Advertisment

சீனாவும் நேபாளமும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளந்தது ஏன்?

மலைகளின் உயரம் எவ்வாறு அளவிடப்படுகிறது? சீனாவும் நேபாளமும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவிட வேண்டும் என உணந்தது ஏன்?

author-image
WebDesk
New Update
Mount Everest, Height of Mount Everest, Everest new height, எவரெஸ்ட் சிகரம், இந்தியா, சீனா, நேபாளம், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், Everest measurement, everest height, mount everest height measured, china, nepal, Tamil Indian Express

Mount Everest Height: இந்த மாத தொடக்கத்தில், சீனாவும் நேபாளமும் கூட்டாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளந்து அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் என்று சான்றிதழ் அளித்தன. இந்த அளவு 1954ம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட உயரத்தைவிட 86 செ.மீ அதிகம். முந்தைய அளவீடு இந்திய சர்வேவால் தீர்மானிக்கப்பட்டு, சீனாவைத் தவிர, உலக அளவில் அனைத்து குறிப்புகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Advertisment

மலைகளின் உயரம் எவ்வாறு அளவிடப்படுகின்றன? எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவிட வேண்டிய அவசியத்தை சீனாவும் நேபாளமும் ஏன் உணர்ந்தன? அதைப் பற்றிய ஒரு பார்வை:

publive-image

சீனாவும் நேபாளமும் அண்மையில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளந்தன. அதில் இதுவரை உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் (29,028 அடி) என்ற அளவைவிட 86 செ.மீ அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவின் 1954ம் ஆண்டு கணக்கெடுப்புபடி, எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் உயரம் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

எவரெஸ்ட் சிகரம், புவியின் டெக்டானிக் தட்டுகளின் நகர்வால் ஒவ்வொரு ஆண்டும் சில மில்லிமீட்டர்கள் வளர்ந்துவருவதாக நம்பப்படுகிறது.

இயற்கை செயல்முறைகள் அல்லது பூகம்பங்கள் போன்ற பெரிய நிகழ்வுகள் காரணமாக மலைகள் மற்றும் பிற அமைப்புகளின் வடிவங்களும் உயரங்களும் மாற்றப்படுகின்றன. 2015, ஆண்டில் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் நிகழ்ந்த தாக்கத்தை மதிப்பிடுவதற்கு சமீபத்திய அளவீடு மேற்கொள்ளப்பட்டது

publive-image

மலைகள் எவ்வாறு அளவிடப்படுகிறது?

முறை 1:

முக்கோணவியல் முறை

பாரம்பரியமாக, நில அளவையாளர்கள் உயரங்களை அளவிட எளிய முக்கோணவியல் முறையை சார்ந்துள்ளனர்.

மூன்று பக்கங்கள் கொண்ட எந்த ஒரு முக்கோணத்திலும் மூன்று கோணங்கள் இருக்கும். ஏதேனும் மூன்று அளவுகள் தெரிந்து அவை வழங்கப்பட்டால், ஒரு பக்கமாக இருந்து மற்றவர்கள் வேலை செய்ய முடியும். எனவே, ஒரு சரியான முக்கோணத்தில், ஒரு கோணம் ஏற்கனவே அறியப்பட்டுள்ளது. உயரத்தின் கோணம் மற்றும் அவதானிக்கும் இடத்திலிருந்து மலையின் அடிப்பகுதி வரையிலான தூரம் தெரிந்தால் உயரத்தை கணக்கிட முடியும்.

இருப்பினும், மலைகள் கட்டிடங்களோ அல்லது கோபுரங்களோ அல்ல. மலை அடிவாரம் அல்லது மலையின் உச்சியிலிருந்து நேர் கோடு தரையைச் சந்திக்கும் இடம் பெரும்பாலும் அறியப்படுவதில்லை. இந்த காரணத்திற்காக, உயரமான சிகரங்களின் உயரங்கள் கடல் மட்டத்திலிருந்து அளவிடப்படுகின்றன.

publive-image

முறை 2:

ஜிபிஎஸ் அல்லது லேசர் கதிர்களை பயன்படுத்தி அளவிடுதல்

இந்த நாட்களில், ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட விமானங்கள் அல்லது உயரத்தின் அளவீடுகளை துல்லியமாகப் பெறுவதற்கு லேசர் கதிர்கள் ஒரு தட்டையான பூமி வடிவ புவியியலின் கணினிமயமாக்கப்பட்ட மாதிரியைப் பெறப் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், (கற்பனையான) கடல் மட்டத்தை நேரடியாக மலையின் அடியில் கண்டுபிடிப்பது சிக்கலானதாக இருப்பதால் ஈர்ப்பு விசையானது இடத்திற்கு இடம் மாறுபடும். ஜி.பி.எஸ் இதை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. எனவே, அப்பகுதியில் புவிஈர்ப்பை கணக்கிட கூடுதல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India China Nepal Mt Everest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment