மாநிலங்களின் அமைச்சரவைகளில் முஸ்லீம்களின் நிலை என்ன?

Muslim ministers in numbers :

By: November 26, 2020, 5:23:00 PM

கடந்த வாரம், பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட  மாநில அமைச்சரவை பொறுப்பேற்றது. பல தசாப்தங்களுக்குப் பிறகு பீகார் அமைச்சரவையில் ஒரு இஸ்லாம் அமைச்சர் இல்லாதது இதுவே முதல் முறையாகும்.

பீகார் மாநிலத்தைப் போன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் மாநிலங்கள் ஒருபுறம் இருக்க,  பொதுவாகவே இந்திய அரசியலில் இஸ்லாமிய வகுப்பினர் போதிய அளவு பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

மக்கள் தொகையில் இஸ்லாம் மக்களின் விகிதத்தை ஒப்பிடும் போது பெரும்பாலான மாநில அமைச்சரவைகளில், இஸ்லாம் மக்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக உள்ளது. இஸ்லாமியர்களின் வாய்ப்புகளை பாஜகவின் அரசியல் மூடியது என்றால், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் போதியளவு பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை.

 

நாட்டில், 80 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழும் முதல் 10 மாநிலங்களில், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 281 ஆக உள்ளது. இதில், இஸ்லாமிய அமைச்சர்களின் எண்ணிக்கை வெறும் 16 ஆக உள்ளது.  அதவாது, இந்த 10 மாநில அமைச்சரவைகளில் இஸ்லாமியர்களின் பங்கு 5.7 சதவீதம். இந்த விகிதம், 10 மாநிலங்களின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானது.

இதில், அசாம், கர்நாடகா, குஜராத், பீகார் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில்  அமைச்சரவையில் ஒரு இஸ்லாமிய மக்கள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆளும் மாநிலங்களின் அமைச்சரவையில் இஸ்லாமியரைக் கொண்ட ஒரே ஒரு மாநிலம் உத்திர பிரதேசம். அங்கு, மொஹ்சின் ராசா சிறுபான்மையினர் நலத் துறை  இணை அமைச்சராக உள்ளார்.

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, இந்த 10 மாநிலங்களில், குஜராத் மட்டுமே இஸ்லாமியர்கள் இல்லாத அமைச்சரவைக் கொண்டிருந்தது. அப்போது,  இந்த 10 மாநிலங்களில் இஸ்லாம் அமைச்சர்களின் எண்ணிக்கையும் 34 ஆக இருந்தது. (கிட்டத்தட்ட இரு மடங்கு)

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 14.2 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். ஆனால், இதில் 3.9  சதவீதம் பேர் மட்டுமே அமைச்சர்களாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 10 மாநிலங்களில், காங்கிரஸ் ஆட்சி புரியும்  ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்கண்ட்   ஆகிய மாநிலங்களில் உள்ள 38 அமைச்சரவை உறுப்பினர்களில்  3 பேர் மட்டுமே இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும், இஸ்லாம் மக்கள் தொகை குறைவாக உள்ள  பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இஸ்லாமிய அமைச்சரை காங்கிரஸ் கொண்டுள்ளது.

பாஜக ஆட்சி அமைக்காத அனைத்து பெரிய மாநிலங்களிலும், குறைந்தது ஒரு இஸ்லாமியர் அமைச்சர் பதவியில் இருக்கிறார். அதிகபட்சமாக  மேற்கு வங்கத்தில் 7 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அடுத்தப்அப்டியாக மகாராஷ்டிராவில் 4 பேரும்,  கேரளாவில் 2 பேரும் உள்ளனர்.

“எந்தவொரு உறவிலும் திருப்தி நிலைத்திருப்பதற்கு பரஸ்பரமான ஒத்துழைப்பு தேவை. நீங்கள், ஒரு கட்சியை வேண்டாம் என தூக்கி எறிந்த பின்பு, அது உங்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த பிரச்சினையில், பாஜகவை விட,  இஸ்லாமிய சமூகம் தான் அதிக சுய பரிசோதனை செய்ய வேண்டும். ”என்று பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசியத் தலைவர் ஜமால் சித்திகி கூறினார்.

இந்தியா முழுவதும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் பாஜகவில் உள்ளார்.

அசாம் மாநிலத்தின் சோனய் தொகுதியில் இருந்து   தேர்ந்தெடுக்கப்பட்ட அமீனுல் ஹக் லாஸ்கர், அம்மாநில  சட்டப்பேரவையின் துணை சபாநாயகராகவும் .  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உத்தரபிரதேச சிறுபான்மைத் துறை அமைச்சர்  மொஹ்சின் ராசா உத்திர பிரேதேச சட்டமேலவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவையிலும் மத்திய அரசிற்கு ஒரு முஸ்லிம் எம்.பியும் இல்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Muslim ministers in india muslim ministers in numbers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X