குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நிகழ்ந்த சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகள் குறித்து நானாவதி கமிஷன் விசாரணை மேற்கொண்டது. அதன் இறுதி அறிக்கை குஜராத் சட்டசபையில் டிசம்பர் 11ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த விவகாரத்தில் குஜராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா, விஷ்வ இந்து பரிஷத், போலீசார் உள்ளிட்டோர் மீது எவ்வித குற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா – அமித்ஷா தாக்கல்
நானாவதி கமிஷன் என்றால் என்ன?
2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் ஸ்டேசன் அருகே சமர்பதி எக்ஸ்பிரஸ் ரயில் மர்மநபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 59 கரசேவகர்கள் சம்பவ இடத்திலேயே உயிர்கருகி பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், நீதிபதி கே ஜி ஷா தலைமையில், ஒரு நபர் கமிசன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 2008ம் ஆண்டு நீதிபதி ஷா மரணமடைந்த நிலையில், நீதிபதி நானாவதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி ஷா இருந்த இடத்தில் நீதிபதி அக்ஷய் மேத்தா நியமிக்கப்பட்டார். ஆமதாபாத்தின் நரோடா பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளின் காரணகர்த்தாவாக இருந்த பாபு பஜ்ரங்கியை, நீதிபதி அக்ஷய் மேத்தா, தனது விசாரணையின் போது ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!
சபர்மதி ரயில் எரிப்பு மற்றும் அதனை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைகளில் சிக்கி கிட்டத்தட்ட 1,200 பேர் பலியாயினர். ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் பலபகுதிகளில் வன்முறைகள் நிகழ்ந்தபோது அதை தடுக்க மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. ரயில் எரிப்பு திட்டமிட்ட சம்பவமாக இருந்தபோதிலும், உளவுத்துறை அதை ஏன் தடுக்க முயலவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நானாவதி கமிஷன் பரிந்துரைகளை வழங்கியிருந்தது.
குஜராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, மற்ற அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள், இந்த நிகழ்வுடன் தொடர்புடையவர்கள், அமைப்புகள் உள்ளிட்டவைகளை விசாரணை செய்யும் அதிகாரம் 2004ம் ஆண்டு நானாவதி கமிஷனுக்கு வழங்கப்பட்டது. 24 குழுக்களாக விசாரணை மேற்கொண்ட இந்த கமிஷன், 2014ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஆனந்திபென் படேலிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.
விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் ஏன்?
2014ம் ஆண்டில் நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து ஆனந்திபென் படேல், குஜராத் முதல்வராக பதவியேற்றார். அவரிடம் இறுதி விசாரணை அறி்க்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆனபோதும், அதில் உள்ள ஒவ்வொரு அம்சங்களையும் தீவிரமாகவும் துல்லியமாகவும் ஆராய்ந்து மக்களிடையே தெளிவான அறிக்கையை அளிக்க திட்டமிட்டதால் தான் இந்த 5 ஆண்டுகள் அவகாசம் தேவைப்பட்டது.
நானாவதி கமிஷன் முன்பு சாட்சியாக ஆஜராகியிருந்த முன்னாள் டிஜிபி ஆர் பி ஸ்ரீகுமார், இந்த விசாரணை அறிக்கையை, வரும் சட்டசபை கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்ய வேண்டுமென்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி, இந்த சட்டசபை கூட்டத்தொடரில் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை இணையமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
விசாரணை இறுதி அறிக்கை என்றால் என்ன?
விசாரணையின் முதல் அறிக்கையில், ரயில் பெட்டிகள் எரிப்பு தொடர்பான மிகக்குறைந்த விஷயங்களே இருந்தன. இந்த அறிக்கை, 2008ம் ஆண்டு குஜராத் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மோடி , அமைச்சர்கள், போலிஸ் அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்று சான்று அளிக்கப்பட்டிருந்தது. கரசேவகர்கள் அந்த ரயிலில் போவது தெரிந்ததால் திட்டமிட்டு ரயில் கொளுத்தப்பட்டதாக அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விசாரணை இறுதி அறிக்கையில் என்ன இருந்தது?
விசாரணை இறுதி அறிக்கை, 9 பாகங்களாக மொத்தம் 2500 பக்கங்களை கொண்டிருந்தது. இதிலும் மோடி உள்ளிட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மோடி உள்ளிட்டோர்கள் மீது குற்றம் சுமத்தியிருந்த முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார், ராகுல் சர்மா, சஞ்சீவ் பட் உள்ளிட்டோரும், அதேபோன்று முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தியிருந்த காலஞ்சென்ற ஹரேன் பாண்ட்யா, அசோக் பட் மற்றும் பாரத் பரோட்டின் குற்றச்சாட்டுகளை நானாவதி கமிஷன் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போலிஸ் உயர் அதிகாரிகள் மூவர் மற்றும் உள்துறை இணையமைச்சர் கோர்தன் ஜடாபியா உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்டஙகுற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று நானாவதி கமிஷன் தெரிவித்தது.
இந்த விசாரணை அறிக்கையில், தெற்கு, வடக்கு , மத்திய குஜராத், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
வதோதரா பகுதியில் நிகழ்ந்த வன்முறைகள் குறித்து ஒரு பாகமும், ஆமதாபாத் மாவட்டம் மற்றும் நகரப்பகுதிகளுக்கென இரண்டு பாகங்களும், அதிக உயிர்ப்பலிகள் நிகழ்ந்த பெஸ்ட் பேக்கரி, நரோடா பாடியா, நரோடா காம், குல்பெர்க் சொசைட்டி உள்ளிட்ட 9 வழக்குகள், உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
விசாரணையில் தெரியவந்தது என்ன?
ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாகவே அந்த வன்முறைகள் நடைபெற்றன. இந்த வன்முறைகளின் பின்னணியில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. என்ஜிஓக்கள் , டீஸ்டா செடல்வாட், ஜன் சசங்ஹார்ஷ் மஞ்ச், உள்ளிட்ட அமைப்புகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மோடி உள்ளிட்டோர் குற்றமற்றோர் என்பது தீர்மானிக்கப்பட்டது.
விசாரணையில் மோடி குறித்து என்ன தெரிவிக்கப்பட்டிருந்தது?
2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 27 மற்றும் 28ம் தேதிகளில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு முதல்வர் மோடி ஆலோசனைகளை நடத்தியுள்ளார். மாநிலம் எங்கும் வன்முறை பரவியநிலையில் அதை தடுக்கும் நடவடிக்கைகளை மோடி துரிதமாக முடுக்கிவிட்டார். பாதிப்பு அதிகமான பகுதிகளில் ராணுவம், துணை ராணுவம் உள்ளிட்டவைகளின் உதவியுடன் வன்முறையை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
நானாவதி கமிஷனின் முக்கிய பரிந்துரைகள்
ஊடகங்கள் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் குறித்த செய்திகளை வெளியிடும்போது மத உணர்வுகளை தூண்டும்வகையில் இருக்ககூடாது. இந்த ரயில் எரிப்பு செய்தியையே பல ஊடகங்கள் மத வன்முறை என்று தலைப்பிட்டு வழங்கி வந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதன்மூலம், இந்து மற்றும் முஸ்லீம் மக்களிடையே நிரந்தர பகையுணர்வு உருவாவதற்கு காரணமாக அமைந்து விடும். ஊடகங்கள் இதுபோன்ற ஊடக நெறிகளுக்கு எதிரான நடத்தைகளை கைவிடவேண்டும். வேறுபாடுகளை கடந்து அனைவரும் சமம் என்ற நிலையை மக்களிடம் ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும். ஊடகங்கள் இதுபோன்று மதவேற்றுமையை தொடர்ந்து ஊக்குவித்து வந்தால், அது முஸ்லீம் மக்கள் மீது தாக்குதலை நடத்த உதவி புரிவதோடு மட்டுமல்லாது அவர்கள் நேரடியாக பாதிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.