அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர்கள்
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) மாலை நியூயார்க் சென்றடைந்தார். புதன்கிழமை சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் கொண்டாட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பேச்சுவார்த்தை நடத்குகிறார். அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் மாநிலச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார்.
Advertisment
தொடர்ந்து, ஜூன் 22-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் மோடி உரையாற்றுவார். இந்த கௌரவத்தைப் பெற்ற இந்தியப் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார். இதற்கு முன் சில பிரதமர்கள் இந்தக் கௌரவத்தை பெற்றுள்ளனர்.
ஜவஹர்லால் நேரு
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இரு நாட்டின் நட்புறவு ஒத்துழைப்பு குறித்து பேசினார். அதாவது, புதிய ஹவுஸ் அலுவலகக் கட்டிடத்தில் (பின்னர் லாங்வொர்த் என்று பெயர் மாற்றப்பட்டது) வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு அறையில் நேரு 15 நிமிடங்களுக்கு வரவேற்புரை நிகழ்த்தினார்.
Advertisment
Advertisements
ஜவஹர்லால் நேரு
அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ் ட்ரூமன் தலைமையிலான இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் ஆரம்ப கட்டத்தில் இருந்தன. நேருவின் அணிசேராக் கொள்கை மற்றும் சோசலிசக் கருத்துக்கள் பொதுவாக வாஷிங்டனில் சந்தேகப் பார்வையை கொண்டிருந்தன.
ராஜிவ் காந்தி
“நமது தேசம் வளர்ச்சியின் புதிய எழுச்சிக்கு தயாராக இருக்கும் நேரத்தில் நான் இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளில் நமது தலைவர்கள் உறுதியான அடித்தளங்களை நிறுவியுள்ளனர். அதை நாம் இப்போது உருவாக்க வேண்டும். இந்தியா ஒரு பழைமையான நாடு, ஆனால் ஒரு இளம் நாடு” என ராஜிவ் காந்தி உரையாற்றினார்.
ராஜிவ் காந்தி
இந்தியா அணிசேராது எனக் கூறிய போதிலும், சோவியத் கூட்டமைப்புடன் நெருக்கமாக காணப்பட்டது. ஜனாதிபதி ரொனால்ட் ரீகனுடன், வேறுபாடுகள் முக்கியமாக பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவதில் இருந்தன. ராஜீவ் வருகை மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டது.
பி வி நரசிம்ம ராவ்
பி வி நரசிம்ம ராவ் அமெரிக்காவுக்கு பயணம் சென்றபோது பில் கிளிண்டன் அதிபராக இருந்தார். அப்போது சோவியத் யூனியன் சரிந்து காணப்பட்டது.
பிவி நரசிம்ம ராவ்
அடல் பிஹாரி வாஜ்பாய்
அடல் பிஹாரி வாஜ்பாய், “நாம் விரும்பினால்… ஒரு ஜனநாயக, வளமான, சகிப்புத்தன்மை, பன்மைத்துவ, நிலையான ஆசியா… நமது முக்கிய நலன்கள் பாதுகாப்பாக இருக்கும், நாம் பழைய அனுமானங்களை மறுபரிசீலனை செய்வது அவசியம்.
வாஜ்பாய்
பாதுகாப்புச் சிக்கல்கள் எங்கள் உறவில் நிழலைப் போட்டுள்ளன. இது தேவையற்றது என்று நான் நம்புகிறேன். எங்களுக்குள் மோதல்கள் இல்லை. உங்கள் கவலையை இந்தியா புரிந்துகொள்கிறது” எனப் பேசினார்.
அது, வாஜ்பாயின் அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அணுகுண்டு சோதனை நடத்திய காலம்.
மன்மோகன் சிங்
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ் டபிள்யூ புஷ் இந்தியாவிற்கு சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை வழங்கினார். அக்காலக்கட்டத்தில் மன்மோகன் சிங் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
மன்மோகன் சிங்
நரேந்திர மோடி
2016ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அது பராக் ஒபாமா ஆட்சியின் கடைசி காலக்கட்டமாகும்.
நரேந்திர மோடி
அக்காலக்கட்டத்தில் இந்தியா- அமெரிக்கா உறவு வலுவாக காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“