Advertisment

ஜம்மு காஷ்மீரில் இஸ்லாம், இந்துக்களின் மக்கள் தொகை; சென்செஸ் கூறுவது என்ன?

ஜம்மு காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Muslim-Hindu demography of Jammu and Kashmir

Muslim-Hindu demography of Jammu and Kashmir : ஜம்மு காஷ்மீரின் நிலச்சட்டங்கள் திருத்தப்பட்டு மத்திய அரசால் திங்கள் கிழமை அன்று கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதில், இதற்கு முன்பு நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் நீக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக, ஜம்மு காஷ்மீருக்கு வெளியே இருக்கும் நபர்களால் அங்கு விவசாயத்திற்கு அல்லாத நிலத்தினை வாங்க இயலும்.

Advertisment

இந்த முடிவை பாஜக தலைவர்களும் செய்தி தொடர்பாளர்களும் வரவேற்க காஷ்மீரின் அரசியல் வட்டத்தில் புதிய புயலை உருவாக்கியுள்ளது. செவ்வாய்கிழமை தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ஜம்மு காஷ்மீர் தற்போது” விற்பனைக்கு என்று ட்வீட் வெளியிட்டுள்ளார்.

2011ம் ஆண்டுக்கான ஜம்மு காஷ்மீரின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள், இதற்கு முந்தைய 50 ஆண்டுகளில் இருந்ததில் இருந்து மாற்றத்தையே காணவில்லை என்பதை தான் காட்டியது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

சுதந்திரத்திற்கு முன்பு ஜம்மு காஷ்மீரின் டெமோகிராஃபிக் என்ன?

சுதந்திரத்திற்கு முன்பு, 1941ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இஸ்லாமியர்கள் 72.41% என்றும் இந்துக்கள் 25.01% என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் விகிதம் குறைய துவங்கியது.

சுதந்திரத்தின் போதும் தற்போதும் எப்படி ஜம்மு காஷ்மீரின் டெமோகிராஃபிக் மாற்றம் அடைந்தது.

ஜம்மு காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 1961ம் ஆண்டு புள்ளிவிபரப்படி இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 24.32 லட்சம். இது அங்கிருக்கும் மொத்த மக்கள் தொகையான 35.60 லட்சத்தில் 68.31% ஆக இருந்தது. அதே போன்று இந்துக்களின் மக்கள் தொகை 28.45% அதாவது 10.13 லட்சமாக உள்ளது. முழுமையான 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விகிதங்களில் மாற்றம் ஏதும் இருக்கவில்லை. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் மக்கள் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 85.67%. மேலும் மொத்த மக்கள் தொகையில் இது 68.31% ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையான 125.41 லட்சம் நபர்களில் இந்துக்களின் எண்ணிக்கை 35.55 லட்சமாக உள்ளது.

To read this article in English

மக்கள்தொகை கணக்கெடுப்பில் இரு சமூகங்களின் மக்கள்தொகையின் பங்கு எவ்வாறு மாறியது?

முஸ்லிம்களின் எண்ணிக்கை 1961ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது 65.83% ஆகவும், 1981 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது 64.19% ஆகவும் சரிந்தது.

1991ல் கலவரங்கள் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது. ஆனால் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள்தொகையில் முஸ்லிம்களின் விகிதம் 66.97 சதவீதத்தைத் தொட்டது - இது 1971இல் இருந்த அந்த சமூகத்தின் பங்கை விட அதிகம். 1961இல் (68.31%) இருந்ததைக் காட்டிலும் இது கூடுதல்.

அதே நேரத்தில், மக்கள்தொகையில் இந்துக்களின் பங்கு எதிர் திசையில் நகர்ந்தது - 1961 இல் 28.45 சதவீதத்திலிருந்து 1971இல் 30.42% ஆகவும், 1981ல் 32.24% ஆகவும் உயர்ந்தது; 2001ல் 29.62% ஆகவும், 2011 ல் 28.43% ஆகவும் சரிந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

மாவட்ட அளவில் எப்படி இந்த விகிதங்கள் எப்படி மாறியது?

முன்பு ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 14 மாவட்டங்கள் இருந்தன. ஜம்மு மற்றும் காஷ்மீரில் தலா 6 மாவட்டங்கள் மற்றும் லடாக்கில் 2 மாவட்டங்கள். ஆறு காஷ்மீரிலும், 3 ஜம்முவிலும், ஒன்று லடாக்கிலும் என இதில் 10 மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் அதிகம் இருந்தனர்.

ஜம்முவில் மீதம் இருக்கும் மூன்று மாவட்டங்களில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும்.லடாக்கில் மீதம் இருக்கும் ஒரு மாவட்டத்தில் பௌத்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது.

2006ம் ஆண்டு 8 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. தற்போது 17 மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 10 மாவட்டங்கள் காஷ்மீரிலும், ஜம்முவில் 6 மாவட்டங்களிலும், லடாக்கில் ஒரு மாவட்டத்திலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை உள்ளது. ஜம்மு பகுதியில் நான்கு மாவட்டங்களில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பௌத்த மதத்தினர் லெஹ் மாவட்டத்தில் அதிகம் உள்ளனர்.

காஷ்மீரின் பெரும்பாலான மாவட்டங்களில், 2001 உடன் ஒப்பிடும்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. ஜம்மு மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களுக்கும் இதே நிலைதான்.

ஜம்மு காஷ்மீருக்கு புலம் பெயர்ந்தவர்களின் மக்கள் தொகை எவ்வளவு?

1.25 கோடியில் 1.64 லட்சம் நபர்கள் மட்டுமே வேறெங்கோ பிறந்து அங்கு வசித்து வருகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவில், 4.64% மக்கள் மட்டுமே வேறெங்கோ பிறந்து அந்த மாநிலத்தில் வாழ்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment