமொத்த இறக்குமதியில் 4-7% பங்கு இருந்தது.

மையத்தின் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ)  Centre’s production-linked incentive (PLI) திட்டத்திற்கான சாளரம் ஆகஸ்ட் மாதம் மூடப்பட்டது.  டெல், ஹெச்பி, ஆசஸ், ஏசர் மற்றும் லெனோவா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் சர்வர்களைத் தயாரிக்கும் திட்டத்தில் பங்கேற்க விண்ணப்பித்தன. ஆப்பிள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று தேர்வு செய்தது. 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/explained/explained-economics/google-chromebook-manufacturing-india-8986877/

சுமார் 30 நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவற்றில் பெரும்பாலானவை வரும் ஏப்ரல் முதல் உற்பத்தியைத் தொடங்கும்.

இந்தியா வேறு என்ன எல்லாம் செய்கிறது?

சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை குறைக்க இந்தியா கொள்கை மாற்றங்களை செய்தது.

ஆகஸ்ட் மாதம், லேப்டாப்கள் மற்றும் கணினிகளின் இறக்குமதிக்கு உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சித்தது, ஆனால் தொழில்துறையின் வலுவான பின்னடைவுக்குப் பிறகு அக்டோபர் 31 வரை இந்த உத்தரவை அமல்படுத்துவதை தாமதப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மத்திய அரசு இப்போது "இறக்குமதி மேலாண்மை அமைப்பு" (Import management system) என்று ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் கீழ் நிறுவனங்கள் தாங்கள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்  தொடர்பான தரவுகளை பதிவு செய்து வெளியிட வேண்டும்.  லேப்டாப், மற்றும் பி.சிகள் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது உள்பட  உள்நாட்டு விற்பனை மதிப்பு ஆகிய தரவுகளும் அதில் இடம்பெற வேண்டும் எனக் கூறியுள்ளது. 

இறுதியில், "நம்பகமான ஆதாரங்களில்" இருந்து தங்கள் விநியோகங்களை மறுசீரமைக்க நிறுவனங்கள் மீது அரசாங்கம் ஒரு நிபந்தனையை விதிக்கும். இது சீனாவின் மீதான இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment