scorecardresearch

Explained: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குழந்தைகளை பாதிக்கும் ‘மர்ம’ கல்லீரல் நோய்!

மர்மமான கல்லீரல் நோயின் பாதிப்புகள்’ அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஸ்பெயின், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளன.

Explained: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குழந்தைகளை பாதிக்கும் ‘மர்ம’ கல்லீரல் நோய்!
Mystery liver disease affecting children in the US and Europe

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுகாதார அதிகாரிகள், குழந்தைகளில் கண்டறியப்பட்ட மர்மமான கல்லீரல் நோய் குறித்து விசாரித்து வருகின்றனர். இது என்ன நோய் மற்றும் அதன் சாத்தியமான காரணங்கள் என்ன என்பது இங்கே!

மர்ம கல்லீரல் நோயின் பாதிப்புகள் எந்தெந்த இடங்களில் பதிவாகியுள்ளன?

மர்மமான கல்லீரல் நோயின் பாதிப்புகள்’ அமெரிக்கா, இங்கிலாந்து  உட்பட ஸ்பெயின், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளன. ஆனால் இதுவரை, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

ஏப்ரல் 6 ஆம் தேதி, இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA), ஜனவரி 2022 முதல்’ 74  குழந்தைகளில் ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) பாதிப்புகள் பற்றி மருத்துவர்களும். விஞ்ஞானிகளும் ஆராய்ந்து வருவதாகக் கூறியது. அனைத்து ஹெபடைடிஸ் வைரஸ்களும் (A, B, C, D மற்றும் E) இந்த நோய்க்கான காரணங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த நிகழ்வுகளில் சிலவற்றில் அடினோவைரஸ்கள் மற்றும் SARS-CoV-2 கண்டறியப்பட்டதாக அது மேலும் கூறியது.

அமெரிக்காவில், அலபாமா மாகாணத்தில் அக்டோபர் 2021 முதல் 1-6 வயதுக்குட்பட்ட ஒன்பது குழந்தைகளிடையே இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த குழந்தைகளில் சிலருக்கு சிறப்பு பிரிவுகளுக்கு மாற்றப்பட வேண்டிய தேவையும், ஆறு பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சில நோயாளிகள் SARS-CoV-2 /அல்லது அடினோவைரஸுக்கு’ பாசிட்டிவாக சோதிக்கப்பட்டாலும், வைரஸ்களின் மரபணு குணாதிசயங்கள் நிகழ்வுகளுக்கு இடையில் ஏதேனும் சாத்தியமான தொடர்புகளைத் தீர்மானிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.

மர்ம நோய்க்கான சாத்தியமான காரணம் என்ன?

இந்த நிகழ்வுகளில், தொற்று ஏற்படுத்தும் வழக்கமான ஹெபடைடிஸ் (ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ)  வைரஸ்கள் கண்டறியப்படவில்லை. அந்த நேரத்தில் மர்மமான நோய்க்கான சாத்தியமான காரணங்களில் ஒன்று அடினோவைரஸ்கள் எனப்படும் வைரஸ்களின் குழுவாக இருக்கலாம், இது ஜலதோஷம் போன்ற பொதுவான சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது என்று இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியது.

அடினோவைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் எந்த பெரிய சிக்கல்களும் இல்லாமல் நோயிலிருந்து மீண்டு வருகிறார்கள். இருப்பினும், அரிதாக, ஹெபடைடிஸ் என்பது வைரஸால் ஏற்படும் ஒரு அரிய சிக்கலாக இருக்கலாம். அசுத்தமான மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலமும், சுவாசப் பாதை வழியாகவும் அடினோவைரஸ்கள் மனிதனுக்கு மனிதனுக்குப் பரவுவது சாத்தியமாகும்.

கல்லீரலை பாதிக்கும் ஹெபடைடிஸ், பல காரணங்களால் ஏற்படலாம் மற்றும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தானது.

கருமையான சிறுநீர், வெளிர் மற்றும் சாம்பல் நிற மலம், தோல் அரிப்பு, மஞ்சள் நிற கண்கள் மற்றும் தோல், அதிக உடல் வெப்பநிலை, தசை மற்றும் மூட்டு வலி மற்றும் பசியின்மை ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

அலபாமாவின் சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகள்’ இரைப்பை குடல் நோய் மற்றும் கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு அளவிலான கல்லீரல் பாதிப்பு அறிகுறிகளுடன் தங்களை வெளிப்படுத்தியதாகக் கூறியது. அவர்களின் பகுப்பாய்வுகளின்படி, அடினோவைரஸ் 41 உடன்’ ஹெபடைடிஸ் தொடர்பு இருக்கலாம்.

ஹெபடைடிஸ் ஒரு அடினோவைரஸால் ஏற்படுகிறது என்ற கோட்பாட்டை அறிவியல் இதழ் அங்கீகரித்துள்ளது, ஏனெனில் இங்கிலாந்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பாதி பேர் அதற்கு நேர்மறை சோதனை செய்துள்ளனர்.

“ஆனால் இதுவரை, மர்மத்தைத் தீர்க்க முடியாத அளவுக்கு ஆதாரங்கள் மிக மெல்லியதாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்,” என்று பத்திரிகை அறிக்கை தெரிவித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Mystery liver disease affecting children in the us and europe what the disease is all about