/tamil-ie/media/media_files/uploads/2019/11/a534.jpg)
most ASI-protected temples in Karnataka and Tamil Nadu states - இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் கர்நாடக, தமிழக கோவில்கள்!
இந்தியாவில் மொத்தம் 651 இந்து கோவில்கள் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏ.எஸ்.ஐ) கீழ் மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோவில்களின் எண்ணிக்கை குறித்த தகவல் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ஏ.எஸ்.ஐ.யின் பாதுகாப்பில் அதிக எண்ணிக்கையிலான இந்து கோவில்கள் கர்நாடகாவில் உள்ளன, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் கோவில்கள் பாதுகாக்கப்படுகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/a533-300x290.jpg)
இந்த புள்ளிவிவரங்களை கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலத் சிங் படேல் வழங்கினார்.
மொத்தம் 3,686 மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் / தளங்கள் ஏ.எஸ்.ஐ.யின் கீழ் உள்ளன என்று அப்போதைய கலாச்சாரத்துறை அமைச்சர் (சுதந்திர பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மா மக்களவையில் மார்ச் 12, 2018 அன்று தெரிவித்திருந்தார். அப்போது அரசாங்கம் வழங்கிய மாநில அளவிலான தகவலின் படி, இந்த நினைவுச்சின்னங்கள் / தளங்கள் அதிக எண்ணிக்கையில் உத்தரபிரதேசத்தில் உள்ளன (743) என்று குறிப்பிடப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.