உலக சுகாதார அமைப்பு (WHO) திங்களன்று குரங்கு அம்மைக்கு "mpox" என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்குவதாக அறிவித்தது. இது இந்த கோடையின் தொடக்கத்தில், ஆப்பிரிக்காவிற்கு வெளியே சுமார் 80,000 பேரை பாதித்தது. இந்த நோய் முக்கியமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், முதன்மையாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே (MSM) பரவுகிறது.
உலகளாவிய நிபுணர்களுடனான தொடர்ச்சியான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்தபோது, இனவெறி மற்றும் களங்கப்படுத்தும் மொழி இணையத்திலும், பிற அமைப்புகளிலும் மற்றும் சில சமூகங்களிலும் காணப்பட்டது, இது கண்காணிக்கப்பட்டு உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பல நாடுகள் மற்றும் தனிநபர்கள் கவலைகளை எழுப்பினர் மற்றும் பெயரை மாற்றுவதற்கான வழியை முன்மொழியுமாறு உலக சுகாதார அமைப்பை கேட்டுக் கொண்டனர், என்று WHO ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
உண்மையில், 1958 ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்ட குரங்குகளில் நோயை ஏற்படுத்தும் வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால், 1970 இல் இதற்கு குரங்கு அம்மை என்று பெயரிடப்பட்டது. இது விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கு தாவிய பிறகு சில மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பல ஆண்டுகளாக பரவியிருக்கிறது.
முக்கியமாக ஓரினச் சேர்க்கை மூலம் இந்த ஆண்டு பரவியதைத் தொடர்ந்து அந்த சமூகம் ஓரங்கட்டப்படுவது அதிகரித்துள்ளது. இது பாரம்பரியமாக எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் உடனான தொடர்புக்காக களங்கப்படுத்தப்பட்டது.
உலக சுகாதார அமைப்பு உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய ஆலோசனை மூலம் புதிய மற்றும் சில சந்தர்ப்பங்களில், ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு பெயர்களை வழங்குவது சர்வதேச நோய்களின் வகைப்பாடு (ICD) மற்றும் WHO குடும்பத்தின் சர்வதேச சுகாதாரம் தொடர்பான வகைப்பாடுகளின் கீழ் உலகளாவிய அமைப்பின் பொறுப்பாகும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.
அதன்படி, வியாபாரம், பயணம், சுற்றுலா அல்லது விலங்குகள் பெயர்களின் தேவையற்ற எதிர்மறையான தாக்கத்தை குறைக்கும் நோக்கத்துடன் புதிய நோய்களின் பெயர்கள் வழங்கப்பட வேண்டும், மேலும் கலாச்சார, சமூக, தேசிய, பிராந்திய, தொழில்முறை அல்லது இனத்தவரை புண்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
45 வெவ்வேறு நாடுகளின் அரசாங்க அதிகாரிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட மருத்துவ மற்றும் அறிவியல் ஆலோசனைக் குழுக்களின் நிபுணர்கள் உட்பட பல்வேறு ஆலோசனை அமைப்புகளின் கருத்துகள் இந்த ஆலோசனையின் போது கேட்கப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.