Advertisment

உத்தர பிரதேச அரசியலை மாற்றி எழுதிய முலாயம் சிங் யாதவ்.. அந்த 5 நிகழ்வுகள் என்ன?

முலாயம் சிங் யாதவ் இந்தத் தலைமுறையின் மிக முக்கியமான தலைவராக இருந்தார். அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.

author-image
WebDesk
Oct 11, 2022 12:38 IST
New Update
Mulayam Singh Yadav

Mulayam Singh Yadav

உத்தரப்பிரதேசத்தின் முதல் தலைமுறை தலைவர்கள் - உண்மையில் நாட்டின் பிற பகுதிகளைப் போலவே - சுதந்திரப் போராட்ட வீரர்களாக இருந்தனர். இரண்டாம் தலைமுறை - அறுபதுகளின் பிற்பகுதியில் இருந்து வெளிவந்த  தெருப் போராளிகள். இந்த தலைவர்களில் பலர் சோசலிஸ்டுகள், மக்கள் நலன்களுக்காக தீவிரமாகப் போராடியவர்கள் மற்றும் நெருக்கடி நிலையின் போதும் அதற்குப் பின்னரும் அந்தஸ்தைப் பெற்றனர்.

Advertisment

முலாயம் சிங் யாதவ் இந்தத் தலைமுறையின் மிக முக்கியமான தலைவராக இருந்தார். உத்தர பிரதேசம் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் அரசியல் நடவடிக்கைகளுக்கு புதிய விதிகள் மற்றும் வரையறைகளை அமைத்தவர். அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.

விவசாய சமூகம்

ராம் மனோகர் லோஹியா விவசாய சமூகங்களை ஒன்று  திரட்டினார். அவர்களில் பலர் பிற்காலத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (OBCs) உள்ளடக்கியிருந்தனர். OBC பிரிவினருக்கு 60%  பெற வேண்டும் என்பதுதான் சம்யுக்த் சோசலிஸ்ட் கட்சியின் தீர்மானமாக இருந்தது.

லோகியா அக்டோபர் 1967 இல் மறைந்தார், அவருக்குப் பிறகு முலாயம் சிங் யாதவ் முதல் முறையாக எம்எல்ஏ ஆனவுடன் - ஜாட் தலைவர் சரண் சிங் OBC களை ஒருங்கிணைத்தார். இந்த குழுக்களில் பெரும்பாலானவை, வி பி சிங் காங்கிரஸிலிருந்து வெளியேறிய பிறகு அவருக்குப் பின்னால் அணிதிரண்டன, அது அவர்களின் விருப்பங்களுக்கு இடமளிக்கத் தயாராக இல்லை.

டிசம்பர் 5, 1989 அன்று முலாயம் சிங் யாதவ் ஆட்சிக்கு வந்ததும், உத்தர பிரதேசத அரசியலில் நீண்ட காலம் தொடங்கியது, அப்போது உயர் சாதியினர் அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

இந்தக் கட்டம் - 1999-2000 மற்றும் 2000-2002 இல் ராம் பிரகாஷ் குப்தா மற்றும் ராஜ்நாத் சிங் முதல்வராக ஆன குறுகிய காலங்களைத் தவிர உடைக்கப்படாமல் இருந்தது. பிறகு 2017 இல் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்தவுடன் மட்டுமே முடிவுக்கு வந்தது.

முலாயம் சிங் ஆட்சியில்தான், மண்டல் பிறகு OBC களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது, இது சமூக குழப்பத்தைத் தூண்டியது. இது 1991 இல் OBC தலைவர் கல்யாண் சிங்கை முதல்வராக முன்னிறுத்த பாஜகவைத் தூண்டியது.

முலாயம் ஆட்சியில், அரசியல் அதிகார கொள்ளையில் பெரும் பங்கு யாதவர்களுக்கு சென்றது. அரசாங்கத்தில் OBC களின் பிரதிநிதித்துவம் ஒட்டுமொத்தமாக மேம்பட்டது; குறிப்பிடத்தக்க வகையில், முந்தைய தசாப்தங்களில் தங்கள் குடும்பப்பெயர்களைப் பயன்படுத்தாத பல OBC சமூகங்கள், இப்போது அவ்வாறு செய்வதற்கு போதுமான நம்பிக்கையை உணரத் தொடங்கின.

publive-image

சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ். (Express archive photo by Mohan Bane 7.12.1995)

2. அதிகாரத்தில் தலித்துகளின் நுழைவு

1977ல், ராம் நரேஷ் யாதவ், உத்தர பிரதேசத்தின் முதல் உயர்சாதி அல்லாத முதல்வராக ஆனபோது, ​​அந்த பதவிக்கான முக்கியப் போட்டியாளராக தலித் தலைவர் ராம்தான் இருந்தார்.

முலாயமின் அரசியல் வருகையும் அவரது சமூக நீதி அரசியலும்தான் முதன்முறையாக தலித்துகளை வாசலில் கால் வைக்க அனுமதித்தது. இது சமாஜ்வாதி கட்சிக்கும், கன்ஷி ராமின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையிலான போட்டியின் கதைகளால் பெரும்பாலும் மறைக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க உண்மை.

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடைபெற்ற 1993 சட்டமன்றத் தேர்தலில், அதுவரை சிறிய கட்சியாகக் கருதப்பட்ட பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி வைத்த முலாயம், இந்துத்துவ ஒருங்கிணைப்பு மூலம் வெற்றி பெறலாம் என்ற பாஜகவின் நம்பிக்கையை தகர்த்தார்.

எவ்வாறாயினும், சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் அரசாங்கம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. முலாயம் தனது சொந்த பாணி அரசியலைக் கொண்டிருந்தார், மேலும் பகுஜன் சமாஜ் கட்சி அதிகாரத்திற்காக பொறுமையிழந்தது. கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள், ஜூன் 1995 இல், மாயாவதி உத்தர பிரதேசத்தின் முதல் தலித் முதலமைச்சராக ஆவதற்கு வழிவகுத்தது, இதற்கு பிஜேபி ஆதரவு அளித்தது.

அதன் பிறகு பகுஜன் சமாஜ் பலம் பெற்றது, மேலும் மாயாவதி 2007 இல் தனியே ஒரு அரசாங்கத்தை அமைக்க முடிந்தது, அது முழுமையாக ஐந்து ஆண்டுகள் நீடித்தது. உத்தர பிரதேசத்தில் இதுவரை அதிக காலம் முதல்வராக இருந்தவர் மாயாவதி, இரண்டாவது இடத்தில் முலாயம் சிங் யாதவ் உள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் மீண்டும் இணைந்தது, இதில் பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களை வென்றது. இந்த இரு கட்சிகளும் இப்போது அரசியல் எதிரியாக உள்ளன. இதற்கு பாஜக மறைமுகமாக சில சூழ்ச்சிகளையும் செய்தது.

publive-image

விபி சிங்குடன் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ். (Express archive photo by Vinayaka Prabhu)

3. பாஜகவுக்கு முன் காங்கிரஸை எதிர்த்த கட்சி  

1989ல் முலாயம் முதன்முதலில் பதவியேற்ற நாள் தான் உத்தர பிரதேசத்தில் காங்கிரசின் கடைசி நாள்.

1989க்கு முன், பெரும்பாலான உயர் சாதியினரைத் தவிர, முஸ்லீம்களும் தலித்துகளும் காங்கிரஸின் அடித்தளமாகப் பார்க்கப்பட்டனர். முலாயம் தனது சமூக நீதி அரசியலின் மூலம் இந்த சமூக கூட்டணியை உடைத்து, காங்கிரஸால் ஒருபோதும் மீள முடியாத ஒரு அடியை வழங்கினார்.

2014 லோக்சபா தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் கொண்டு வந்த “காங்கிரஸ்-எதிர்ப்பு” முழக்கம் (Congress-mukt Bharat) கால் நூற்றாண்டுக்கு முன்பே உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங்கால் உணரப்பட்டது.

4. முஸ்லிம்களின் உயரிய தலைவர்

சரண் சிங், காங்கிரஸிலிருந்து விலகி இரண்டு முறை முதலமைச்சராகவும், குறுகிய காலத்திற்கு இந்தியப் பிரதமராகவும் பதவியேற்றபோது பெரும் பகுதி முஸ்லிம் வாக்குகள் அவரிடம் சென்றன.

முஸ்லிம்கள் பின்னர் விபி சிங்கின் ஜனதா தளத்திற்குச் சென்றனர்,  பிஜேபியைத் தோற்கடிக்கக் கூடியதாகக் கருதப்படும் எந்தக் கட்சிக்கும் ஈர்ப்பு ஏற்பட்டது.

publive-image

ராஜ் பப்பர், அமர் சிங், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், ஷங்கர் சிங் வகேலா மற்றும் பலர் பொதுக் கூட்டத்தின் போது. (Express archive photo by Mohan Bane 13.9.1998)

உத்தர பிரதேசத்தில் முலாயம் தான் அதிக பலன் பெற்றவராக இருந்தார் - அவர் தனது முக்கிய தொகுதியில் முஸ்லிம்-யாதவ் கூட்டணியை நம்பியிருந்தார். இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் வாக்கு சதவீதம் காட்டியபடி, இந்த ஆதரவு காலத்தின் தேவையாக உள்ளது.

எவ்வாறாயினும் குறைந்தபட்சம் 2027 வரை சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இல்லாத நிலையில், முலாயம் நிறுவிய கட்சிக்கு எத்தனை சதவீதம் முஸ்லிம் வாக்குகள் விசுவாசமாக இருக்கின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

5. வாரிசு மற்றும் பலமானவர்களின் அரசியல்

சஞ்சய் காந்தியால் ஆதரிக்கப்பட்ட எச் என் பகுகுணா மற்றும் என் டி திவாரி போன்ற தலைவர்களின் கீழ், உத்தர பிரதேச அரசியலின் விரைவான கிரிமினல்மயமாக்கல் அவசரநிலையின் போது தொடங்கியது.

1977-80 ஜனதா ஆட்சியிலும் இந்தப் போக்கு தொடர்ந்தது. ஜூன் 1980 இல் ஆட்சிக்கு வந்த முதல்வர் விபி சிங்கின் அரசாங்கம், குறிப்பிட்ட சாதியினர் எனக் கூறப்படும் குற்றவாளிகள் மற்றும் கொள்ளையர்களின் என்கவுன்டர் கொலைகளைக் கண்டது.

அரசியலில் தஞ்சம் அடையும் குற்றவாளிகளின் போக்கு முலாயமின் கீழ் வலுப்பெற்றது, அவர் இந்தக் கூறுகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதாக மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட ஒரே அரசியல்வாதி அவர் அல்ல என்றாலும், இது சமாஜ்வாதி கட்சியின் நற்பெயருக்கு ஒரு கறையை ஏற்படுத்தியது.

முலாயம் எதிர்கொண்ட மற்றொரு குற்றச்சாட்டு, அவரது கட்சியிலும் உத்தரப்பிரதேச அரசியலிலும் தனது குடும்பத்தை நிலைநிறுத்தியது - உண்மையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் முக்கியமான அரசியல் பதவிகளை வகித்த காலம் இருந்தது. இப்போது சமாஜ்வாதி கட்சியின் இந்த கறைகளை போக்க அகிலேஷ் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment