போதை மருந்துகள் மற்றும் மனப் பிறழ்வை ஏற்படுத்தும் பொருள்கள் (திருத்தம்) மசோதா, 2021 திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.
என்ன திருத்தம் செய்யப்பட்டது?
2021ம் ஆண்டு மசோதா 1985ம் ஆண்டின் போதை மருந்துகள் மற்றும் மனப்பிறழ்வை ஏற்படுத்தும் பொருள்கள் சட்டத்தை திருத்துகிறது. இந்த மசோதாவில் 2014ம் ஆன்டு திருத்தத்தால் உருவாக்கப்பட்ட முரண்பாட்டை சரிசெய்ய முயற்சிக்கிகிறது.
2021ம் ஆண்டு திருத்தம் ஒரு பிரிவு எதைக் குறிக்கிறது என்பது பற்றிய சட்டப் பிரகடனத்தைக் கொண்டுள்ளது. பிரிவு 2 உட்பிரிவு (viiia) பிரிவு 27-ல் உள்ள உட்பிரிவு (viiib)க்கு ஒத்ததாக 2014-ம் ஆண்டில் இருந்து இந்த ஏற்பாடு கொண்டுவரப்பட்டது என்று இந்த திருத்தம் கூறுகிறது.
போதை மருந்துகள் மற்றும் மனப்பிறழ்வை ஏற்படுத்தும் பொருள்கள் (NDPS) சட்டம் 1985-ன் பிரிவு 27A, சட்டவிரோத போக்குவரத்திற்கு நிதியளிப்பதற்கும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும் தண்டனையை பரிந்துரைக்கிறது.
2013ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் என்ன?
2014 ஆம் ஆண்டில், NDPS சட்டத்தில் கணிசமான அளவு திருத்தம் செய்யப்பட்டது. இது போதை மருந்துகளுக்கு சிறந்த மருத்துவ அணுகலை அனுமதித்தது. பிரிவு 2(viii)a -ல், வரையறுக்கப்பட்ட திருத்தம் ‘அத்தியாவசிய மருந்துகள்’ என்று வரையறுக்கப்பட்டுள்ளது; பிரிவு 9 இன் கீழ், அத்தியாவசிய போதை மருந்துகளின் உற்பத்தி, உடைமை, போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான இறக்குமதி, மாநிலங்களுக்கு இடையே ஏற்றுமதி, விற்பனை, கொள்முதல், நுகர்வு மற்றும் பயன்பாடு ஆகியவற்றை அனுமதித்தது.
ஆனால், 2014 சட்டத் திருத்தத்திற்கு முன், ஏற்கெனவே இருந்த பிரிவு 2(viii)a மற்றும் 27A பிரிவு தண்டனை விதிக்கப்படும் குற்றங்களின் பட்டியலைக் கொண்டுள்ளது.
பிரிவு 27A கூறுவதாவது: “பிரிவு 2 இன் உட்பிரிவுகள் (i) முதல் (v) (viiia) -ன் உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதியளிப்பதில் ஈடுபடுபவர் அல்லது மேற்கூறிய செயல்களில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும், பத்து ஆண்டுகளுக்குக் குறையாத, ஆனால் இருபது ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய கடுமையான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாமல், இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
“தீர்ப்பில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக நீதிமன்றம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கலாம்.”
சட்ட வரைவில் இருந்த முரண்பாடு
2014-ல் அத்தியாவசிய மருந்துகளை வரையறுக்கும்போது, இந்த சட்டம் பிரிவு 2-ஐ மீண்டும் சேர்த்தது.
பிரிவு 2(viii)a-ன் கீழ் முதலில் பட்டியலிடப்பட்ட குற்றங்களின் பட்டியல், இப்போது பிரிவு 2(viii)b-ன் கீழ் உள்ளது. இந்த திருத்தத்தில், பிரிவு 2(viii)a அத்தியாவசிய போதை மருந்துகளை வரையறுக்கிறது. இருப்பினும், பிரிவு 2(viii)a பிரிவு 2(viii)b-க்கு மாற்றுவதற்கு பிரிவு 27A-ல் உள்ள விதியை திருத்துவதை சட்டம் இயற்றியவர்கள் தவறவிட்டனர்.
சட்ட வரைவு பிழையின் விளைவு என்ன?
பிரிவு 27Aன் கீழ் தண்டனை வழங்கப்படும் குற்றங்கள் பிரிவு 2(viiia) துணைப்பிரிவுகள் i-v-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், குற்றங்களின் பட்டியலாக இருந்த பிரிவு 2 (viiia) துணை உட்பிரிவுகள் i-v, 2014 திருத்தத்திற்குப் பிறகு இல்லை. இது இப்போது பிரிவு 2 (viiib)-ல் இருக்கிறது.
2014 ஆம் ஆண்டு முதல் இருந்த இந்த பிழை காரணமாக பிரிவு 27A செயல்படாமல் இருந்தது.
இந்த பிழை எப்போது கவனிக்கப்பட்டது?
மேற்கு அகர்தலாவில் உள்ள ஒரு மாவட்ட நீதிபதி இந்த பிழையை கவனித்தார். இந்த ஆண்டு ஜூன் மாதம், திரிபுரா உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தின் குறிப்பைக் கேட்டபோது, சட்ட வரைவு பிழையை சுட்டிக்காட்டி திருத்தம் கொண்டு வந்து அதை சரிசெய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியது.
2016 ஆம் ஆண்டில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அகர்தலாவில் மேற்கு திரிபுராவில் உள்ள சிறப்பு நீதிபதி முன் ஜாமீன் கோரி, சட்ட வரைவில் விடுபட்டதைக் காரணம் காட்டினார். குற்றம் சாட்டப்பட்டவரின் வேண்டுகோள் என்னவென்றால், பிரிவு 27Aன் வெற்றுப் பட்டியலின் கீழ் தண்டித்ததால், அவர் மீது குற்றத்தின் கீழ் குற்றம் சாட்ட முடியாது. மாவட்ட நீதிபதி, இந்த சட்டப்பூர்வ கேள்வியை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பினார்.
இந்த சட்ட வரைவு பிழையானது ஜாமீன் பெறுவதற்கான அடிப்படையாக இருக்க முடியாது என்றும் அதை கவனிக்க வேண்டும் என்று என்றும் அரசாங்கம் வாதிட்டது. உயர்நீதிமன்றம் அரசாங்கத்துடன் உடன்பட்டு, அந்த விதியை அரசாங்கம் விரும்பிய விதத்தில் புரிந்துகொண்டாலும் அது வரைவு செய்யப்பட்ட விதத்தில் இல்லை. ஆனால், இந்த சட்டத்தை முன் தேதியிட்டு பயன்படுத்த முடியாது என்றும் அது கூறியது.
இந்த பிரிவை முன் தேதியிட்டு பயன்படுத்த முடியாது ஏன்?
அரசியலமைப்பின் பிரிவு 20(1) கூறுகையில், எந்த குற்றத்தின் கீழும் குற்றம் செய்ததை உறுதிப்படுத்தப்படாதவர்கள் குற்றம் சாட்டப்பட்ட செயலின் போது நடைமுறையில் உள்ள சட்டத்தை மீறியதற்காகத் தவிர, எந்தவொரு நபரும் எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட மாட்டார்கள் அல்லது குற்றம் செய்த நேரத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனையை விட அதிகமான தண்டனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்று கூறுகிறது. இந்த பாதுகாப்பு என்பது சட்டத்தின் கீழ் "குற்றம்" இல்லாத ஒரு குற்றத்திற்காக ஒரு நபர் மீது வழக்குத் தொடர முடியாது என்பதாகும்.
சமீபத்திய சட்டத் திருத்தம் அதை முன்தேதியிட்டு பயன்படுத்த செய்கிறதா?
இந்த சட்ட வரைவு பிழையை சரிசெய்ய செப்டம்பரில் அரசாங்கம் ஒரு அவசரச் சட்டத்தை மக்களவையில் கொண்டுவந்தது. “இந்த சட்டம் மே 1, 2014 அன்று நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும்” என்று அந்த மசோதா கூறுகிறது.
மக்களவையில் விவாதத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தெளிவுபடுத்தும் திருத்தங்களில்" முன் தேதியிட்டு விண்ணப்பம் அனுமதிக்கப்படுகிறது என்றார். “இது உண்மை இல்லை, அதனால்தான், முன் தேதியிட்டு அனுமதிக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.
இந்த சட்டத்திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவின் கருத்தை அரசாங்கம் கேட்டிருப்பதாக அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் கூறியது என்ன?
“இந்த குற்றவியல் சட்டத்தில் ஒரு கணிசமான தண்டனை விதியை ஒரு சட்டமன்ற அறிவிப்பின் மூலம் முன் தேதியிட்டு செயல்படுத்த முடியுமா? இது மசோதாவில் குறிப்பிடப்படாத ஒன்று” என்று காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி இந்த மசோதா மீதான விவாதத்தில் கூறினார்.
பிஜேடி தலைவர் பி மஹ்தாப் கூறுகையில், இந்த சட்டத்திருத்தத்தின் பிற்போக்கான தன்மை நீதிமன்றத்தில் எதிர்க்கப்படும். “அது தவறு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அதை ஏன் முன்தேதியிட்டு பயன்படுத்துவதன் மூலம் இன்னொரு தவறைச் செய்கிறீர்கள்?… தண்டனை விதிகளை எப்படிப் முன்தேதியிட்டு நிறைவேற்ற முடியும்? இது மேலும் அரசியலமைப்பு கேள்விகளுக்கு வழிவகுக்கும்?” என்று அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.