புது டெல்லியை வாஷிங்டன் ராஜதந்திர ரீதியாக அரவணைக்கும் இருதரப்பு முயற்சிகள் மற்றும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகிய இரண்டிற்கும் கடன்பட்டுள்ளது. சில வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இறுதியில், பரஸ்பர நலன்கள் மற்ற கவலைகளைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
செப்டம்பர் 2008 இல், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அணுசக்தி வழங்குநர்கள் குழு (என்.எஸ்.ஜி) விலக்கு அளித்த பிறகு, பிரதமர் மன்மோகன் சிங், “இந்தியாவின் பல பத்தாண்டுகளாக அணுசக்தி மைய நீரோட்டத்திலிருந்தும் தொழில்நுட்ப மறுப்பு கட்டுப்பாட்டில் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டதன் முடிவை இது குறிக்கிறது” என்றார்.
ஜூன் 2016-ல், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நடாளுமன்றமான காங்கிரஸில், இந்தியாவும் அமெரிக்காவும் வரலாற்றின் தயக்கங்களை சமாளித்துவிட்டதாகவும், எப்போதும் வலுவான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளுக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்நுட்ப மறுப்பு கட்டுப்பாடு முடிவு மற்றும் வரலாற்றின் தயக்கங்களை சமாளித்து, மே 2022-ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரதமர் மோடியும் அறிவித்த முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சியாக (iCET) வளர்ந்தது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களான அஜித் தோவல் மற்றும் ஜேக் சல்லிவன் தலைமையில், இந்த முயற்சி ஜனவரி 2023 இல் தொடங்கியது - சல்லிவன் இந்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்தார். பாதுகாப்பு, விண்வெளி, மின்னணு பொருட்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற முக்கியமான துறைகளில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய தொழில்நுட்பங்களை இந்த முயற்சி எதிர்பார்க்கிறது.
மோடி தனது முதல் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும்போது - அவர் பிரதமராக ஏழு முறை அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார் - நம்பகமான புவிசார் நாடுகள் இடையே முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சி இந்த உரையாடலின் முக்கிய அங்கமாக இருக்கும்.
அமெரிக்க அதிபர்களும் இந்திய பிரதமர்களும்
பிரதமரின் வருகை, காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் அவர் இரண்டாவது முறையாக உரையாற்றுகிறார். இது பல ஆண்டுகளாக பல பங்குதாரர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் உச்சக்கட்டமாகும். இருதரப்பு உறவு தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை, அமெரிக்காவின் உத்தி மற்றும் பொருளாதார கவலைகள், இந்தியாவின் அரசியல் மற்றும் ராஜதந்திர நிலைப்பாடு மற்றும் இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு முன்னால் உள்ள பல சவால்களை முறியடித்த நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான மெதுவான செயல்முறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உலகளாவிய எதிர்ப்பை எதிர்கொண்டார். ஆனால், அவர் அதிபர் பில் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினார். “எங்கள் எல்லையில் ஒரு வெளிப்படையான அணு ஆயுத அரசு உள்ளது. இது 1962-ல் இந்தியாவுக்கு எதிராக ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை நடத்திய அரசு” என்று வாஜ்பாய் கூறினார். “அந்த நாட்டுடனான எங்கள் உறவுகள் மேம்பட்டிருந்தாலும்… தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சனையின் காரணமாக அவநம்பிக்கையின் சூழல் நீடிக்கிறது.” என்று கூறினார்.
“அணுசக்தி சோதனைகள்… அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடனான இந்தியாவின் உறவை சற்றே பின்னுக்குத் தள்ளியிருக்கலாம், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், அது பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்றும் முக்கிய உறவாக படிகமாக மாறத் தொடங்கியது” என்று முன்னாள் வெளியுறவுச் செயலர் ஷியாம் சரண் அவரது ‘இந்தியா எப்படி உலகைப் பார்க்கிறது’ என்ற புத்தகத்தில் எழுதினார்.
ஜஸ்வந்த் சிங்-ஸ்ட்ரோப் டால்போட் பேச்சுவார்த்தைகள் மார்ச் 2000-ல் அதிபர் கிளிண்டனின் வருகைக்கு வழிவகுத்தது, அதன் பின் வந்த ஆண்டுகளில், இந்த உறவு வலுப்பெற்று முதிர்ச்சியடைந்தது. ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஆண்டுகளில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. இது உறவுகளை உயர்ந்த உத்தி பாதைக்கு உயர்த்தியது. அதிபர் புஷ் மற்றும் சீனா அதிபர் ஹூ ஜின்டாவோ ஆகியோருக்கு இடையேயான தொலைபேசி அழைப்பு உட்பட அனைத்து நெம்புகோல்களையும் அமெரிக்கா இழுத்தது - வாஷிங்டனின் புது டெல்லியின் உத்தி அரவணைப்புக்கு சான்றாகும்.
ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் பதவிக்காலத்தின் கடைசி மாதங்களில், உலகளாவிய நிதி நெருக்கடி தாக்கியது. அதன்பிறகு மும்பை மீதான 26/11 பயங்கரவாதத் தாக்குதல்கள் விரைவில் நடந்தன.
இரண்டு முறை இந்தியாவிற்கு வருகை தந்த ஒரே அதிபரான பராக் ஒபாமாவின் கீழ் உறவுகள் தொடர்ந்தன. மேலும், அவர் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மோடி இருவருக்கும் வெள்ளை மாளிகையில் விருந்து அளிதார். டொனால்ட் டிரம்பின் கணிக்க முடியாத நிலை இருந்தபோதிலும், அவர் அதிபராக இருந்தபோது உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்றன.
குவாட் கட்டமைப்பு புத்துயிர் பெற்றது மற்றும் அடித்தள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பு உறவு பலப்படுத்தப்பட்டது. கோவிட் -19 தொற்றுநோய் உலகின் பெரும்பகுதியை முடக்குவதற்கு முன்பு டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்தார்.
குறிப்பாக இந்தோ-பசிபிக் ராஜதந்திர உத்தியில் அதிபர் ஜோ பைடனின் கீழ் உறவுகளின் இசைவை தக்கவைத்துள்ளன. ஆனால், இந்தியா தனது இரண்டு எல்லைகளில் சவால்களை எதிர்கொண்ட நேரத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து குழப்பமான அமெரிக்கா வெளியேறுவது புது டெல்லியை பாதிப்படையச் செய்தது.
ஒரு சிறப்பான நட்பு
“அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு, சுதந்திரம் பெற்றதில் இருந்து நாடு கொண்டிருக்கும் மிக விரிவான கூட்டமைப்பாகும்… இது உண்மையிலேயே நெருக்கடியில் உருவான உறவு” என்று கார்னகி இந்தியாவின் தலைவரான ருத்ரா சௌத்ரி, ‘நெருக்கடியில் உருவானது: 1947 முதல் இந்தியாவும் அமெரிக்காவும்’ (Forged in Crisis: India and the US since 1947) என்ற தனது புத்தகத்தில் எழுதினார்.
மே 2022 இல் நடந்த ஐடியா எக்ஸ்சேஞ்ச் நிகழ்ச்சியில் ஷியாம் சரண் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்: “கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்க உறவுகள் பெற்றிருக்கும் ஆழமும் அகலமும் எனக்கு மிகவும் ஆச்சரியமான வளர்ச்சியாகும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் அத்தகைய வலுவான எதிர்ப்பு ராணுவம் - ராணுவ உறவு, ஒரு வலுவான பயங்கரவாத எதிர்ப்பு உறவைப் பெறுவோம் என்று 2005-ல் நீங்கள் என்னிடம் சொன்னால், அது ஒரு யதார்த்தமற்ற வாய்ப்பு என்று நான் கூறியிருப்பேன். ஆனால், அது நடந்துவிட்டது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மூன்று அடிப்படை ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதை எதிர்த்த நபர்களில் நானும் ஒருவனாக இருந்திருப்பேன். ஆனால், நாம் எதிர்கொள்ளும் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களின் அடிப்படையில், இந்த உறவு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று ஒரு அங்கீகாரம் உள்ளது. நான் அதை ஒப்புக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
இரு ராணுவத்தினருக்கும் இடையே மேம்பட்ட தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சட்ட கட்டமைப்பை வழங்குவதற்காக கையெழுத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களை சரண் குறிப்பிடுகிறார். இவை லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம் ஆஃப் ஒப்பந்தம் (LEMOA, 2016); தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA, 2018); மற்றும் அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA, 2020).
LEMOA இரண்டு இராணுவத்தினரும் ஒருவருக்கொருவர் தளங்களில் பொருட்கள், உதிரி பாகங்கள் மற்றும் சேவைகளை அணுக அனுமதிக்கிறது. COMCASA ஆனது, இந்தியா மற்றும் அமெரிக்க இராணுவத் தளபதிகள், விமானம் மற்றும் கப்பல்கள் அமைதி மற்றும் போரின் போது பாதுகாப்பான நெட்வொர்க்குகள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் வகையில், அதன் ரகசிய தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் அமைப்புகளை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்காவை அனுமதிக்கிறது. மேலும் BECA இந்தியாவை அமெரிக்க புவிசார் நுண்ணறிவைப் பயன்படுத்தவும், தானியங்கி அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள் மற்றும் ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் போன்ற ஆயுதங்களின் துல்லியத்தை அதிகரிக்கவும் அனுமதித்தது.
மற்ற பாதுகாப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன: தொழில்துறை பாதுகாப்பு ஒப்பந்தம் (ISA, 2019), மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு நோகத்துக்கான ஒப்பந்தம் (2018). கடந்த மாதம் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஜே ஆஸ்டின் வருகையின் போது முடிவடைந்த இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு திட்ட வரைபடம், பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் இணை உற்பத்தியையும் துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி வருகையின் போது இது குறித்து அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவும் சீனாவும்
GE414 இன்ஜின் ஒப்பந்தத்தில் சுமார் 11 முக்கியமான தொழில்நுட்பங்களை மாற்றுவதை கருத்தில் கொள்ள இரு நாடுகளுக்கும் போதுமான ராஜதந்திர உத்தி நம்பிக்கை காலப்போக்கில் கட்டமைக்கப்பட்டாலும், ரஷ்யாவை நோக்கிய அவர்களின் மாறுபட்ட அணுகுமுறைகளில் சவால்கள் உள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உறவுகளின் நீடித்த தன்மையை முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதித்துள்ளது.
கடந்த 16 மாதங்களாக, ரஷ்யாவின் நடவடிக்கைகளை இந்தியா விமர்சிக்கவில்லை - ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அதன் நட்பு நாடுகளின் அசௌகரியம் அதிக அளவில் உள்ளது. ஆகவே, கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் “இன்றைய சகாப்தம் போர் அல்ல” என்று கூறியபோது, அமெரிக்கா மகிழ்ச்சியடைந்தது - இந்த உருவாக்கம் மற்றும் அதை பொதுவில் வெளிப்படுத்தியது.
அதே நேரத்தில், ரஷ்யாவுடனான இந்தியாவின் சிக்கலான உறவுகளுக்கு வாஷிங்டன் ஒரு புரிதலைக் காட்டியுள்ளது - அது 60% க்கும் அதிகமான ரஷ்ய பாதுகாப்பு விநியோகங்களைச் சார்ந்துள்ளது. ரஷ்ய எண்ணெயை மலிவான விலையில் வாங்குகிறது.
இரு நாடுகளும் பெய்ஜிங்கை மிகப்பெரிய அச்சுறுத்தல் மற்றும் போட்டியாக ஒப்புக்கொள்கின்றன. புதுடெல்லி இந்த சவாலை வெகு தொலைவில் இருந்து பார்த்தது. ஆனால், ஒபாமா பிவோட் என்ற கருத்தைப் பற்றி பேசத் தொடங்கும் வரை அமெரிக்க நிர்வாகம் எச்சரிக்கை சமிஞைகளை புறக்கணித்தது. ஆனால், ட்ரம்பின் கீழ் தான் அமெரிக்கா சீனாவை ஒரு மூலோபாய அச்சுறுத்தல் என்று சந்தேகத்திற்கு இடமின்றி அடையாளம் காட்டியது. அதிபர் ஜோ பைடனின் கீழ் இந்த கட்டமைப்பு தொடர்ந்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதன் மூலம், இப்பகுதியில் பெய்ஜிங்கின் பங்கு உயர்ந்துள்ளது. சவுதி மற்றும் ஈரானியர்கள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதில் சீனாவின் முயற்சிகளுக்குப் பின்னால் உள்ள லட்சியமும் நம்பிக்கையும் வாஷிங்டன் மற்றும் புது டெல்லியில் கவனிக்கப்பட்டது.
ரஷ்யாவும் சீனாவும் வரம்பற்ற உறவுகளை அறிவித்துள்ள நிலையில், இந்தியாவும் அமெரிக்காவும் அணுகுமுறையில் அதிக ஒருங்கிணைப்புக்கான காரணங்களைக் கண்டறிந்துள்ளன: குவாட் குழு மற்றும் I2U2 வடிவங்கள் அவற்றின் பிரதிபலிப்புகளாகும்.
விளைவு
வேறுபாடுகள் உள்ளன - ஜனநாயகவாதிகள் மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி எப்போதும் குரல் கொடுத்து வருகின்றனர், அதே நேரத்தில் புது டெல்லி "இந்தியாவின் உள் விவகாரங்களில்" தலையிடுவதற்கு எதிராக பின்னுக்குத் தள்ளப்பட்டது.
ஆனால் இறுதியில், ஆர்வங்கள் மற்ற கவலைகளை துரத்துகின்றன - மேலும் புது டெல்லி அதை அறிந்திருக்கிறது. இந்தியா தன்னை ஒரு சக ஜனநாயக நாடாகவும், சீனாவிற்கு எதிரான ராஜதந்திர உத்தி எதிர்விளைவாகவும் நிலைநிறுத்தியுள்ளது.
எனவே, மோடிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ள நிலையில் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் அந்நாட்டின் பெண்மணியான ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் ஆகியோரால் நடத்தப்படும் அரசு விருந்துடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இணைந்து வழங்கும் மதிய உணவு, அமெரிக்க காங்கிரஸ் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவேற்பு - வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா கூறுகையில், “இரு நாடுகளுக்கு இடையேயான நமது உறவில் இது ஒரு மைல்கல்… இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருகை, மிக முக்கியமான பயணம், அமெரிக்காவில் உண்மையான மற்றும் பரவலான ஆழமான ஆர்வம் உள்ள பயணம்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.