scorecardresearch

எவரெஸ்ட்டை இலக்காக கொண்ட சாகச பயணங்கள்! கூட்ட நெரிசலால் அடிக்கடி நிகழும் மரணங்கள்… காரணம் என்ன?

உலகில் அதிக மக்களால் கவரப்பட்ட எவெரெஸ்ட் சிகரம் தற்போது குப்பைக்காடாக மாறி வருகிறது

Mount Everest Expedition
Mount Everest Expedition

Mount Everest Expedition :  உலகின் மிக உயரமான மலைத்தொடரான எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறி சாதனைப் புரிவது என்பது சாகசக்காரர்களின் வாழ்நாள் லட்சியம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இந்த பகுதியில் விபத்துகள் அதிகமானதோடு உயிரிழப்புகளும் அதிகமாக நடந்துள்ளது.

1996ம் ஆண்டு 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர். அதே போன்று 2005ம் ஆண்டும் 11 பேர்கள் கொல்லப்பட்டனர். இம்முறை இந்த 5 மாதங்களில் மட்டும் 11 நபர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 66 வருடங்களில் 4800க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் இலக்கான எவரெஸ்ட்டில் ஏறி கால் பதித்தனர். கிட்டத்தட்ட 300 நபர்கள் அதில் மாண்டு இறநந்தும் போனார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையின் முழுமையான ஆங்கிலப் பிரதியைப் படிக்க

உலகில் அதிக மக்களால் கவரப்பட்ட எவெரெஸ்ட் சிகரம் தற்போது குப்பைக்காடாக மாறி வருகிறது. இந்துக்களுக்கும், புத்த மதத்தினருக்கும் புனித இடமாக கருதப்பட்ட இப்பகுதி இன்று ப்ளாஸ்டிக் குப்பைகளாலும், காலியான ஆக்சிஜன் சிலிண்டர்களாலும், மனிதக் கழிவுகளாலும், ஏன் இறந்து போன மலையேற்ற வீரர்களின் உடல்களாலும் குப்பைக்காடுகள் போல் திகழ்கின்றது எவரெஸ்ட் மலைச்சிகரம்.

1953ம் ஆண்டு ஹிலாரி மற்றும் டென்சிங் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். மே 29ம் தேதி அந்த சாதனையை நிகழ்த்தியதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அங்கு எவரெஸ்ட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை இந்த நிகழ்வு முடிந்த கையோடு நேபாள ராணுவம் மலைச் சிகரத்தில் இருந்து 10, 834 கிலோ குப்பைகளை நீக்கியுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற என்ன தகுதிகள் தேவை?

18 வயது நிரம்பியவர்கள். மலையேற்ற பயிற்சியை முறையே அங்கிகாரம் பெற்ற பயிற்சிப்பள்ளியில் கற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

7000 மீட்டர் உயரம் கொண்டுள்ள சில மலைச்சிகரங்களில் ஏறியவர்கள், ஐந்தாறு வருடங்கள் இமாலய மலைப்பகுதிகளில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

மனநலம் மற்றும் உடல் நலம் என இரண்டிலும் முறையாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிப்ரவரி மாதம் துவங்கி மே மாதம் வரையில் அதிக அளவு மலையேற்றங்கள் நடைபெறும். அனைத்டது விண்ணப்பங்களும் முறையே நேபாளம் சுற்றுலா வாரியத்தின் ( Nepal Tourism Board (NTB)) கீழ் பரிசோதிக்கப்பட்டு சாகசக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

வெதர் விண்டோ என்று அழைக்கப்படும் சரியான தட்பவெட்ப நிலையானது மே மாதத்தில் 10 முதல் 12 மாதங்கள் மட்டுமே நிலவும்.

சாதாரண காலங்களில் காற்று அங்கு 120 கி.மீ வேகத்தில் மணிக்கு வீசும். இந்த வெதர் விண்டோ காலங்களில் மட்டுமே காற்று 2000 மீட்டருக்கு கீழே அதிகமாக வீசும் என்பதால் மலையுச்சியில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

இந்த வருடம் நடந்தது என்ன?

இதுவரை உயிரிழந்த 11 நபர்களின் மரணம் குறித்த காரணங்களை நேபாள் சுற்றுலா வாரியம் அறிவிக்கவில்லை. எங்களுக்கு ஏன் என்று தெரியவில்லை. ஆனால் போதுமான எனெர்ஜி, மனதிடம், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, உயரம் குறித்த பயம் காரணமாக இந்த மரணங்கள் ஏற்பாட்டிருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

8000 அடி உயரம் கொண்ட சிகரத்தின் மேல் மிகவும் திடகாத்திரமான ஆட்களுக்கே உடல்நிலை சரியில்லாமல் போவது வழக்கம். உடற்சோர்வு, தலைவலி, வாந்தி, மற்றும் மயக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். எவரெஸ்ட் மலையின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் அடிப்படை முகாம் ( base camp) 17,600 அடி உயரத்தில் உள்ளது. எவரெஸ்ட் மலைச்சிகரம் 29,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.  26 ஆயிரம் அடியில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் சவலானதாக இருக்கும்.

சமீபத்தில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு நீண்டு செல்லும் மிக நீளமான வரிசையில் மக்கள் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. மக்கள் தொகை நெருக்கம் குறித்து தொடர்ந்து நிறைய நபர்கள் எழுதி வருவது வழக்கமாக இருந்தது. இது குறித்து நேபாளம் சுற்றுலா வாரியத்திடம் கேள்வி எழுப்பிய போது 44 குழுக்களில் உள்ள 381 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கினோம் என்று கூறியுள்ளது.

வரும் காலங்களில் பாதுகாப்பு குறித்து அதிக அளவில் கவனம் செலுத்துவோம் என்று நேபாளம் தரப்பு கூறியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Mount everest expedition what does it take to climb mount everest what are the risks involved