Moon Rock in Biden Office Tamil News : அமெரிக்காவின் பாரம்பரியத்தின் படி, உள்வரும் ஒவ்வொரு ஜனாதிபதியும் உலகின் மிக சக்திவாய்ந்த மக்களால் பார்வையிடப்படும் தளபதியின் தலைமை வணிக இடமான ஓவல் அலுவலகத்தை மறுவடிவமைக்க வேண்டும்.
ஜனவரி 20-ம் தேதி 46-வது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பைடன் ஓவல் அலுவலகத்தில் ஓவியங்கள், தரைவிரிப்புகளை மாற்றுவது மற்றும் “டயட் கோக் பட்டனை” அகற்றுவது உள்ளிட்ட இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளார்.
இதுபோன்ற மாற்றங்களுக்கிடையில் பூமியின் இயற்கை செயற்கைக்கோளின் மாதிரியாக 1972 டிசம்பரில் அப்பல்லோ 17 பயணத்தின் விண்வெளி வீரர்களால் சேகரிக்கப்பட்ட ஓர் சந்திர பாறையும் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. இது, ஜோ பைடன் அமெரிக்க செனட்டில் தனது நீண்ட நாள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு சற்று முன்பு கிடைத்த பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவல் அலுவலகத்தில் சந்திர பாறை
நாசா செய்திக்குறிப்பின்படி, இந்த சந்திர பாறை, லூனார் மாதிரி 76015,143– பைடன் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 20 முதல் ஓவல் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் கீழே அலமாரியில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஸ்தாபகத் தலைவர் பெஞ்சமின் பிராங்க்ளின் உருவப்படத்திற்கு அடுத்தபடியாகவும், ரெசலூட் டெஸ்க்கு அருகிலும் இந்த பாறை வைக்கப்பட்டிருப்பதாக Space.com குறிப்பிடுகிறது.
ஓவல் அலுவலகத்தில், “முந்தைய தலைமுறையினரின் லட்சியங்கள் மற்றும் சாதனைகளை அடையாளமாக அங்கீகரிப்பதற்காகவும், அமெரிக்காவின் தற்போதைய சந்திரனுக்கு செவ்வாய்க் கிரக ஆய்வு அணுகுமுறையை ஆதரிப்பதற்காகவும்” இந்த பாறை வைக்கப்பட்டுள்ளது.
332 கிராம் எடையுள்ள இந்த சந்திர மாதிரி 76015,143, அப்பல்லோ 17 விண்வெளி வீரர் ரொனால்ட் எவன்ஸ் மற்றும் மூன்வாக்கர்களான ஹாரிசன் ஷ்மிட் மற்றும் யூஜின் செர்னன் ஆகியோரால் சேகரிக்கப்பட்டது. 143 என்பது அதன் பெற்றோரான 76015-லிருந்து வெட்டப்பட்ட ஒரு சிறிய பாறை. இது 2.819 கிலோ எடையுள்ள பாறை. அப்பல்லோ சந்திர தொகுதியின் இருப்பிடத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு பெரிய கற்பாறையிலிருந்து வெட்டப்பட்டது.
இந்த சந்திர மாதிரி, 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. நாசாவின் கூற்றுப்படி, சந்திரனின் அருகிலுள்ள பெரிய பெரிய தாக்க நிகழ்வின் போது இது உருவாக்கப்பட்டது. இது ஒரு ஒழுங்கற்ற வடிவத்தைக் கொண்டுள்ளது. மைக்ரோமீட்டியோரைட் நிகழ்வுகள் காரணமாக உருவான சிறிய பள்ளங்கள் உள்ளன. ஓவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பாறையின் தட்டையான பக்கங்கள் நாசாவின் சந்திர அளவீட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டன. அங்கு அறிவியல் ஆராய்ச்சிக்காகத் துண்டுகளாக அவை வெட்டப்பட்டன.
வெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்பு, இந்த 76015,143 மாதிரி பெர்லினில் உள்ள ஜெர்மன் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
சந்திர பாறையைக் காட்சிக்கு வைக்கப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி பைடன் அல்ல. 1999-ம் ஆண்டில், அப்பல்லோ 11-ன் 30 வது ஆண்டுவிழாவில், மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்பும் முதல் வெற்றிகரமான முயற்சியை மேற்கொண்ட விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டனை சந்தித்தனர். அப்போது 10057,30 சந்திர மாதிரியை நாசா வெள்ளை மாளிகைக்கு அனுப்பியது. ஜனவரி 2001-ல் கிளின்டனின் பதவிக்காலம் முடியும் வரை இது ஓவல் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் இயக்குநர் எலன் ஸ்டோபன், “ஓவல் அலுவலகத்தில் நாசா சந்திர பாறையை வைத்த அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி. நாம் ஒரு நாடாக ஐக்கியமாகி இருக்கும்போது நம்மால் ஒன்றாக என்ன செய்ய முடியும் என்று பாருங்கள்" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"