இ.எம்.ஐ சலுகை: மீண்டும் கால அவகாசம் அனுமதித்தால் பயன்படுத்த வேண்டுமா?

கடனுக்கான வட்டியை விட குறைந்த வட்டியை ஈட்டும் நிலையான வைப்புத்  தொகையை கொண்டு கடனை அடைப்பது நல்லது. 

By: Updated: July 31, 2020, 03:38:20 PM

Sandeep Singh

Moratorium ends in a month, here’s how to manage your home loan :  இந்திய ரிசர்வ் வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை இரண்டாவது முறை நீட்டிக்காவிட்டால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆறு மாத கால அவகாசம் ஆகஸ்ட் 31 அன்றுடன் முடிவடைகிறது. கொரோனா தொற்றுநோயால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் பொருளாதாரத்தில் மந்தநிலை ஆகியவற்றின் மத்தியில் வாடிக்கையாளர்களின் வருமானம் குறைந்து வருவதைக் கண்டு அவர்களுக்கான வீட்டுக்கடன் திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் கடன் வாங்குபவர்கள் தங்கள் நிதிகளை மறு மதிப்பீடு செய்து வீட்டுக் கடன்களுக்கான செலவினங்களை மேம்படுத்துவதற்கான நேரம் இது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

கடனுக்கான வட்டியைக் குறைக்க முடியுமா?

கடந்த 18 மாதங்களில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை 225 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது, மேலும் வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் புதிய கடன்களுக்கான வட்டி சலுகையை 9% முதல் 7% வரை குறைத்துள்ளன. ஆனாலும் கூட தற்போதுள்ள பல வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் இன்னும் 8.5% அல்லது 9% வட்டியை செலுத்துகின்றனர்.

இந்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி அல்லது வீட்டு நிதி நிறுவனத்தை அணுகி ஒரு சிறிய மாற்று கட்டணத்தை செலுத்துவதன் மூலம் வட்டி விகிதத்தை குறைக்க முடியும். (இது பொதுவாக சில ஆயிரம் ரூபாயாக இருக்கலாம்). இது அவர்களின் வட்டி விகிதத்தை அவர்களின் வங்கி / எச்.எஃப்.சி இப்போது புதிய கடன்களுக்கு வழங்கும் வட்டி வரை குறைக்கலாம்.

இப்படி செய்வதன் மூலம் எவ்வளவு பணத்தை சேமிக்கலாம்?

தற்போதைய வீட்டுக்கடன் நிலுவை ரூ. 30 லட்சம் இருக்கிறது என்றும், நீங்கள் அதனை 15 ஆண்டுகளில் கட்ட வேண்டும் என்றும் வைத்துக் கொள்வோம். அப்படியானால், 8.5% வட்டியோடு சேர்த்து ரூ. 29,549-ஐ நீங்கள் மாதத்தவணையாக செலுத்த வேண்டிய நிலை இருக்கும். கன்வெர்ஷன் கட்டணம் செலுத்துவதன் மூலம் உங்களின் வட்டி விகிதம் 7.4% ஆக குறையும். அப்படியென்றால் உங்களின் மாதத்தவணையில் ரூ. 1,900 மிச்சமாகும். பழைய இ.எம்.ஐ. முறைப்படி செலுத்த விரும்பினால் நீங்கள் 160 மாதங்களில் இந்த கடனை திருப்பி செலுத்திவிடலாம்.

மேலும், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கும் போதெல்லாம், வங்கி தானாகவே உங்களுக்கு நன்மைகளை அளிக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக, குறைந்த செலவு அடிப்படையிலான கடன் விகிதத்திலிருந்து ( marginal cost-based lending rate ) ரெப்போ வீதத்துடன் இணைக்கப்பட்ட கடன் விகிதத்திற்கு (repo rate-linked lending rate) மாற்றும்படி நீங்கள் உங்களின் வங்கிகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

வேறு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்?

இது போன்ற நிச்சயமற்ற காலங்களில், 3 முதல் 6 மாத காலங்களுக்கு குடும்பங்களை பராமரிக்க பணப்புழக்கம் இருத்தல் மிகவும் அவசியம். இதனை வங்கி சேமிப்பு மற்றும் ஃபிக்ஸ்ட் டெபாசிட் போன்றவை சரி செய்து கொள்ளும் என்றாலும் கூட, குறைவான வட்டி தருகின்ற ஃபிக்ஸ்ட் டெப்பாசிட் திட்டங்களை நம்பியிருப்பது சரியான அணுகு முறையாக இருக்காது. அதே நேரத்தில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகமாக இருப்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.

எஸ்.பி.ஐ வங்கியானது 1 முதல் மூன்று ஆண்டுகளுக்கான வைப்புத் தொகையில் வெறும் 5.1% மட்டுமே வட்டியை செலுத்துகிறது. நீங்கள் அதிக அளவு வரி செலுத்தும் நபராக இருக்கும் பட்சத்தில் வட்டி வெறும் 3.4% மட்டுமே. ஆனால் உங்களின் வீட்டுக்கடன் 7 முதல் 8.5% வரை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பணத்தேவையை தாண்டி தேவையில்லாமல் நிலையான வைப்புத்தொகையில் கை வைக்க வேண்டாம். உங்கள் கடனின் ஒரு பகுதியை கட்ட இதனை பயன்படுத்துங்கள். இது உங்களின் மாதத்தவணையை குறைக்க உதவும் அல்லது கடன் திருப்பி செலுத்த வேண்டிய நாட்களை குறைக்கும். கடனுக்கான வட்டியை விட குறைந்த வட்டியை ஈட்டும் நிலையான வைப்புத்  தொகையை கொண்டு கடனை அடைப்பது நல்லது.

ரிசர்வ் வங்கி மீண்டும் கால அவகாசத்தை நீட்டித்தால் அதனை தேர்வு செய்ய வேண்டுமா?

கால அவகாசத்தில், மாததவணைக்கான வட்டி அனைத்தும் நிலுவையில் சேர்க்கப்படும். இது ஏற்கனவே இருக்கும் மாதத்தவணைக்கான தொகையை மேலும் அதிகரிக்கும். எனவே இடைக்கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது தான் நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Explained moratorium ends in a month heres how to manage your home loan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X